வழூவூர் வீரட்டானம்

வழூவூர் வீரட்டானம் (தரிசனம்-29.1.2026- காலை)
 29.1. வியாழன்அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி திருவாரூர் பயணித்N;தாம். போகும் வழிதடத்தில் வழுவூர் வீரட்டானம், பெருஞ்சேரி, சிறுபுலியூர், நன்னிலம், கொன்டிசுரம் ஆகிய தலங்களை தரிசனம் செய்து, மதியம் 2.3;0 மணிக்கு திருவாரூரில் நாங்கள் முன்பதிவு செய்திருந்தயிடத்தை அடைந்தோம்.
 அமைவிடம்.
 மயிலாடுதுறை நன்னிலம் வழியி;ல், மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது. எட்டு வீரட்டான தலங்களில் ஒன்று. கஜசம்ஹாரமூர்தியாக ஈஸ்வரன் அருள்பாலிக்கிறார். 
கோவில் அமைப்பு 
மிகப்பெரிய அளவிலான கோவில். 150 அடி உயர கோபுரம். கோவில் குளம் ஈசான தீர்தம் 342 அடி அகலம் மற்றும் 380 அடி ஆழம் கொண்ட பெரிய குளம். சுற்றி நடை பாதைஅமைத்துள்ளனர். மூன்றாவது வாயிலில்; மகாமண்டபம் உள்ளது. இந்த ஞானசபையில் கஜசம்ஹாரமூரத்;தி காட்சியளிக்கிறார். மூலமூர்த்தி வீரட்டானேஸ்வரர், கிருத்திவாஸேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்மன் சன்னதி
 தனி கோவிலாகவுள்ளது. பாலகுராம்பிகை (எ) இளங்கிளைநாயகி என்பதே இறைவியின் திருப்பெயர். இரண்டாம் ராஜராஜன், மூன்றாம்குலோத்துங்கன், அழகப்பெருமாள்பிள்ளை என்று பலராலும் இக்கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
 அட்ட வீரட்டான தலங்கள் (எட்டு தலங்கள்)
 1. திருக்கண்டியூர் - பிரம்மன் தலை கொய்தது.
 2. திருக்கோவிலூர்- இந்தகாசூரனை கொன்ற தலம்.
 3. திருவதிகை- திருபுரத்தை எரித்ததலம்.
 4. திருப்பறியலூர் - தட்சன் தலை அறிந்த தலம்.
 5. திருவிற்குடி – ஜலந்தரா சூரனை கொன்ற தலம்
 6. திருவழுவூர் - யானையை உறித்த தலம்
. 7. திருக்குறுக்கை - மன்னதனை எரித்ததலம்.
 8. திருக்கடவூர் - எமனை கொன்றயிடம்.
 தலவரலாறு
 48 ஆயிரம் ரிஷிகள் பிரம்மனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாருகாவனத்தில் தவம் செய்தனர். அதனால் ரிஷிகள் அனைவரும் தன்னiவிட மேலானவர்களஇவ்வுலகிலில்லை என்றும். ரிஷிபத்தினிகள் தன்னைவிட மேலான கற்புக்கரசிகள் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தனர். ஆணவத்தை அழிக்க சிவன் பிட்ஷாடனாகவும், திருமால், மோகினியாகவும் இந்த இடத்திற்கு வந்தனர். இவர்களின் அழகில் பொறாமை கொண்ட ரிஷிகள் நீங்கள் ஏன் இவ்வளவு அழகாக உள்ளீர்கள் என்று கேட்க இறைவன் ஞானக்கண்ணுடன் எங்களை கண்ணுற்றால், இந்த அழகு தெரியாது என்று கூறினார். அதனால் ரிஷிகள் அவர்கள் மேல் பொறாமை கொண்டு, அபிச்சார (அபிசாரம் என்றால் பிறருக்கு தீங்கு நாடி மந்திரம் ஜெபிப்பது) ஹோமம் செய்து அதன் மூலம், மான், பாம்பு, அக்னி அவைகளை ஏவினர். சிவபெருமான் அனைத்தையும் அவரின் ஆயுதமாக மாற்றினார். பின்னர் யானையையும் ஏவினர், இப்பொழுது சிவபெருமான் யானையை மதம்பிடிக்க செய்தார். யானை ரிஷிகளை துன்புறுத்தியது. அவர்களின் சக்தி கைமீறியிய பிறகுதான், இறைவன் சிந்தனை ஏற்பட்டு அந்த சர்வேஸ்வரனை நாடினர். இறைவன் குழந்தை வடிவம் எடுத்து யானைக்குள்புகுகிறார். உலகமே இருண்டுவிடுகிறது. அப்பொழுது பார்வதி மகேஸ்வரனை பார்த்து ஸ்வாமி என்று அழைத்தவுடன். ஈசன் யானை வயிற்றை கிழித்துக்கொண்டு வருகிறார். அந்த சமயம் அம்பிகையின் இடுப்பில்லிருக்கும் இறைவன் முருகப்பெருமான் ஆள்காட்டி விரலை காட்டி, இதோ அப்பா என்கிறார்.
 மகரிஷிகள் அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுத்ததால் ஸ்ரீஞானசபேஸ்வரர் என்று பெயர் பெறுகிறார். மகரிஷிகள் அபிஷாரயாகம் செய்ததால் ஏற்பட்ட சாபம் காரணமாக 1008 சிவாலயங்களை 58 நாட்களில் வழிபட சொல்கிறார். 48 நாட்களில் 1008 சிவாலயங்கள் தரிசனம் செய்ய முடியாததன் காரணமாக, ஒரே பானத்தில் 1008 லிங்கங்கள் (சகஸ்ரலிங்கம்) பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த கோவில் தேசியநெடுஞ்சாலைக்கு வந்து சில மீட்டர் தொலைவில் எதிர்புரம் செல்ல வேண்டும். இந்தயிடம் பெருஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் அர்சகர் வருகைக்காக ஒருமணிநேரம் காத்திருந்து வழிபட்டோம். ஆனால் கோவிலை நன்கு சுற்றிப்பார்க ஒருமணிநேரத்திற்க்கு மேல் தேவை. அங்குள்ள பணியாளர்கூறியதே யிந்த பெருஞ்சேரி.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.



















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...