மகடி சோமேஸ்வரர் கோவில் (தரிசனம் - 19.7.2025)
அமைவிடம்
பெங்களுரிலிருந்து 41 கி;மீ. தொலைவில் மகடி என்ற இடம் உள்ளது. மகடி ரோடு என்பது குறைந்தது 30- 35 கி. மீட்டர் நீளம் உள்ளது. மகடி பேருந்து நிலையத்திலிருந்து, 2 கி.மீ. தொலைவிருக்கும் இந்த கோவில்.
தொல்பொருள் ஆய்வகம் கர்நாடக மாநிலத்தின் கீழ் இயங்குகிறது.
16 ஆம் நூற்றாண்டின், இரண்டாம் கெம்ப கௌடா, அவர்களால் கட்டப்பட்டது என்றும், 18 ஆம் நூற்றாண்டில் மூன்றாவது கெம்ப கௌடா என்பவரால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் வரலாற்று ஆராய்சியாளர்களால் கூறப்படுகிறது.
சிவன் சன்னதியும், அம்மன் சன்னிதியும் பிரதானமாக இருந்தன. இயற்கை எழில் மற்றும், கலைநயத்துடன் உள்ள சிற்பங்களும் இக்கோவிலை கண்டவுடன் பிரமிப்படைய செய்தன.
இக்கோவில் சற்று தூரத்தில் ஒரு நந்தி அமைக்கப்பட்டிருந்தது. சிறு குன்றின் மீது சற்று உயரத்திலிருந்த நந்தி, எழிலுடன் காட்சியளித்தது. நாங்கள் தரிசனம் செய்த சமயத்தில் மழை பெய்ததால் எங்களால் நந்தியை தரிசனம் செய்ய முடியவில்லை. (கூகுளில்லிருந்த புகைப்படத்தை பகிர்கிறேன். பின்னர் கெம்ப கௌடா கோட்டை என்று ஒரு பெரிய திடல்லிருக்கிறது. அரசு விழாக்கள் இங்கு நடைபெறுமாம். . கோட்டை என்று சொல்லும் இந்த திடல ருகில் ஒரு சிவன் கோவிலிருந்தது. மழையில் சென்றே நாங்கள் தரிசனம் செய்தோம்.
![]() |
(Thanks to google) |
No comments:
Post a Comment