மகடி ரங்கநாதர் ஆலயம்.(தரிசனநாள் -19.7.2025)
அமைவிடம்
பெங்களுரிலிருந்து 41 கி;மீ. தொலைவில் மகடி என்ற இடம் உள்ளது. மகடி ரோடு என்பது குறைந்தது 30- 35 கி. மீட்டர் நீளம் உள்ளது. பேருந்தில் பயணிப்பவர்கள், ரெங்கநாதர் கோவில் என்று கேட்டு இறங்கவேண்டும்.
1139 ஆம் ஆண்டு சோழர்களால் இக்கோவில் உருவாக்கப்பட்டாலும், விஜயநகர பேரரசு மற்றும் 16 ஆம் நூற்றாண்டிலிருந்த கெம்ப கௌடா வரை பலராலும் புனரமைக்கப்பட்டது.
இரண்டு நுழைவாயில்களை கொண்ட இந்த கோவில், பாசிமா( இடத்தின் பெயர்) வெங்கடாஜலபதி கோவில் என்றே மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. நின்ற கோலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்றே இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். இறைவன் திருவுருவம் சாலிகிராம கல்லினாலானது. 12 ஆம் நுர்ற்றாண்டு சோழர் காலத்தில் கருவறை மட்டுமே கட்டப்பட்டதாம். 1524-ல் கிருஷ்ணதேவராயரால் அலங்கார கோபுரம் கட்டப்பட்டது.
திப்புசுல்தான், மற்றும் மைசூர் மகாராஜாவின் பங்களிப்பும் உள்ளதாம். பிராகாரத்தில், சிவன், இராமர், சீதை, அனுமன், லெட்சுமி மற்றும் கிருஷ்ணர், ரெங்கநாதருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளன. நாங்கள் சனிக்கிழமை தரிசனத்திற்;கு சென்றதால் இரண்டு மணி நேரம் தரிசனத்திற்கு தேவைபட்டது.
மாண்டவ்ய முனிவர் இக்கோவிலை நிறுவியதால் “மாண்டவ ஷேத்ரம்” என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.














No comments:
Post a Comment