அக்கி நோய் அறிவோம். ( Herpes Zoster (a) Shingles)

 அக்கி நோய் அறிவோம். ( Herpes Zoster  (a) Shingles)

 அக்கி நோய் என்பது, சின்னமைக்கு காரணமான அதே தொற்று வைரஸை அடிப்படையாக கொண்டது. இது மிகவும் வலிமிகுந்த வைரஸ் தொற்று. மேலோட்டமாக உடலில் வரும் ஒரு சிவப்பு நிற புண் என்று தெரிந்திருந்தாலும், இந்த நோயானது, நரம்புவலி, தூக்கமின்மை, உடல் அசௌகரியம், மிகுந்தவலி மற்றும் எரிச்சல் மிகுந்தது. வெளியில் ஏற்படும், புண் போன்ற கொப்புளம்   (10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்கள்) சில நாட்களில் சரியாகிவிட்டாலும், சிலருக்கு நரம்புவலி பல மாதங்களுக்கோ ஆண்டுகளோ தொடரலாம். 

யாருக்கு வரும்?

பெரும்பாலும் மூன்றில் ஒருவருக்கு தான் இந்த நோய் வருகிறது. குழந்தை பருவத்தில் சிறியஅம்மை கண்டவர்களுக்கு அந்நோய் தொற்று வைரஸ் உடலிலேயே உள்ளது. இத்தகையவர்கள், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ அல்லது, வயதுமிகுதியின் காரணமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

எவ்வாறு அறிவது

வலி எரிச்சல் ஏற்பட்ட பின்னரே இந்த புண்கள் உருவாகின்றது. பாதிப்புக்குள்ளான நரம்பு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த சிவப்பு நிற புண் பரவுகிறது.  வலி, எரிச்சல் இவை வந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு பிறகே இந்த நோய்தான் என்பதை கண்டறியமுடியும்.

 ஷிங்கிக்ஸ் (Shingles Vaccine) தடுப்பூசி

தடுப்பூசி 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு போடப்படுகிறது. ஒரு ஊசியின் மதிப்பு 10000ரூ. இந்த மதிப்பு சில இடங்களில்(சில நூறுகள்) சற்ற குறைக்கப்படுகிறது. 

முதியவர்களக்கு அவசியம்.

முதியவர்கள் என்ற உடன் 80 மற்றும் 90 என்ற எண்ணம் வேண்டாம். 50வயது நிறம்பியவர்கள் இந்த தடுப்பூசிக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். முதல் ஊசி போட்டுக்கொண்ட பிறகு, இரண்டிலிருந்து ஆறு மாதத்திற்குள், இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில், 50 சதவிகிதம்மேல் இந்த நோய் தாக்கம் குறைந்ததாக அறியப்படுகிறது. மற்றும் நோயின் தாக்கம் வலி மற்றும் கால அளவு குறைந்ததாகவும் ஆயிவில் கூறப்படுகிறது. 

தடுப்பூசியின் விளைவு

மற்ற தடுப்பூசிகள் போன்றே,  உடல் சுகமின்னை, ஜுரம் மற்றம் சில அசகௌரியங்கள் உடலில் ஏற்படுகிறது. இரண்டு அல்லது மூன்ற நாட்களுக்கு சற்று சுகவீனம் ஏற்படுகிறது. 

என். ஐ. பி என்றால் என்ன? NIP (National Immunisation Programe)

இதன் அடிப்படையில் 12 தொற்று நோய்களுக்கு குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.   1978 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் செயல் படுகிறது. யூ.ஐ.பி.  UIP (Universal Immunication Programme) என்ற உலகலாவிய திட்டமாக 1985 மாற்றப்பட்டது. இதன் கீழ் பலவகையான தடுப்பூசிகள் வழங்குகின்றனர். இதை பற்றி நீங்கள் அறிந்து கொண்டுகூட செயல்படலாம்.

அக்கி என்ற அம்மை நோய் பற்றி நான் எழுதுவதற்கான காரணம் என்ன?

இந்த நோயால் நான் ஒரு மாத காலத்திற்கு மேல் துன்புற்றேன். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை பற்றி தெரிவிக்கிறேன். என் கணவர், இந்த தடுப்பூசியின்; முதல் டோசை போட்டுக்கொள்ள போகிறார். நான் தற்சமயம் தான் இந்த நோய்குள்ளாகி மீண்டிருப்பதால். அடுத்த ஆண்டு தடுப்பூசி எடுக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இரண்டுமாதங்கள் முடிந்தும் கழுத்து நரம்பில் சற்ற வலியை உணருகிறேன். தூக்கமின்னையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. நெர்விஜன்  (Nervijen)என்ற இந்த மருந்தை 45 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டேன். இதுவே என்வாழ்நாளின் நான் அதிகமாக உட்கொண்ட மருந்து.


No comments:

Post a Comment

அக்கி நோய் அறிவோம். ( Herpes Zoster (a) Shingles)

  அக்கி நோய் அறிவோம். ( Herpes Zoster  (a) Shingles)   அக்கி நோய் என்பது, சின்னமைக்கு காரணமான அதே தொற்று வைரஸை அடிப்படையாக கொண்டது. இது மிக...