ராமசாமி கோவில் கும்பகோணம்

 ராமசாமி கோவில் கும்பகோணம் (24.1.2026)

அமைவிடம்

கும்பகோணம் பெரிய கடைவீதியில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. கும்பேஸ்வரர்,  சாரங்கபாணி, சோமேஸ்வர் கோவில் அருகில் அமைந்துள்ளது.

கோவில் காலம்

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால், கட்டப்பட்டது.

கோவில் சிறப்பு

தென் அயோத்தி என்று இந்த ஷேத்ரம் அழைக்கப்படுகிறது. 

ராமர் பட்டாபிஷேக கோலமே சிலைவடிவில் கருவரையில் உள்ளது, மிக சிறப்பான காட்சியாக உள்ளது. ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பரதன் குடைபிடிக்க சத்ருக்கினன் சாமரம் வீசுகிறார். இலக்குவன் கோதண்டத்தை தாங்கியவண்ணம் காட்சி;தருகிறார். ஆஞ்சநேயர் கையில் தம்புராவுடன் அமர்ந்த நிலையில் ராமகாதயை பாடுவதுபோல் அமர்ந்திருக்கிறார். அனைத்து சிற்பங்களும் மிக கலைநயத்துடன் காட்சி தருகிறது. புகைப்படங்களை பகிர்கிறேன். கோவில,; என்ற “ பக்தி சிறப்பகூடத்திலிருப்பது” போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

கோவில் பிராகாரத்தில் ராமாயண காட்சியை ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர். ஓவியம் என்பதே உலக மொழி, யார் வேண்டுமானாலும் பார்த்து புரிந்துகொள்ளமுடியும்.   

கொடிமரம்

2025 ஆம் ஆண்டு 20 அடி உயரத்தில் தேக்கு மரத்தினால் புதிய கொடிமரம் அமைத்ததுள்ளனர்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.






















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...