பவானி தீவு

 பவானி தீவு (நாள் - 7.12.2025) மூன்றாம் நாள்

அமைவிடம்

விஜயவாடா நகருக்கு அருகில் ஓடும் கிருஷ்ணா நதியின் மத்தியில் அமைந்துள்ளது. பிரகாசம் குறுக்கணையின் நீரோட்டத்திற்;கு  எதிர் திசையில் இந்த தீவு அமைந்துள்ளது. 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இத்தீவு ஆற்று தீவுகளில் மிகபெரிய ஒன்றாகும். ஆந்திர மாநிலம் இந்த தீவை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது. அந்த ஆற்றின் கரையில்தான் கனக துர்கா கோவில் அமைந்துள்ளது. அம்மனின் பெயர்களில் ஒன்று பவானி என்பதால். இந்த இடம் பவானி தீவு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தங்கும்மிடம், பூங்காக்கள், விளையாட்டுகள், படகு சவாரி என்று ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

பயண அனுபவம்.

நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும்,  பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7,ஆம் தேதி என்று மூன்று நாட்களும் சில இடங்களை தரிசனம் செய்யதோம்.


















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...