நீடுர் சோமநாதர்

 நீடுர் சோமநாதர் (தரிசனம்-28..2026-மாலை)

அமைவிடம்

வேயுறுதோளியம்மை சமேத சோமநாதர் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறைவட்டத்திலேயே அமைந்துள்ளது. நீடுர் ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ளது. 

சுந்தரர் மற்றும் திருநாவுக்கரரசரால் பாடப்பெற்ற தலம்.

பெயர் காரணம்

இந்த உலகம் அழியும்காலத்திலும் இத்தலம் நீடித்துயிருக்குமாம், அதன் காரணமாக நீடுர் என்ற பெயற்றது.

இந்திரன் காவிரி மணலை வைத்து பூஜித்தலிங்கம். அதுவேயிருகி பின் வெள்ளையாக மாறியது. இறைவன் மார்கழி மாதம் திருவாதிரையில் தேவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து பாடியாடினாராம். இதன் காரணமாகவும் “கோடிதேவர்கள் கும்பிடும் நீடுர்” என்றானது. 

இந்திரன் சூரியன், காளி, நண்டு போன்றோர் வழிபட்ட தலம். 

இத்தலம் தேவாரம் மட்டும்மல்லாது, பொது திருத்தாண்டகம், திருப்புறம்பியம், திருப்பள்ளியின் மூக்கூடல், இவற்றிலும் இத்தலம் பற்றிய குறிப்புள்ளது.

சேக்கிழார் குறிப்பில் திருஞானசம்மந்தர் திருநின்றியூரிலிருந்து , திபுன்கூர் செல்லும் வழியில், “நாடு சீர் நீடுர் வணங்கி”  என்ற வரிகள்மூலம் உணர்த்துகின்றார்.

முனையடுவார் நாயனார் அவதாரத்தலம்.

“அறைகொண்டவேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன்”   போர்களத்தில் எதிரிகளை தோற்கடித்து பொருள்யீட்டியும், போரில் துணை வேண்டுவோருக்கு துணைபுரிந்து பொருள்யீட்டியும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்தவர்.

 நாங்கள் பொன்னூர் (எ) அன்னியூருக்கு சென்றோம். 4 மணிக்கு கோவில் திறக்க வில்லை. சற்று நேரம் காத்திருந்து, பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்து, அர்சகர் வீட்டை கண்டுபிடித்தால் கதவு பூட்டியிருந்தது. பின்னர் அவரது கைபேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டடிதில் இரவு 7.30 தான் வருவதாக கூறினார.; நாங்கள் இத்தலத்தை வழிபடமால் நீடுர் கிளம்பினோம். பெரும்பால கோவில்களில் அர்சகர்கள்யிருக்க மாட்டார்கள். ஆனால் கதவுதிறந்துவைத்து தீபம் ஏற்றியிருப்பர் நாங்கள் இரும்பு கதவுவழியாக வழிபட்டு செல்வோம்.  பெரும்பாலான கோவில்களில் எங்களயிருவரை தவிற யாருமேயிருக்க மாட்டார்கள். ஏகாந்த தரிசனம் கிடைக்கும். நாங்கள்  முன்பே கோவில் சிறப்புகள் பற்றி அறிந்துகொண்டு தேடி தேடி தரிசனம் செய்வோம்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.





 












No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...