ஹைதராபாத் சுற்றுப்பயணம்

 ஹைதராபாத் சுற்றுப்பயணம் (நாட்கள் - 25,26,27, மற்றும் 28.9.2025)

 பாசர் சரஸ்வதி கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு நாங்கள் ஹைதராபாத் நகரத்தை சுற்றியுள்ள இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். கனமழை  காரணமாக எங்கள் சுற்றலா தடைபடவில்லை என்றாலும் சற்று பின்னடைவு ஏற்பட்டது.  

1.பிர்லாமந்திர்





வெள்ளை சலவை கல்லினாலான வெங்கடாஜலபதி கோவில். அந்த கோவிலருகில் லும்பினி பூங்கா, பிர்லா கோளரங்கம், மற்றும் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. மழை காரணமாக கோவில்தரிசனமே சற்று கடினமானது எங்களுக்கு.

2. ஸ்கந்தகிரி சுப்ரமணிய ஸ்வாமி கோவில்







இந்த கோவில் செகந்தராபாத்நகரில் அமைந்துள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பிராதன தெய்வமாக சுப்ரமணியர் இருந்தாலும், ஏகாம்பரநாதர், காமாட்சிஅம்மன் மற்றும் பெருமாள் துர்கை என்று பல சன்னதிகளும் சிறப்புற்றிருந்தன.  நவராத்திரி பெருவிழா வேறு நடைப்பெற்றுக்கொண்டிருந்ததால்,சிறப்பு பூஜையும் அலங்காரமும் மெய்சிலிர்க்க வைத்தது. 

3. பிலிம் நகர் தெய்வ சன்னிதானம்.

ஜுப்ளிஹில் என்ற இடத்தில் அமைந்துள்ள கோவில். வெள்ளை பளிங்கால் கட்டப்பட்ட கோவில். வெங்கடேஸ்வரர், லெஷ்மி, ராமர் ஹனுமான் என்று பல சன்னதிகளும் நிறைந்து காணப்பட்ட கோவிலாக விளங்கியது. மிக சுத்தமாக், பராமரிக்கப்பட்டும், கலைநயத்துடனும் கட்டபட்ட கோவிலாகும். தெலுங்கு திரைபடங்களில் இக்கோவில் மிகவும் பிரபல்யம்.




4. ஜெகன்நாத் மந்திர்.

கனமழை காரணமாக நாங்கள் பிலிம் நகர் கோவிலில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் தங்கி விட்டோம். மழை சற்ற குறைந்தபின் கூகுளில் தேடியதில் இந்த கோவில் அருகிலிருந்ததால், இங்கு சென்றோம். Cab கிடைப்பது வேறு மிகவும் கடினமாகயிருந்தது. இக்கோவில் ஒடிசா மாநில கோவில் போன்று இப்பகுதியில் உள்ள ஒடியா சமூக மக்களால் 2009 ஆம் ஆண்டு கட்டபட்ட கோவில், ஜகன்நாதர் தேரோட்ட விழா மிக சிறப்புபற்று விளங்குகிறது. (எங்களின் பூரி ஜெகன்நாதர் தரிசன பிளாக் உள்ளது)

















5. சில்கூர் பாலாஜி.

ராமோஜி பிலிம் சிட்டி என நாங்கள் எங்களின் அட்வணையில் ஒதுக்கியிருந்தாலும், மழை காரணமாக ரத்து செய்துவிட்டு, சில்கூர் பாலாஜியும், ஸ்வர்ணகிரி வெங்கடேஸ்வரா கோவிலும் செல்லலாம் என்ற நினைத்தால்,  ஸ்வர்ணகிரி வெங்கடேஸ்வரா கோவில் தரிசனத்தையும்; மழை காரணமாக கைவிட்டோம்.




சில்கூர் பாலாஜி தலபுராணம்.

தெலுங்கான மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டத்தில்அமைந்துள்ள புகழ் மிக்க கோவில். ஒருவிவசாயி எப்பொழுதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே அவர் வேலையை செய்து கொண்டிருந்தார். வயலில் கிடைத்த விளைச்சலை தானம் அதிகம் செய்து, திருப்பதி பாலாஜியை தவறாது வழிபட்டு வருவதை வழக்கமா கொண்டிருந்தார். அவரின் வயது முதிர்வுகாரணமாக திருப்பதி செல்ல முடியாமல் போனதும், பெருமாள் கனவில் வந்து அவர் வயலில் உள்ள ஒரு எறும்பு புற்றுக்கடியில் வாசம் செய்வதாக கூறியுள்ளார். ஊர் மக்கள் கூடி அவர் வயலில்லிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேதரான வெங்கடேஸ்வரரை வெளியில் எடுத்து வழிபடலாயினர்.  14 ஆம் நூற்றாண்டிலிருந்த ராம பக்ததாசரின் மாமன்மார்களான வெங்கண்ணாவும், அக்கண்ணாவும் இந்த கோவிலை எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.   

6. சார்மினார். 

1591 ஆம் ஆண்டு நான்கு கோபுரங்களை கொண்டு கட்டப்பட்ட ஒரு மசூதியாகும். பிளேக் நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டதை கொண்டாடும் பொருட்டு முகம்மது அலி குப்ஷா என்பவரால் கட்டப்பட்டது. இந்த சார்மினார்  என்ற கட்டிடத்தை மையமாக கொண்டே இந்த ஐதராபாத் நகரம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. தற்சமயம் தொல்லியல் துறைகட்டுப்படாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ஹைதராபாத் நகர சுற்று என்றாலே தவறாது பார்வையிட வேண்டிய ஒரு சுற்றுலா மையம்.










7.பாக்கியலெட்சுமி கோவில்

சார்மினார் பக்கத்திலேயே கட்டப்பட்ட ஒரு இந்து கோவில். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. இதன் வரிவாக்கம் நீதி மற்ற உத்தரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறதாம். 




8. சௌமஹல்லா அரண்மனை.

லாபத் ஜங் என்பவர் 1750 ல் தொடங்கி 1869 ஆசப் ஜா இவர் காலத்தில் நிறைவு பெற்றது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை தற்பொழுது 12 ஏக்கர் மட்டுமே உள்ளது.











\








கோல்கொண்டா கோட்டை, பிலிம் சிட்டி, யாதகிரி குட்டா என்ற நரசிம்மர் கோவில், ஸ்வர்ணகிரி இந்த இடங்கள் நாங்கள் மழையின் காரணமாக செல்ல முடியாமல் போனது.

Indira Park





Equality Statue

 Equality Statue (தரிசனநாள் - 26.9.2025)




அமைவிடம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், தற்சமயம் மிகபுகழ்மிக்கஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. 

வரலாறு

வைணவ ஆச்சாரியர், ராமானுஜர் என்பருக்கு எழுப்பபட்ட சிலை. இவரின் ஆயிரமாம் ஆண்டு பிறந்தநாள் நினைவாக உருவாக்கப்பட்ட வைணைவ வழிப்பாட்டுத்தலம்.

அமைப்பு

 216 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தாலான சிலை.2019 ஆம் ஆண்டு சிறிய ஜீயரால் நிறுவப்பட்டது. 216 அடி உயரம் கொண்ட இராமானுஜர் சிலை,54 அடி உயரமான தாமரை வடிவ பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் அமர்ந்த நிலையில் நம்மை காண்கிறார். 120 கிலோ  தங்கம் இந்த பஞ்சலோக சிலை மேல் பூசப்பட்டுள்ளது. இந்த 120 என்ற எண்ணிக்கை அவரின் வாழ்நாளை  குறிக்கிறது.

தரை தளத்தில் 108 திவ்யதேசங்களின் பெருமாள் தாயார், சிலைகள் ஊர் பெயர் மற்றும் எந்த மாநிலம் , மாவட்டம், யாரால் மங்களாசாசனம் ( பிரபந்தம் பாடப்பட்டது) செய்யப்பட்டது போன்ற குறிப்புகளுடன் சிறய கோவில் போன்ற தனி சன்னிதானம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ராமானுஜரின், வாழ்கை வரலாறு படங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பின் ஆன்மீக மின்நூலகமும் 

ஆய்வு மையங்களும் அமைந்துள்ளது. நடக்க முடியாதவர்களுக்கு மின் தூக்கி வசதியுள்ளது. 




கோவில் அமைப்பு

விமானம் பல வகைகயான கட்டிட அமைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

1. ஹோசால்யர்கள் பாணி தூண்கள்.

2. சோழமன்னர்கள்கள் பாணியில் அமைந்த கோபுரங்கள்.

3 .விஜயநகரபேரரசு பாணியில் அமைந்த சன்னதிகள்.

4. நகரா பாணியில் உள்ள சில மண்டபங்கள்

5. பல்லவர்கள் காலத்து கோபுரங்கள்.

6. காகாத்தியா பாணி அமைப்பு கதவுகள் மற்றும் சுவர் அலங்காரங்கள் என்று எந்த வகையிலும் குறைவைக்காத அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கிய கட்டிட கலை.

7. சிம்ம யாளி ( சிங்க அமைப்பு)

8. சுக யாளி ( கிளி அமைப்பு)

9. கருடஸ்தம்பம்

10. வைணவ சிறப்பு பெற்ற கருடன் மற்றும் அனுமன் இவர்களின் வறவேற்ப்பு.

11. யானைகளின் அணிவகுப்பு என்று மன்னர் கால கட்டிட கலைக்கு இணையாண சிறப்புடன் விளங்குகிறது, இந்த இந்த சமத்துவ சிலை.




சமத்துவசிலை பெயர் காரணம்.

இவ்வுலவாழ்விலிருந்து உய்ய  ஒரே மந்திரம் “ஓம் நமோநாராயணா” என்பதை அறிந்து, உலமக்கள் அனைவருக்கும் அறியும் வகையிலும் (கற்பிக்கும் வகையில் ) திகோஷ்டியூர் பெருமாள் கோவில் கோபுரத்தில் நின்று கூறியமையால் ( பாகுபாடில்லாமல் அனைவரும் அறிய ) ராமானுஜர் சிலை இப்பெயர் பெற்றது.

நீர் உற்று 

இக்காட்சிமிக சிறப்பாக உள்ளது. உள்ளே கைபேசிகள் அனுமதி கிடையாது. கன மழைக்கிடையில் மிகுந்த கவனத்துடன் நாங்கள் ராமானுஜரை தரிசனம் செய்தோம்.



பெருமாள் உட்புறப்பாடு.



















யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...