திருமருகல் ரத்னகிரீஸ்வரர்

 திருமருகல் ரத்னகிரீஸ்வரர் (தரிசனம்-29.1.2026-மாலை) 

தலபுராணம்

குசசேது என்ற அரசன் காடாகயிருந்த இந்தயிடத்தில் மரங்களை வெட்டியபோது, வெட்டியயிடத்திலிருந்து ரத்தம் வந்தது. சிவnனின் லிங்கதிருமேனி கண்டு கோவில் கட்டினான் என்பNது இத்தல வரவாறு.

(புராணம் என்பது செவிவழிசெய்தி)

தலவரலாறு.

வணிக குலத்தை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். மதுரையை சேர்ந்த அவர்கள் இவ்வூர் வழியாக செல்லும் சமயம் இரவுயிந்த ஊரில் தங்குகின்றனர். அப்பொழுது அந்த ஆண் ஒரு பாம்பு கடித்து இறந்துவிடுகிறான். இதையறிந்து அந்த பெண் பெரும் குரலெடுத்து அழுகிறாள். அந்த சமயம் அங்கு வந்த ஞானசம்மந்தர் செய்தி கேட்டு “சடையாய் எனுமால்” என்ற பதிகத்தை சிவபெருமான் மீது பாடி வழிபட்டு இந்த வணிககுல ஆணை உயிரத்தெழசெய்கிறார். (வரலாறு என்பது ஆதாரத்துடன் சொல்லப்படுவது)

திருவிளையாடல்புராணதொடர்பு.

திருமருகலில் திருமணம் செய்து கொண்ட ஆணும் பெண்ணும் மதுரைக்கு சென்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இவர்களுக்கு நடை பெற்ற திருமணத்தை கூறுகின்றனர். இதை ஏற்க மறுத்த உறவினர்களுக்கு, சிவபெருமானே திருமணம் நடந்தயிடத்திலிருந்த கிணறு, பசுமாடு, மரம் இவைகள் ருபத்தில் வந்து சாட்சி சொல்கிறார். இந்த நிகழ்சி திருவிளையாடல் புராணத்தில் ஒன்றாக உள்ளது. (சிவபெருமானின் திருவிளையாடல் புராணம் அனைத்துமே நடைபெற்றயிடமாக மதுரைமாநகர்விளங்குகிறது)

தல சிறப்புகள்.

1. மகாலெஷ்மி அமைத்த தீர்தம். (பிருகு முனிவரால் கோபம் கொண்டு பெருமானை பிரிந்த லெஷ்மியிங்குதான் குளம் அமைத்து வழிபட்டார்.)

2. ஞானசம்மந்தர் மற்றும் நாவக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

3. தேவாரத்திருத்தலத்தில் காவிரி தென்கரையின் 80வது தலம்.

4. செங்கோட்சோழன் அமைத்த மாடக்கோவில்.

5. சீறாளன் படித்த ஊர்.

எங்கள் பயணம்

திருசெங்காட்டான்குடி, அர்சகர் திருமருகல் கோவில் திறந்திருக்கும் நீங்கள் கட்டாயம் தரிசனம்செய்யலாம் என்று உறுதியாக கூறியதால், எங்களுக்கு தரிசன பாக்யம் கிடைத்தது. திருகண்ணபுரம் வழியாகத்தான் சென்றோம். மாலை வழிபாடடிற்கான நேரம் மிககுறைவுதான். காலை 6 மணிக்கு தரிசனத்pற்கு கிளம்பினால் 5 அல்லது 6 தலங்கள் தரிசனம் செய்யலாம். மூன்று மாதம் கழித்து மீண்டும் இப்பகுதியில் யாத்ரை செல்ல முடிவுசெய்துள்ளோம். (திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம்)  

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.






  




No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...