பெருஞ்சேரி வாகீஸ்வரர் (தரிசனம்-29.1.2026-காலை)
அமைவிடம்
வழூவூர் வீரட்டாணம் கோவிலிருந்து 2கி.மீ. தொலைவில்லுள்ளது.
சுவாதந்தரநாயகி சமேத வாகீஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார்.
மூன்றுநிலை ராஜகோபுரம் கொண்ட கோவிலி;ன் பிராகரத்தில, சரஸ்வதி சிவனை பூஜிக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
தலபுராணம்
தடசனின் யாகத்திற்கு பார்வதிதேவி சென்ற போது தட்சனால் அவமதிக்கப்பட்டதை அறிந்த சிவபெருhன் உக்கிர வீரபத்திரராக வந்து யாகத்தில் பங்கு கொண்ட அனைவரையும், தண்டித்தார். அங்கிருந்த சரஸ்வதியும் தண்டனைக்கு உட்பட்டார். ஆவர் அவருடைய கணவர் பிரம்மனிடம் இதை கூற, பிரம்மன் சிவவழிபாடு செய்து அவரின் தண்டனைக்கு பரிகாரம் கிடைக்க உதவினார். சுரஸ்வதி சிவபெருமானை வழிபட்ட தலமேயிந்த பெருஞ்சேரி.
இத்தலத்pன் மிக அருகில் 48 ஆயிரம் ரிஷிகள் வாழ்ந்தயிடத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் கட்டியுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதிதான் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். நாங்கள் புதிதாக கட்டிய கோவில் என்பதால்யிங்கு வழிகாட்டிற்கு செல்லவில்லை. கூகிளில்; உள்ள படத்தை பகிர்கிறேன்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
![]() |
| Source from google |







No comments:
Post a Comment