நுகர்வோர் நீதிமன்ற வழக்கு
முன்னுரை
நாங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கு மற்றும் அதற்கான தேவை, காரணம், எங்களுக்கு சாதகமா கிடைத்த தீர்ப்பு, நாங்கள் எதிர் கொண்ட அனைத்து செயல்களையும் இந்த பிளாகில் பகிர்கிறேன்.,
2023 ஆம் ஆண்டு நாங்கள் கைலாஷ் மானசரோவர் தரிசனத்திற்காக, யாத்ரி டாட் காம் என்ற சென்னை டிராவலரிடம் நபர் ஒருவருக்கு 10,000 என்று எங்களிருவருக்கும் 20,000 கொடுத்து முன் பதிவு செய்தோம்.
யாத்திரை பற்றிய செய்திகள்
2020 ஆம் ஆண்டு முதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அரசால் அனுமதியளிக்கப்படாமலிருந்தது. காரணம் 2020 மற்றும் 2021 கொரோனா. 2022 முதல் 2024 வரை நமக்கும், சீன நாட்டிற்கும் இணக்காமான உறவில்லாத காரணத்தால். இந்தியகள் மட்டும் கைலாஷ் யாத்திரைக்கு அனுமதிக்கபடவில்லை. அதாவது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. என்.ஆர..ஐ(N.R.I) என்று சொல்லகக்கூடிய பிறநாட்டு பாஸ்போட் வைத்துள்ள இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
யாத்திரை ஏர்பாட்டாளர் யாத்ரி டாட்காம் நிலை.
இவர்கள் 2022 ஆம் ஆண்டு அரசு அனுமதிகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். நாங்கள் இவர்களிடம் முன்பதிவும் செய்தோம். பிறகுதான் தெரிந்தது எங்களை போல் பலரும் (எங்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள் உட்பட) இவர்களிடம் யாத்திரை முன்பதிவு செய்துள்ளனர் என்று. அரசு அனுமதியளிக்கவில்லை என்பது தெரிந்தவுடன் நாங்கள் இவர்களிடம் முன் பதிவு பணத்தை திருப்பியளிக்குமாறு கேட்டோம். இந்த யாத்ரி டாட்காம் எங்களின் முன்பதிவு பணத்தை கொடுக்க மறுத்தனர்.
எங்களின் அனுகுமுறை
நாங்கள் இணக்கமாக இவர்களுடன்யிருக்க நினைத்து, இவர்களுக்கு முன் பணம் திருப்பியளிக்க பல வழிகளிலும் இவர்களை அனுகினோம்..
1. நாங்கள் உங்களுடன் வேறு ஏதாவது யாத்திரை செய்கிறோம் அந்த யாத்திரைக்கு இந்த முன் பணத்தை பயண்படுத்திக்கொள்ளுங்கள் என்று, சொன்னதை யாத்ரி டாட்காம் மறுத்தது.
2. ஜி .எஸ்.டி. க்கா நீங்கள் 500 ரூ எடுத்துக்கொண்டு 9500 கொடுங்கள் என்று வேறு வழியில் அனுகினோம். அப்பொழுதும் யாத்ரி டாட்காம் மறுத்தது முன் பணத்தை திரும்பியளிக்க.
3. மீண்டும் கேட்ட பொழுது அடுத்த ஆண்டு, கைலாஷ்யாத்திரைக்கு நாங்கள் இதை பயன்பதுத்திக்கொள்வோம் என்றது, இப்பொழுது நாங்கள் சற்று கடுப்பானோம். இது சரியான முறையில்லை நிங்கள் முன்பணத்தை திருப்பியளிப்பதுதான் முறை என்று கூறினோம். ஒரு லட்சம் கொடுத்தவர்களே எங்களின் முடிவுக்கு ஒத்துழைக்கிறேன் என்கின்றனர். நீங்கள் என்ன மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள் என்னால் தரமுடியாது என்று கூறியவுடன். நாங்கள் சட்டப்பூர்வமாக அனுகிறோம் என்று கூறிவிட்டு, திரும்பிவிட்டோம்.
எங்களின் செயல்பாட்டின் நிலை.
1. எங்களை போல் பணம் கொடுத்தவர்களை முதலில் அனுகினோம். அப்பொழுதுதான் தெரிந்தது, 10,000 முதல் இரண்டு லட்சம் வரை பலர் பணம் கொடுத்துள்ளனர் என்று. அவர்களில் சிலரைமட்டும் நாங்கள் தேர்ந்தெடுத்து, நாம் யாத்ரி டாட்காம் மீது வழக்கு தொடுக்கலாம் என்ற எங்களின் எண்ணத்தை தெரிவித்தோம். பலரும் சரி என்று செல்லிவிட்டு, பின் பல காரணம் கூறி விலகினாரகள்;.
காரணம்.
1. எங்களின் குழந்தைகள் வேண்டாம் என்கின்றனர், என் மனைவி பயப்படுகிறாள், யாத்ரிடாட்காம் டிராவலர் ஆளுகட்சி அரசியல்லாதி. என்று பலகாரணம் கூறி விலகினர்.
நுகர்வோர் நீதி மன்றம் தேடல்.
எங்களுக்கு எந்த நுகர்வோர் நீதி மன்றத்தை அனுகவேண்டும் என்பதே பெரிய செயலாகயிருந்தது. நீதி மன்றங்களே எங்களுக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. டிராவல் ஏஜென்சியிருக்கும் பகுதி நிதிமன்றத்தை அனுக வேண்டுமா? (கோயம்பேடு பகுதி) அல்லது நாங்கள் வசிக்கும் பகுதி நீதிமன்றத்தையனுகவேண்டுமா? (சென்னை தாம்பரம்) அல்லது எங்களின் அடையாள அட்டைமுகவரியுள்ள, இடத்திலுள்ள நீதி மன்றத்தை அனுக வேண்டுமா? (பாண்டிச்சேரி) என்பதை அறிவதற்கே சில மாதங்கள் தேவை பட்டது.
வழக்குரைஞர் தேடல்.
நாங்கள் எங்கள் நட்புவட்ட வழக்குரைஞர்கள் பலரை நாங்கள் இருவரும் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த கேஸ் எடுக்காது அதாவது வலுவான கேஸ்யில்லை என்றே பலரும் கூறினர். என் கணவர் அவருடன் பணியற்றிய நண்பர் தற்சமயம் சட்டம் படித்து, வழக்குரைஞராக பணியாற்றுவதாக கூறி அவரிடம் சென்றார். அவர் கேஸ் கட்டாயம் வெற்றி பெரும், ஆனால் செலவு அதிகமாகும், அதுமட்டுமல்லாமல் அவர் வெளியூ செல்வதாலும் தொடர முடியாத சூழலை விளக்கினார். என்கணவின் நட்பு காரணமாக , யாத்ரிடாட்காம் என்ற டிராவல் ஏஜென்சீக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.
டிராவல் ஏஜென்சீ வக்கில் நாங்கள் இந்த பணத்தை அரசுக்கு செலுத்திவிட்டோம் என்று கூறியது. நாங்கள் அதற்கான ஆதாரங்கள் காட்டுங்கள் என்று பதிலளித்தோம்.
வழக்குரைஞர் தேடல் தொடர்ச்சி.
என்கணவர் இந்த செயலில் மிக உறுதியாகயிருந்தார். அவர் என்னிடம் எதிர்பார்தது என்னவென்றால், அவரின் ஊக்கத்தைகுறைக்கும் செயலில் (நான்) ஈடுபட கூடாது, என்பதுதான். நான் இதற்காக அவர் பயணிக்கும் நாட்களில் கூட செல்வதும் மட்டுமல்லாது, எங்களுக்கு ஏற்படும் பண இழப்பை பற்றி பேசாதிருப்பது என்றும், நான் தீர்மானித்துக்கொண்டேன்.
இறைவன் காட்டிய வழி
நாங்கள் செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு பஞ்சகேதார் என்ற யாத்திரைக்கு பயணம் செய்தோம். அப்பொழுது எங்களுடன், ஒரு மாவட்ட நீதிபதி ஒருவர் பயணித்தார். அவரிடம் என் கணவர் எங்களின் கைலாஷ்யாத்ரை பயணத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளை கூறி அவரிடம் ஆலோசனை கேட்டார். இவரின் வழிகாட்டலின் படி சென்றதே எங்களுக்கு கிடைத்த வெற்றி.
தேடலின் உச்சம்.
இந்த மாவட்ட நீதிபதி அறிமுகபடுத்திய வழக்குரைஞர் சென்னை மந்தவெளியில்யிருந்தார். அதிக நேர காத்திருப்பிற்கு பிறகு எங்களின் கேஸை படித்துவிட்டு (நாங்களே டிராப்ட் செய்து கணினியில் பதிவு செய்திருந்தோம்) கட்டாயம் வெற்றி பெரும். ஆனால் என்னால் இந்த சிறய கேஸை எடுக்க முடியாது, என்று கூறி வேஒருவரை பரிந்துரைத்தார். இவரிடம் சென்று மீண்டும் அணைத்தையும் கூறி கேஸ் பதிவதற்கே ஒரு மாத காலம் காத்திருந்து, அவரும் எனக்கு இந்த கேஸ் நடத்துவதற்கான நேரமில்லை என்று கூறி, பூங்குழலி என்பவரை அறிமுகம் செய்தார். அவரே எங்களின் கேஸை நடத்தினார். இந்த பூங்குழலி அம்மாவின் அலுவலகம் சென்னை பாரிமுனையிலிருந்தது.
சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் எங்களின் வழக்கு பிப்ரவரி 2025 –ல் யாத்ரி டாட்காம் டிராவல்ஸ் மீது பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்கள் எங்கள் வழக்கில் வெற்றி பெற்றுவிட்டதாக, அதாவது, அரசு அனுமதி கொடுக்காத யாத்திரைக்கு முன் பணம் வாங்கியதற்கும், மற்றும் எங்களின் முன் பணம் வட்டியுடனும், எங்களுக்கு ஏற்படுத்திய சிறமத்திற்காக என்று கூறி, ஒரு 45 நாட்களுக்குள் நீதி மன்றம் மூலம் எங்களுக்கு 75,000ரூ செலுத்துமாறு உத்தரவிட்டது.
இடைப்பட்ட பகுதி அனுபவங்கள்.
நாங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஹியரிங் பற்றிய செய்தியை அறிந்து கொண்டும் இதற்கு அவர்அளிக்கும் பதில்களை தெரிந்து கொண்டும், இடையில் எங்களுக்கு தோன்றிய பாயின்டகளை சொல்லியும் இந்த வழக்குரைஞருடன் தொடந்து தொடபிலிருந்து கொண்டே செயலாற்றி வந்தோம். சென்னையில்யிருக்கும் காலத்தில் நாங்கள் நேராக சென்று இவரை சந்தித்துவந்தோம். யாத்ரி டாட்காமின் விதிகள் மற்றும் விதிமுறைகளின் பதிவுகள், அதில் எங்களுக்கு சாதகமாக உள்ள பாயின்ட்டுகள் என்று நாங்கள் எங்களால் முடிந்ததை வழக்குரைஞருக்கு செய்து வந்தோம். பல செய்திதாள்களில் வந்த செய்திகள் அதாவது2022 முதல் 2024 வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடக்கவில்லை; என்பதையும் 2025 –ல் அனுமதித்தாக வந்த செய்திகளை சேகரித்து கொடுத்து வந்தோம். எங்களை போல் பணம் செலுத்தியவர்களில் பலர் அவர்களுடன் 2025-ல், பயணம் செய்தனர். எங்களை போல் உள்ள யாத்திரிகர்கள் பலர் நேரா சென்று சண்டையிட்டதையும், கேள்வியுற்றோம். நாங்கள் ஒருவரே அவர்களை சட்டபூர்வமாக அனுகினோம். வழக்கரிஞரின் அறிவுரை பேரில், சுந்தரி, மற்றும் ராமநாதன் என்று நாங்கள் இரண்டு நபர்களாகவே வழக்கை பதிவு செய்தோம். அதனால் ஒவ்வொரு ஹியரிங்கிர்க்கும் எங்களின் கையொப்பம் தேவைபட்டது. கட்டணம் போக்குவரத்து செலவு என்று நாங்கள் 61,000ரூ செலவிட்டோம். எங்களுக்கு 5000ரூ நஷ்டம் என்றாலும், என்கணவருக்கு தவறு செய்தவரை தட்டி கேட்டோம் என்ற திருப்தியும், ஏளனமாக பேசியவரை எதிர் கொண்ட திருப்தியும் கிடைத்தது. எனக்கு செயலின் உறுதியும் என் கணவின் தைரியமும் விடாமுயற்சியும் பெருமையடைய செய்தது.
உறவு மற்றும் நட்பு வட்ட பார்வை
பலர் இந்த பணம் வராது என்றும், நீதிமன்றத்தின் தீரப்பு புறக்கணிக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் நாங்கள் மேல் முறையீடுடிற்கு சென்றாலும், நீதி மன்ற தீர்பை யாத்ரி டாட்காம் நிராகரித்தாலும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தீர்மானித்து வைத்திருந்தோம். ஆனால் பூங்குழலியம்மா என் அனுபவத்தில் கூறுகிறேன். மேல் முறையீட்டிற்க்கு செல்ல மாட்டார்கள். சற்று பொறுமையாகயிருப்போம் .அவர்கள் தரப்பு செயலுக்காக காத்திருப்போம் என்று கூறினார். 75,000ரூ 29.11.25 தேதியிடப்பட்ட டி.டி.யாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
ஊடகம்.
எங்களுக்கு சாதகமாக வந்த தீர்பின் நகலை அம்மா வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தார். கோர்டின் வெளியீடாக வர ஒருமாத காலமாகும் என்று தெரிவித்தார். அதற்குள் என் கணவர் எனக்கு தெரிந்த தமிழ் செய்திதாள்களுக்கு தெரிவிக்க கூறினார். பாண்டிச்சேரி தமிழ் ஹிந்து செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டதில் அவர் சென்னை ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்தார். இவர் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் தெரிவியுங்கள் என்று கூறினர் ஆனால் தினமலர் எங்களின் செய்தியை வெளியிட்டது. செய்தியின் புகைப்பட பிரதியை பகிர்கிறேன். என் கணவரின் அக்கா இந்த செய்தியை படித்து விட்டு முதன் முதலில் எங்களுக்கு கூறினார். என் கணவரின நட்புவட்டத்தில் சிலர் படித்துவிட்டு பெயர் பாண்டிச்சேரியை சேர்ந்த ராமநாதன்; என்று குறிப்பிடடிருப்பதால் நியாகதான்யிருக்க வேண்டும் என்று தொடர்பு கொண்டு பேசினர்.
எங்களின் கைலாய யாத்திரை
நாங்கள் இந்த ஆண்டு (2026) கைலாய யாத்திரை செல்ல வேண்டும் என்று உறுதியாக உள்ளோம். எங்களனின் பயணநண்பர்களில் பலர் கடந்த ஆண்டே (2025) தரிசனம் செய்துவிட்டு வந்து விட்டனர். சார்தாம் யாத்திரை போன்று, மே மாதம முதல் செப்டம்பர் மாதம் வரை கைலாய யாத்திரை நடை பெறும், இப்பொழுதே பல டிராவலர்கள் அவர்களின் திட்டத்தை அனுப்பிவிட்டனர். பலர் முன்பனமும் செலுத்திவிட்டனர். நாங்கள் ஏப்ரல் மாதம் தான் முடிவுசெய்யவுள்ளோம். ஹர ஹர மகாதேவா.
1. தினமலர் செய்திதாளில் வந்த செய்தியின் புகைப்படம்.
2. யாத்ரிடாட்காம் கொடுத்த டி.டி.
3. தீர்ப்பு நகல் இவைகளை பகிர்ந்துள்ளேன்.
