திங்களுர் (தரிசன நாள் 11.9.2025)
அமைவிடம்
தஞ்ஜாவூர் மாவட்டம், திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புகழ் பெற்ற சிவஸ்தலம்.
வாய்ப்பு
நல்லிச்சேரி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அன்று இரவே நாங்கள், சென்னைக்கு பயணப்பதிவு செய்திருந்தோம். (இரவு 9.50) கிடைத்த நேரத்தை பயண்படுத்தி திங்களுர் மற்றும் திருப்பழனம் என்ற சிவத்தலங்களை தரிசனம் செய்தோம்.
சிறப்பு
தேவார வைப்புத்தலம் மற்றும் நவகிரஹங்களில் இரண்டாவதான சந்திரன் தலம்.
வரலாறு
தட்சனின் மகள்கள் என்று சொல்லப்படும். நட்ஷத்திரங்களான 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்துவிக்கிறார். சந்திரன் ரோஹிணியிடம் மட்டும் (பாரபட்சமாக) அதிக அன்பு செலுத்துகிறார். இதனால் கோபமுற்ற தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுக்கிறார். சந்திரன் சாபம் நீங்க வழிபட்ட தலமே இந்த திங்களுர். சந்திரன் அதிபதிகாரர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
அப்பூதியடிகள் நாயன்மார் அவதார தலம்.
அப்பூதியடிகள் என்பவர் நாவுக்கரரசர் மீது மிகுந்த பக்திகொண்டு, அவர் பெயரில் பாடசாலை தண்ணீர் பந்தல், அன்னதானகூடம் என்று பல வகையிலும் மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார். இதையறிந்த நாவுக்கரசர் வியந்து அப்பூதியடிகளை காண செல்கிறார். அப்பூதியடிகள் வந்திருப்பது நாவுக்கரரசர் என்பதை அறிந்து அவருக்கு உணவளிக்க விரும்புகிறார். அந்த நேரத்தில் நாவுக்கரசர் நதியில் நீராடி சிவவழிபாடு செய்தபின்பு உணவருந்த வருவதாக கூறி செல்கிறார். உணவுதயாரித்த பிறகு உணவருந்துவதற்காக அவரது மகனான நாவுக்கரசரை அழைத்து, (அப்பூதியடிகள் மகன் இருவருக்குமே நாவுக்கரரசர் என்றே பெயசூட்டியிருந்தார்) வாழையிலை எடுத்துவர சொல்கிறார். வாழையிலை அறுக்கும் நேரம் பாம்புகொத்தி அந்த சிறுவன் இறந்துவிடுகிறான். அப்பூதியடிகளும் அவரது துணைவியும் மகன் இறந்ததை மறைத்து அவருக்கு உணவளிக்கின்றனர். பின்னர் நாவுக்கரசர் பாலகன் இறந்ததை உணர்ந்து அந்த சிறுவன் உயிர்பெற இத்தல கைலாசநாதரை வேண்டி “விடம் தீர்த பதிகம்” பாடியவுடன், பாம்பு தீண்டிய பாலகன் உயிர் பெருகிறான்.
பிற சன்னதிகள்
சுவாமி கைலாசநாதர், அம்மன் பெரியநாயகி, சந்திர தீர்தம். விஷம் தீர்த விநாயகர், சுப்ரமணியர்இ சண்டிகேஷ்வரர் என்ற பிற சன்னதிகளும் உள்ளன.
இரண்டு சண்டிகேஷ்வரர்.
சைவத்தில் பஞ்ச மூர்திகளில் ஒருவரான சண்டிகேஷ்வரர் சன்னதி என்பது சிவாலயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இத்தல சண்டிகேஷ்வரர் காணாமல் சென்றமையால், வேறு ஒரு சண்டிகேஷ்வரர் சிலையை வழிபாட்டிற்கு கொண்டுவந்தனர். புதிய சண்டிகேஷ்வரர் வந்த உடன் முன்பிருந்த சிலையும் கிடைக்கப்பெற்றதால் இத்தலத்தில் இரண்டு சண்டிகேஷ்வரர் சிலை உள்ளது. இந்த தகவல் நான் நேரடியாக இந்த கோவில் அர்சகரிடம் கேட்டு அறியபெற்N;றன்.
நந்தவனமெங்கும் வெள்ளை பூக்கள்.
இத்தல புகைப்படங்கள்.
![]() |






No comments:
Post a Comment