நல்லிச்சேரி கிராம கோவில் கும்பாபிஷேகம் (நாள்- 11.9.2025)
அமைவிடம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். என் கணவரின் சொந்த ஊர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அளவு,1136.
நந்தி மங்கை என்ற சிறப்பு பெற்ற சிவன்கோவிலும் ,(சப்த மங்கை தலங்கள் என்ற தலைப்பில், என்னுடைய பிளாக் உள்ளது) ராஜகோபாலசுவாமி என்ற பெருமாள் கோவிலும் (விஜயராகவ நாயகர் என்ற தலைப்பில் என்னுடைய பிளாக் உள்ளது.) குளத்தங்கரை பிள்ளையார் கோவிலும், இரண்டு பக்க எல்லையில் ஒரு ஐயனார் கோவிலும், ஒரு காளி கோவிலையும் கொண்டது இந்த கிராமம்.
பெருமாள் கோவிலும், சிவன் கோவிலும் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கி வருகிறது. 2006 ஆம் ஆண்டு இந்த ஐந்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு விரைவில் கும்பாகிஷேகம் நடைபெறுவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்படுகிறது. ஏனைய மூன்று சிறிய கோவில்களுக்கும் கிராம மக்கள் முயற்சியின் கீழ் 11.9.2025, புதன் கிழமை, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1. வரசித்தி விநாயகர்
2. சியாமளா மாகாளி
3. யோகசாஸ்தா
இத்தல புகைப்படங்கள்.


















No comments:
Post a Comment