பெலும் கேவ் (Belum Cave)( நாள்-25.3.2026)
அமைவிடம்
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய குகையாகும். முதல் பெரிய குகை மேகாலயாவில் அமைந்துள்ளது.
குகைபற்றிய தகவல்கள்
1884-ல் பிரிட்டீஷ் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் என்பவர் இந்த குகையை கண்டறிந்தார். 1982-84 ஜெர்மானிய குகை ஆய்வாளர். லேனியல் கெபர் தலமையில் ஆய்வு செய்யப்பட்டது. 1988 ஆம் ஆண்டு முதல் ஆந்திரமாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதல் ஆந்திரபிரதேச அரசின் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. 3.5 கி.மீ. வரை குகை ஆய்வுசெய்யப்பட்டிருப்பினும், 1.5 கி.மீ. வரை தான் சுற்றலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. 150 அடி ஆழத்தில் சிறிய அருவி உள்ளது. இது பாதளகங்கை என்று பெயரிடப்பட்டுள்ளது. குகைகுள் ஆக்சிஜன் குறைப்பாட்டிற்காக, மின் விசிறிகளும், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
இந்த குகையில் பல புத்த மற்றும் சமண துறவிகளின் பொருட்கள் கண்டறியப்பட்டு, அனந்தபூர் காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு 4500 என்ற கணக்கிட்டுள்ளனர்.
பயணஅனுபவம்.
நாங்கள் 25 ஆம் தேதி இரவு 10.50 மணி; புகைவண்டியில் பயணமுன்பதிவு செய்திருந்தோம். நந்தியால் - பெங்களுர்செல்ல. இந்த நாளைக்கு நாங்கள்; பயணமாக மூன்று இடத்தை தீர்மானித்திருந்தோம்;. 1. கந்திகோட்டா, 2.பெலும் கேவ், 3. யாகந்தி கேவ். கந்திகோட்டா அதிக தொலைவு, நேரத்திற்குள் திரும்ப முடியாது. யகாந்தி மற்றும் பெலும் இரண்டும், பங்கனப்பள்ளியிலிருந்து இருவேறு திசையில்யிருந்தது. நாங்கள் யகாந்தி கேவ் என்ற முடிவு செய்து, பங்கனப்பள்ளிக்கு நந்தியால்லிருந்து பேருந்தில் பயணம் செய்து. ஷேர் ஆட்டோவில் செல்ல , ஷேர் ஆட்டோவில் அமர்ந்துவிட்டோம். அப்பொழுது இரண்டு பெண்கள் பெங்களுரில் வேலை செய்வதாகவும், விடுமுறை நாட்களில் ஆந்திரமாநிலத்ததை சுற்று பயணம் செய்வதாகவும் கூறினார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ஆட்டோவை பிடித்து, பெலும் கேவ், யகாந்தி கேவ், அருந்ததி அரண்மணை என்று பயணம் செய்துவிட்டு, பங்கனப்பள்ளியிலிருந்து, நந்தியால் ரயில்நிலையத்தை அடைந்தோம்.






































No comments:
Post a Comment