செருகுடி சூட்சமபுரீஸ்வரர் (27.1.2026-காலை)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. திருபாம்பாபுரமும் அருகில்தான் உள்ளது. திருச்சிறுகுடி என்று கோவில் பலகையில் பெயர் உள்ளது.
தலவரலாறு
பார்வதியும் பரமேஸ்வரனும் சொக்கட்டான் ஆடிகொண்டிருந்தனர். இந்த விளையாட்டில், அம்மை வெற்றிபெற்றார். கோபமுற்ற சிவன் மறைந்துவிட்டார். இதனால் வருத்தமுற்ற பார்வதி மணலால் லிங்கம் பிடித்து வழிபட்ட தலம். பின்னர் ஈஸ்வரன் அம்பிகையை வந்து இடபக்கமாக அணைத்து கொண்டதால், இத்தலதில் வழிபடும் தம்பதியிருக்கு ஒற்றுமை ஏற்படும் என்றநம்பிக்கை பக்தர்களுக்கிடையில் உள்ளது. இத்தலஇறைவன் மணவில் உருவாக்கப்பட்டதால், சந்னாதி மற்றும் ஜவ்வாது மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. அபிஷேகபிரியனுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது.
கோவில் சிறப்பு
இத்தலம் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த சோழனால் கட்டப்பட்டது. திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம்.
செவ்வாய்கிரகம்.
இவருக்கு தனி சன்னதியுள்ளது. நாங்கள் திருவீழிமிலை தரிசனம் செய்தபிறகுதான் 12 மணிக்கு மேல் காலை உணவுருந்தவில்லை என்ற எண்ணம் தோன்றியது. சரியான உணவகம் மற்றும் சிற்றுண்டி கிடைக்கவில்லை. நாங்கள், தொடர்ந்துயிந்த தலத்திற்கு பயணப்பட்டோம். நாங்கள் செல்வதற்குள் நடை சாற்றிவிடுவார்கள் என்ற அச்சம்யிருந்தது. அன்று செவ்வாய்கிழமை என்பதால் இந்த செவ்வாய்கிரக வழிபாட்டிற்கு பலர் வந்திருந்ததால், கோவில் ஒரு மணிவரை திறந்திருந்தனர்.
ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீசூட்சமபுரிஸ்வரர் தரிசனம் கிடைக்ப்பெற்றோம்.
மங்கள விநாயகர், மங்கள சுப்ரமணியர், மங்களேஸ்வரி, மங்களேஸ்வரர், மங்கள தீர்தம் என்று அனைத்தும் மங்களமாக உள்ளதுயித்தலத்தில்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.










No comments:
Post a Comment