ஜெகஜனனி கோவில் (தரிசனநாள்-24.3.2026)
![]() |
| Source Google |
அமைவிடம்
ஆந்திர மாநிலம், நந்தியால் என்ற நகரில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு
அம்பிகையின் திரு நாமமாகிய ஜெகஜனனி என்ற பெயர் எந்த அம்மனுக்கும் சூட்டப்படாத பெயர் என்றும், கைலாஷ் மானசரோவர் என்றயிடத்தில் மானசரோவர் ஆற்றுக்கருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு இந்த பெயர்யிருந்ததாகவும். அதன்பிறகு இந்த ஆலய அம்மனுக்குதான் இப்பெயர் சூட்டியிருப்பதாக இக்கோவில் ;இணையதளம் கூறுகிறது. இந்த கோவில் அம்மன் சிலை முப்பெரும் தேவியர், மும்மூர்திகள் மற்றும் சந்திரன், சூரியன் என்று அனைத்தையும் தன்னுள் அடக்கிய அம்சமாக அமையபெற்றவள் என்று கூறுகின்றனர்.
எங்களது அனுபவம்
24 ஆம் தேதி காலை நாங்கள் எங்களின் நவநந்தி தரிசனத்தை முடித்துக்கொண்டு, அன்று மாலை இந்த ஆலய தரிசனத்திற்காக சென்றோம். இத்தல இறைவனை வழிபட பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். நான் வழிபட்ட எந்த ஆலயத்திலும் இவ்வகையான கட்டுப்பாட்டை நான் எதிர்கொள்ளவில்லை.
புடவை அணிந்துததான் செல்ல வேண்டும் என்றனர். அவர்களே புடவையும் வைத்திருந்தனர். (வியாபாரம் மற்றும் வாடகைக்கல்ல) அவர்கள் கொடுக்கும் புடவையை சுடிதார் மேல் அணிந்து செல்லலாம் என்று நினைத்தால், அவர்கள் பிளவுசும், உள் அணியும் பாவாடையும் அவர் கொடுப்பதை அணியுமாறு வற்புறுத்தினர். நான் தரிசனமே வேண்டாம் என்று வந்துவிட்டேன். பின்னர் நாம் வாழ்கையில் எவ்வளவோ செயல்களை பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் சென்றுள்ளோம். இறைவன் தரிசனத்திற்காக இதையும் சகித்துக்கொள்வோம் என்று மீண்டும் சென்றேன். அவர்கள் கொடுத்ததை அணி ந்து கொண்டேன். தலை ஜடை முழுவதும் பின்னியிருக்க வேண்டும் என்று, என்னுடைய Hairbandயும் தடை செய்தனர். கையில் கண்ணாடி வளையல் அணியவேண்டும் என்று கொடுத்தனர். நெற்றியில் குங்குமம்தான் வைக்கவேண்டும், ஸ்டிக்கர் வைக்ககூடாது என்று கண்டிப்பாக கூறுகின்றனர். இவையனைத்தையும் கடந்து நாங்கள் தரிசனத்திற்கு சென்றோம். இறைவனுக்க குங்கும் அஷ்டோத்ர (108நாமாவளி) அர்சனை செய்தோம். தரிசனத்திற்கு வரும் அனைவரும் செய்ய வேண்டும். என் கணவருக்கு சிவனுக்கு போர்த்திய அங்கவஸ்திரமும் எனக்கு அம்மனுக்கு அணிவித்த புடவையும் கொடுத்தனர். நான் இவ்வகையான புடவையை பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் இறைவனின் பரிசு என்று பத்திரமாக வைத்துக்கொள்ள முடிவவெடுத்தேன். நட்பும் உறவும் வசந்தநவராத்திரியில் எனக்கு கிடைத்த இறைபரிசாக மகிழ்ந்தனர். இந்தபுடவையை நான் பயன்படுத்த 100 கட்டுப்பாடு வித்துள்ளனர். ஆனால் நான் நினைவுபரிசாக பாதுகாப்பதாக முடிவெடுத்தேன்.
![]() |
| Our Gods gift |
![]() |
| Our Gods Gift. |






No comments:
Post a Comment