திருவாரூர் தியாகேசர் (தரிசனம்-30.1.2026)
அமைவிடம்
தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரம். சைவத்தில் மிகபுகழப்;பெற்ற தலம்.
அடிப்படை சிறப்புகள்.
1. சைவத்திருமுறை 12லும் பாடப்பெற்ற தலம்.
2. பூரி ஜகன்நாதர் கோவில் தேர்திருவிழாவிற்கு ஒப்பான தேர்திருவிழாவை கொண்டதுயிந்த ஊர்.
3. இந்த தலத்தில் பிறந்தாலே முக்தி என்ற நம்பிக்கை சைவர்கள் மத்தியில் அசைக்கமுடியாத ஒன்றாக உள்ளது.
4. சுந்தரமூர்திநயனார் இவ்வூரில் பிறந்தவர்கள் அனைவருக்கும் அடியேன் என்று சிறப்பித்து கூறுகிறார்.
5. மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கிய ஊர்.
6. சோழர்கள் கட்டிய கோவில் என்றாலும் இக்கோவில் காலம் துல்லியமாக கணக்கெடுக்கமுடியவில்லை.
7. 4000 முதல் 5000 ஆண்டுகள்யிருக்கலாம் என்று உத்தேசமாக கூறப்படுகிறது.
8. குறிப்புகள் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலைவிட பழமையானது.
9. கோவில் மற்றும் கோவில் குளம் இரண்டும் ஒரே அளவு கொண்டதாகும்.
10. சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான தியகேசர் அவதாரதலம்.
கோவில் அமைப்பு
9ராஜகோபுரம், 80விமானம், 12 மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்தகிணறுகள், 3தோட்டம, 3 பிராகாரங்கள், 24 உட்சன்னதிகள், 365 சிவலிங்கங்கள், 36 விநாயகர் சிலைகள்.
இரண்டு சிவன் சன்னதிகள்.
1. வான்மீகிநாதர் 2. தியாகராஜர்
வான்மீகிநாதர் சன்னிதி மிக பழமைவாய்ந்தது. அனைத்து சைவ பக்தர்களாலும் பாடப்பெற்றவர், வான்மீகிநாதர். அப்பர் பெருமான் திருவிளையாடல்கள் அனைத்தையும் கூறி இதற்கு முன்பா அல்லது பின்பா எழுந்தருளிநீர் என்று இறைவனிடம் கேட்கிறார்.
2. நமிநந்தியடிகள் தண்ணீரால் விளக்கேற்றி வழிபட்ட தலம்.
அம்பிகை கமலாம்பாள், நீலோத்பாலாம்பாள். தேவாரத்தில் அதிகபதிகங்களை பெற்றபாடல். இவ்வாறு எண்ணிலடங்;கா சிறப்புக்களை பெற்ற தலம். நான் என்வாழ்நாளில் பல முறை வழிபட்டுள்ளேன். என்யிறுதிகாலம்வரை பலமுறை தரிசனம் செய்வேன். இம்முறை காலை 6 மணிமுதல் 8 மணி வரை நாங்கள், இறையின்பத்தில் திளைத்தோம். பின்னர், எங்கள் ஊர் நல்லிச்சேரியை நோக்கி பயணித்தோம். நான் ஒவ்வொருமுறை தரிசனம் செய்யும் போதும், இக்கோவில் புதிதாக பார்பது போன்ற தோற்றத்தை தருகிறது. இவ்வாறு பல கோவில்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளது. என்றும் புத்தம்புதிதாக.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
































No comments:
Post a Comment