ஆபத்சகாயேஸ்வரர் தென்குரங்காடுதுறை (தரிசனம்-27.1.2026-மாலை)
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை – கும்பகோணம் வழிதடத்தலுள்ளது. திருநீலக்குடியிலிருந்தும் செல்லலாம்.
சோழநாட்டு தென்கரை தலம். ஆடுதுறை என்ற பெயர் வழக்கிலுள்ளது.
தலசிறப்பு.
சுக்ரீவன் வழிபட்ட தலம். வடகுரங்காடுதுறை வாலி வழிபட்ட தலம்.
( வடகுரங்காடுதுறை என்னுடைய வலைப்பதிவுள்ளது.) ஞானசம்மந்தர் மற்றும் அப்பரால் பாட்பெற்ற தலம். கண்டராதித்தசோழன் மனைவியார் கட்டிய கற்றளி. மூன்றுநிலை ராஜகோபுரம், மற்றும் பலபீடம் நந்தியுடன் முகப்பு காட்சியளிக்கிறது. சுற்று பிரகாரத்தில் சுக்ரீவன் பெருமானை வழிபடும் காட்சி கோபுரத்தில்லுள்ளது.
பவளக்கொடியம்மை சமேத ஆபத்சகாயேஸ்வரராக அருள்புரிகிறார், ஈசன். விநாயகர், மயில்வாகனர், அம்பாள், சுக்ரீவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், கஜலெட்சுமி என்று பல சன்னதிகள் உள்ளன.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.

















No comments:
Post a Comment