காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. சென்னை – பெங்களுர் செல்லும்பொழுது இந்த வழியாகதான் செல்ல வேண்டும். தாமல் என்ற ஊரும் இவ்வழியில்தான் உள்ளது.
பயண அனுபவம்
நாங்கள் 27 ஆம் தேதி சென்னையிலிருந்து பெங்களுர் பயணிக்கும் சமயம் இந்த கோவிலை வழிபட்டோம். இந்த வழிதிடத்தில் உள்ள நான்கு கோவில்களை தரிசனம் செய்ய வேண்டும் என்பது எங்களின் அவா. திருபுட்குழி விஜயராகவ பெருமாள், மணிகண்டீஸ்வரர் என்ற சிவன் கோவில், தாமல் தாமோதர பெருமாள், வராகீஸ்வரர் என்ற சிவன் கோவில். ஆனால் எங்களின் சோர்வு காரணமாக நாங்கள் சென்னையைவிட்டு காலை 8 மணிக்குதான் கிளம்பினோம். இடதுபக்கத்தில் அமைந்துள்ள உணவகத்தில் காலைஉணவை சாபிட்டவுடன்,12 மணிவரை நடைதிறந்திருப்பார்கள் என்பதாலும் இடதுபக்கத்திலேயே இக்கோவில் அமைந்திருப்பதாலும், நாங்கள் சென்று வழிபட்டோம். மீண்டும் நிச்சயமாக விஜயராகவபெருமாளை தரிசனம் செய்வோம். அப்பொழு இந்த பக்கத்தை மேம்படுத்துவேன்.
3. ஈமக்கிரியை செய்யும் நேரத்தில் அக்னியின் வெப்பம் தாங்காமல், வலதுபுறமிருக்கும், ஸ்ரீதேவி தாயார் இடதுபுறமும், இடதுபறமிருக்கும் பூதேவி தாயார் வலதுபுறமிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
4.ஜடாயுவிற்கு தனி சன்னதியுள்ளது.
5. பெருமாள் ஜடாயுவை அவரது தொடையில்அமர்திகககொண்டிருக்கிறார்.
7. இத்தல தாயார் மரகதவல்லியை வேண்டிக்கொண்டு, வறுத்த பயிறை மடியில் கட்டிக்கொண்டு இத்தலத்தில் தூங்கினால், மறுநாள் அந்த பயிர் முளை கட்டிருந்தால், அவர்ளுக்கு குழந்தை பாக்கியம் உறுதி என்பது பக்தர்ளின் நம்பிக்கை.
8. இராமானுஜர் கல்வி கற்ற இடமாக இந்த தலம் விளங்குகிறது. ராமானுஜரின் ஆசிரியர் யாதவ பிரகாசர் இந்த ஊரை சேர்ந்தவர்.
9.. ராமானுஜருக்கு தனி சன்னதியுள்ளது.
10. கல் குதிரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குதிரையின் உறுப்புகள் அனைத்தும் உயிருடன் உள்ள குதிரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வடித்த சிற்பி அவர் ஆயுட்காலம் முழுவதும் இது போன்ற சிறப்பான குதிரை வடிப்பதில்லை என்று உறுதியாகயிருந்தார். அதன் காரணமாக 8ஆம் நாள் உற்சவம் அன்று பெருமாள்அந்த சிற்பிவாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அவருக்கு தரிசனம் கொடுக்கிறார். (இந்த குதிரையை தரிசனம்செய்யவே நாங்கள் மீண்டும் இத்தலம் செல்வோம்) .
நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் கோழிகுத்தி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு
அத்திமரத்தால், உருவாக்கப்பட்ட பெருமாள். மிக சிறிய ஆலயமாக உள்ளதால், மிக அருகில் தரிசனம் செய்ய முடிகிறது. பெயருக்கு தகுந்தாற்போல் விருஷ்வரூபமாக காட்சி தருகிறார், 15 அடி உயரத்தில்.(வானத்தை தொடுவது போல்) எனக்குபார்த்த உடன், பிரமிப்புதான் ஏற்பட்டது. நாங்கள் இதனால்வரை இந்த பெருமாளை பற்றி அறிந்திருக்கவில்லை. சப்தஸ்வர ஆஞ்சநேயர், இந்த ஆஞ்சநேயர் சிலையை தட்டினால்;, ஏழு ஸ்வரங்களின் சப்தம் கேட்குமாம். மரத்தாலான பெருமாள் என்பதால், திருமஞ்சனம் கிடையாது தைலகாப்புமட்டுமே. வேருடன் உள்ள மரத்தில் அமைந்துள்ளதால், வேரை மறைத்து, திருவடியில் கவசம்சாற்றியுள்ளனர். உற்சவர் நரசிம்மருக்கே திருமஞ்சனம். 800 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த பெருமாளை தரிசத்தால், சோளிங்கர் நரசிம்மர், காஞ்சிபுரம் அத்திவரதர், திருப்பதி ஸ்ரீநிவாசபெருளை நினைவூட்டுகிறார்.
தலவரலாறு
நிர்மலன் என்ற அரசன் குஷ்ட(தொழுநோய்) நோயால் மிகவும் துன்பப்பட்டான். ஒருமுனிவர் இந்த அரசனுக்கு இறைவழிபாட்டை வலியுருத்தினார். இறைவனின் அறிவுருத்தல்படி காவிரிக்கரைஓரமாகவே சென்று நீராடி வழிதடத்தில் உள்ள கோவில்களை வழிபட தொடங்கினார் மன்னர். அசரீரியாக ஒலித்த பெருமாள், மூவலூர் ஆபத்சகாயேஸ்வரர் உனக்கு வழிகாட்டுவார் என்று கூறினார். இவ்வாறு சென்ற மன்னன் ஒரு இடத்தலி;ருந்த காவிரியில் நீராடிய பொழுது, அவனின் தோல் நோய் குணமுற்று, மேனி பொன்னாக மாறியது. அங்கிருந்த ஒரு அத்திமரத்தில் பெருமாள், சங்கு சக்கரம் கதையுடன் அந்த மன்னனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். மன்னனின் பாவங்கள் நீங்கியதால் இந்த இடம் “கோடிஹத்தி” என்று அழைக்கப்பட்டது. இதுவே தற்சமயம், கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் மன்னன் பெருமாள் மீது பக்திகொண்டு மகரிஷியாகவே மாறிவிட்டார். இவரே பிப்பல மகரிஷி. அத்தல தீர்த்தம் “பிப்பல மகரிஷி தீர்த்தம”;.
சரபோஜி மகாராஜா இத்தல பெருமையறிந்து, அவரின் யுத்ததோஷம் நீங்க வேண்டினார். சரபோஜி மன்னருக்கும் பிப்பல மகரிஷிக்கு அருளியது போல் காட்சி கொடுத்தார். கனவில் தான் கண்ட காட்சியை மக்களுக்காக இதே அத்தி மரத்தில் பெருமாளை சிலையாக வடித்தார். மன்னனே பெருமாளின் தோற்றத்திற்கு தகுந்தாற்போல் “வானமுட்டிபெருமாள்” என்று திருநாமம் சூட்டினார். தரிசனம் செய்யும் சமயம் நமக்கும் நேரடி தரிசனம் கிடைத்தது போன்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சிதிலம் அடைந்திருந்த கோவில் 2007 ஆம் ஆண்டு ஊர்மக்கள் மற்றும் பக்தர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தற்சமயம் இந்து அறநிலயத்துறையின் மூலம் செயல்படுகிறது.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்;கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்தளுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு
108 திவ்யதேசத்தில் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாகயிருந்த தலம். காவிரியம்மன் ரெங்கநாதரை வழிபடுகிறார். இக்கோவில்கோபுரம் 250 அடி நீளம் மற்றும் 230 அடி அகலமும் கொண்டது. எமனும் அம்பரீசனும் திருமாலின் திருவடியை பூஜித்தபடி உள்ளனர். 12 அடி நீளமும், 6 அடி அகலமும்கொண்ட பச்சை கல்லால் வடிவமைக்கப்பட்ட ரெங்கநாதர்.
பஞ்ச ரெங்கநாதர் தலங்கள்
1. ஆதிரெங்கம் - ஸ்ரீரெங்கபட்டினம் (கர்நாடகா)
2. மத்யரங்கம் - ஸ்ரீரெங்கம்
3. அப்பாலரெங்கம் - கோவிலடி (அப்பக்குடத்தான்)
4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி (கும்பகோணம்)
5. பஞ்சரெங்கம் - பரிமளரெங்கம் (இந்தளுர்)
ஏகாதசி விரத சிறப்பு
நாட்டை ஆண்டுவந்த அம்பரீசன் என்ற மன்னன், அவரின் மூதாதையர்கள் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருந்து வந்தார். அவரின் தொடர் ஏகாதசி விரதத்தை கண்டு தேவர்கள் மிகவும் பயந்தனர். ஏனெனில் அவர்களின் இந்திர லோக பதவி பறிபோய்விடும் என்று. செய்வதரியாதிருந்த நேரத்தில், துர்வாச முனிவர், அவரின் தவத்தின் மீது கொண்ட கர்வம் காரணமாக, அம்பரீசனின் விரதித்திற்;கு இடையுறு செய்ய கிளம்பினார். அவர் வந்து சேருவதற்குள், ஏகாதசி திதி முடிந்துவிட்து. துவாதசி அன்று உணவு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும் என்பதே விரதத்தின் விதி. இதை அறிந்த, துர்வாச முனிவர் மன்னனிடம் சென்று நான் இன்று உன்னுடன் உணவருந்த வருகிறேன் என்று கூறுகிறார். தான் சென்று காவிரியில் நீராடி விட்டு, மதிய வந்தனத்தை(மாத்யானிகம்)முடித்துவிட்டு வருவதாக கூறி செல்கிறார். இதற்குள் துவாதசி திதி முடிந்து விடும் என்பது முனிவர் கணக்கு. ஆனால் அம்பரீச மகாராஜா அவரின் குலகுருவின் வழிகாட்டுதல்படி மூன்று உத்திரணி (3ஸ்பூன்) நீர் அருந்தி விரதத்தை முடித்து விடுகிறார். இதை முனிவர் அவரின் தவத்தின் பயனால் அறிந்து கொண்டு, அவரின் தோல்வியை தாங்க முடியாமல், பூதத்தை கொண்டு மன்னனின் உயிரை பறிக்க உத்தரவிட்டார். அவர் ஏவிவட்ட பூதத்தை பார்த்து அதிர்ந்த மன்னன், இந்த பரிமளரங்கனிடம் சரணடைந்தான். இறைவன் மன்னனை காத்தார். முனிவரும் அவரின் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரினார். அம்பரீச மன்னரின் விருப்பத்திற்கினங்க ரெங்கநார் இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலை பற்றி நான் அறிந்திருந்தாலும். தரிசனம் செய்வது, இதுவே முதல்முறை.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம்.
அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
மையிலாடுதுறையிலிருந்து, 15 கி;மீ தொலைவில் உள்ளது. கவிசக்கரவர்தியின் ஊரானா தேரழந்தூர் என்ற ஊர் இங்கிருந்து மிக அருகில் உள்ளது. கம்பர் இந்த துர்கையின் மீது மிக பக்திகொண்டவர். ஒருநாள் அடை மழையின் காரணமாக கம்பரின் வீடு நனைத்தது. அன்று இரவு தூங்க கூட இயலாமல் வருந்திய கம்பர் இந்த துர்கையை மணமுருகி வணங்கினார். காலை கண்விழித்து பார்தவுடன் அவர்வீடு கூறை வேய்ந்திருந்தது. கதிர்வேய்ந்த மங்கள நாயகி என்று இறைவனை சிறப்பித்து வணங்கி பாடினார். அன்றுமுதல் கதிர்வேய்ந்தமங்களம் என்று பக்தர்ளால் அழைக்கப்படலாயிற்று. அதன் காரணமாகவே இந்த ஊர் கதிராமங்களம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
முன்புறம் துர்கையாகவும், பின்புறம் சர்பதோற்றத்திலும் (பாம்பு வடிவில்)காட்சி தருகிறார். துர்கை பின் புறம் வைத்துள்ள கண்ணாடி மூலமே சர்பதோற்றத்தை தரிசனம் செய்ய முடியும். சிவ பூஜைக்காக பூபரிக்க வந்த ராகுவே இந்த துர்கையை முதன்முதலில் தரிசனம் செய்து வணங்கினார். துர்கைக்கு அர்சனை செய்யும் நேரத்தில் வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் இருக்குமாம். ராகு பரிகார தலமாகவும் உள்ளது இந்த ஆலயம்.
நாங்களே காரை ஓட்டி சென்று தரிசனம் செய்த பல தலங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிளாக் எழுதுவது இதுவே முதல்முறை.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்;கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
துலாகட்ட காசி விஸ்வநாதர் கோவில் (தரிசனம்-11.11.2025)
அமைவிடம்
மைலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் துலாமாதம் (ஐப்பசி) காவிரியில் ஸ்நானம் செய்யும் படித்துறையில் அமைந்துள்ள கோவில்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரியில் குளிப்பது என்பது ஹிந்து மதத்தில் ஒரு புனிதமான செயலாக கருதப்படுகிறது. அனைத்து நதிகளும் இந்த மாதத்தில் காவிரியில் கலக்கிறது. நாம் இயற்கையை பாதுகாத்து அதை கடவுளாக வணங்குவதாலும் இந்த செயல் புனிதமாக கருதப்படுகிறது. நீர்நிலையின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு இந்த செயல்பாடு ஒரு காரணமாக அமைகிறது. இந்த ஐப்பசி மாதம் நேரம் ஒதுக்கமுடியதவர்கள் கார்திகை மாதம் முதல் தேதி நீராடலாம். (கருணை நேரம் அல்லது சிறப்பு நேரம் என்று சொல்லலாம். இதுவே முடவன் முழுக்கு என்று சொல்லப்படுகிறது.)
முடவன் முழுக்கு என்றால் என்ன?
மாற்றுத்திறனாளி ஒருவர் மைலாடுதுறை காவியாற்றில் நீராட விருப்பமுற்று கிளம்பினார். அக்காலகட்த்தில் போக்குவரத்துவசதியின்மை காரணமாக நடந்தே சென்றதால் மாதம் நிறைவுபெற்றது. அன்று இரவு கோவில் மண்டபத்தில் தங்கி இறைவனிடம் அவரின் இயலாமையை கூறி வருந்தினார். இறைவன் கனவில் தோன்றி வருந்தாதே கார்திகை மாதம் ஒன்றாம் தேதியாகிய நாளையும் காவிரியில் நீராடினாலும் உனக்கு ஐப்பசிமாதம் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறினார். இந்த மாற்றுத்திறனாளியின் பக்தியால் நாமும் நீராட ஒருநாள் அதிகமாக கிடைக்கப்பெற்றோம். கார்திகை ஒன்று நீராடுதலே முடவன் முழுக்கு என்றாகியது.
இத்தலத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநார் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார்.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23 ,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
1971 ஆம் ஆண்டுமுதல் அஜ்மான், துபாய், ரஃஸ்அல்-கைமா, ஷார்ஜா, உம்அல்-குவைன் இவைகளின் தலை நகரமான அபுதாபி இந்த 7 இடங்களும், ஐக்கிய எமிரேட்ஸ் என்ற அழைக்கப்படுகிறது. இந்த ஏழு எமிரேட்களுக்கும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார். இவர்களின் அதிகாரபூர்வமான மதம் இஸ்லாம். இவர்களின் ஆட்சி மொழி அரபு. ஆனால் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த துபாயில் உள்ள மக்கள் தொகையில் 20 சதவிதம் தான் இந்த நாட்டு மக்கள். மீதம் உள்ள 80 சதவீகிதம் உலகளாவிய மக்கள். இதில் 60 சதவிகிதம் நம் இந்தியர்கள். மீதம் உள்ள 20 சதவிதம் வெளிநாட்டினர். ஹிந்தி மொழியும் மிக அதிகமாக பேசுகின்றனர்.
விமானகட்டணம்; மற்றும் வீசா.
டூரிட்ஸ்விசா இந்த விசா என்பது முன்று வகையில் செயல் படுகிறது. 1. நட்புநாடு மற்றும் சுற்றுலாதுறை வளர்சியை அடிப்படையாக கொண்டு விசா கட்டணம் இல்லாமல் செயல்படுவது. 2. நாட்டிற்கு சென்றவுடன் விமானநிலையத்திலேயே விசா கட்டணம் செலுத்தும் முறை. (Arrival on Visa) 3. வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பே கட்டணம் செலுத்தி விசா வாங்கி கொள்வது என்று மூன்று முறைகள். துபாய்க்கு விசா கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ8,000 செலுத்தி, பயணத்திற்கு முன்பே விசா என்ற பயண அனுமதி பெற்பெற்றுவிட்டோம். இதன் செல்லுபடி காலம் ஒரு மாதம்.
நாங்கள் இண்டிகோ விமானத்தில் பயணித்தோம். அரபிக் எமிரேட்ஸ் விமானகட்டணத்திற்;கும், இண்டிகோகட்டணத்திற்கும் ரூ5000 மேல் கட்டண வித்யாசமிருந்தது. இதனால் நாங்கள் இண்டிகோவை தேர்வு செய்தோம்.
துபாய் பணம் - திராம்;. ஒரு திராம் 24ரூ முதல் 25ரூ வரை. (கூடுதல்;தகவல் - 1966 ஆம் ஆண்டு வரை நமது நாட்டு ரூபாய் தான் பயன்படுத்திவந்தனர்.)
நேரம் - இந்திய நேரத்திலிருந்து ஒன்றரை மணிநேரம்., பின்னே உள்ளது. உதாரணம் – காலை 9 மணி இந்தியா துபாய் -காலை 7.30 மணி. International Pack போட்டால் Land ஆனவுடன். நம் கைபேசியில், Home என்று நம்முடைய நாட்டு நேரமும். அருகிலேயே துபாய் நேரமும் பார்க்க முடியும்.
பயணதகவல். (நாள் ஒன்று)
Air Way Chennai to Dubai.
5ஆம் தேதி காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து, விஜயலெஷ்மி என்ற டிராவலருடன் 33 நபர்கள் சுற்றுலாவாக துபாய் மற்றும் அபுதாபி பயணித்தோம். நான்கு மணிநேரம் பயணம். ஆனால், fog காரணமாக எங்களுடைய விமானம் ஷார்ஜாவில் இறங்கிவிட்டது. ஒரு மணிநேரம் நாங்கள் ஷார்ஜா ஏர்போட்டிலிருந்துவிட்டு, பின் துபாய் சென்றடைந்தோம்.
குருஸ் இரவுச்சாப்பாடு.
பயணதிட்டத்தில் எதாவது போட வேண்டும் என்பதற்காகவே போட்டது போல் ஒரு குருஸ் இரவு சாப்பாடு. குருஸ் மற்றும் சாப்பாடு இரண்டுமே சிறப்பாக இல்லை. சற்று மத்யமமே. Bangkok-ல் இருந்த குருஸ் இரவு சாப்பாடு மிக நன்றாகயிருந்தது.
நாள் இரண்டு
1.மிராக்கிள் பூந்தோட்டம். (Miracle Garden)
துபாய் என்பதே பாலைவனத்தில் உருவாக்கப்பட்ட நகரம். அதில் இவ்வளவு செழுமையாக பூந்தோட்டம் அமைத்திருப்பது மிராக்கிள்தான்.
2013 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தன்று இந்த பூந்தோட்டம் நிறுவப்பட்டது. 780000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட இந்த பூந்தோட்டம், 50 மில்லியன் பூக்களையும், 250 மில்லியன் பூ செடிகளையும் கொண்டது. இந்த பூந்தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை செயல்படுகிறது. மே முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக வெட்பநிலை காரணமாக மூடப்படுகிறது. 40 டிகிரி சென்சியஸ் வரை வெப்பம்மிருக்குமாம். இந்த பூந்தோட்டம் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையும். வாரஇறுதிநாட்களான சனியும் ஞாயிரும் காலை 9 மணிமுதல் இரவு 11மணிவரை செயல்படுமாம். பொது விடுமுறை நாட்கள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்தி இந்த தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.
2.குளோபல் வில்லேஜ்
1.பெக்ரைன், 2. பங்களாதேஷ் 3. சைனா, 4.எகிப்த், 5.இந்தயா, 6.ஈரான், 7. ஈராக், 8.ஜப்பான், 9.குவைத், 10. லெபனான் 11. மோராக்கோ, 12. ஓமன், 13.பாகிஸ்தான், 14. கத்தார், 15.ரஷ்யா, 16. சவுதி அரேபியா, 17. சௌத்கொரியா, 18 ஸ்ரீலங்கா. 19.சிரியா 20. தாய்லாந்து 21. துருக்கி, 22. யுனைடட் அரபி எமிரேட்ஸ் 23.ஏமன் போன்ற நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரங்கள், அதாவது இந்தநாடுகளின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அவர்களின் உடைகள், பயன்படுத்தும் பொருட்கள், அவர்களின் உணவு மற்றும் மருத்துவ மூலப்பொருட்கள் என்று விற்பனை மிக உற்சாகமாக நடை பெறுகிறது. நம்மூர் Exhibitionனில் உள்ளது போன்று ஒவ்வொரு நாடும் ஒரு Stall போன்றுள்ளது. உலகளவில் பல கலைஞர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த குளோபல் வில்லேஜை ஒருநாளைக்கு 40000 நபர்கள் பார்வையிட வருகின்றனறாம். துபாய் முனிசிபுல் அலுவலகம் முன்பு சிறியதாக தொடங்கப்பட்டு, தற்சமயம் பெரிய அளவில் இயங்குகிறது. சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சுற்றலாதலமான இந்த அடம். அவர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டித்தருகிறது. பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால், குறைந்தது நான்கு முதல் ஐந்து மணிநேரம் வேண்டும். பார்க்கும் ஆர்வமும், உடல் நலமும் உள்ளவர்களே, முழுமையாக பார்வையிடமுடியும்.
நாள் மூன்று. (அபுதாபி)
1.சுவாமிநாராயணா கோவில்
இந்த கோவில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த, ஆண்டே, 2.2 மில்லியன் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்ற துபாய் அரசர் 27 ஏக்கர் நிலத்தை இந்தகோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ரோஸ்நிற மனற்கல்லும், இத்தாலியிலிருந்து மார்புளும் கொண்டுவரப்பட்டு இந்த கோவில் எழுப்பப்பட்டது. 108 அடி உயரம் மற்றும் 262 அடி அகலம், 180 அடி வித் கொண்டு கட்டப்பட்டுள்ளது. யுனைடட் அரபு, UAE யுனைட்ட கிங்டம் UK, யுனைட்ட ஸ்டேட் ஆப் அமெரிக்கா USA, இந்தியா, ஆப்ரிக்கா, கல்இப் Gulf போன்ற நாட்டில் உள்ள 200 தன்ஆர்வலர்கள் அவர்களின் 690000 மணிநேரங்கள் செலவழித்துள்ளனர்.
திருப்பதி பாலாஜி பத்மாவதியுடனும், பூரிஜகன்நாதர் ஆகியோர் கருப்பு நிற கிரானைட்டில் உருவாக்கப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கேரள மாநிலத்திலிருந்து பஞ்சலோக சிலையாக பதினெட்டு படிகளுடன் அமைத்துள்ளனர்.
2. அபுதாபி பள்ளிவாசல்
இந்த பள்ளிவாசல் இந்தோனேசியாவில் அமைந்துள்ள பள்ளி வாசலின் சிறிய பிம்பமாகவே அமைத்துள்ளனர். டிசம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்டது. 12 ஹெக்டேர் நிலப்பரப்பளவிற்கு மேல் இதன் அளவு அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் அமைப்பதற்கான திட்டத்தை ஷெயிக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் என்பவர் உருவாக்கினார். 2004 ஆம் ஆண்டு இவர் மறைந்ததன் காரணமாக இவரது உடல் இந்த பள்ளிவாசல் முற்றத்தில் புதைக்கப்பட்டது
. எலிசபத் ராணி, US Vice President ஜோபைடன், நம் பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி ஆகியோர் இந்த பள்ளிவாசலுக்கு வருகைபுரிந்துள்ளனர்.
நாள் - நான்கு. BURJ KHALIFA
1. புர்ஜ்கலிபா.
2716.5 அடி உயரம் கொண்ட, உலகிலேயே மிக உயரமான இந்த கட்டிடத்தின் பெயர்தான், புர்ஜ்கலிபா. 163 மாடிகளை கொண்டது. 2004 செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு 2010 ஜனவரியில் இந்த கட்டுமானம் முடிவடைந்தது. சிக்காகோவில் உள்ள "ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெர்லிஸ்" என்ற கட்டடி கலைநிறுவனத்தின், "ஆட்ரியான் சிமித்" என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது. உயராமன இந்த இடத்திலிருந்து நீங்கள் இந்த துபாயை கண்டு ரசிக்கலாம். இந்த கட்டிடத்தின் முன்பகுதியே துபாய் மால், உலகளவில் மிக புகழ்பெற்ற மால்.
துபாய்மால் புகைப்படம் மற்றும் காணொளி.
2. பாலைவனத்தில் பயணம்.
மாலை 4 மணிக்குதான் நாங்கள் பாலைவன பயணத்திற்கு கிளம்பினோம். வெய்யில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதற்காக, இரவு உணவு, கேளிக்கைகள், அரேபிய உணவு வகைகள், ஆடைகள் விற்பனை, ஒட்டகசவாரி, ஜீப்பில் மணல் மீது செல்லும் அனுபவம் இவைகளை உள்ளடக்கியதே, பாலைவனபயணம். பாலைவனத்தில் சாலை அமைத்து, மிக பெரிய கட்டிடங்கள் கட்டி, நீர்நிலைகளை உருவாக்கி, செடி மரங்களை வளர்த்து, உருவாக்கிய இடமே இந்த துபாய். நாங்கள் ஒரு ஜீப்பில் குறைந்தது 5 நபர்கள் என்று திட்டமிட்டு கிளம்பினோம். சாலை பயணம் முடிவடைந்தவுடன், ஒரு சிறிய ஓய்விடங்களுக்கு எங்களை அழைத்து செல்கின்றனர். அங்கு நாம் டீ மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு நம்மைதயார் செய்துகொள்வதற்குள். அவர்கள் கொண்டுவந்த வண்டியை பாலைவனத்தில் ஓட்ட தயார் செய்கிறார்கள். எப்படி என்றால் டயரில் உள்ள காற்றை மிக குறைந்த அழுத்தத்தில் வைக்கிறார்கள். பின் ஓட்டுகிறார்கள். இங்கு ஓட்டுவது என்பது மிகவும் ஒரு திறமையான செயல்தான். பயணிப்பதும், கடினமான அதே நேரத்தில் வித்தியாசமான ரின்பமான அனுபவம்.
வாந்தி வருவதற்கு, மலம் மற்றும் சிறுநீர்கழிக்பதற்கான உணர்வை அதிகமாக உண்டாக்கக்கூடியது. அப்படி உங்களை அறியாமல் நீங்கள் இந்த செயலை செய்து விட்டால், சுத்தம் செய்வதற்கான கட்டணம் மிக அதிகம். ஒட்டக பயணம் என்பது எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் யாக் சவாரி, ஒட்டகசவாரி, குதிரைசவாரி, யானை சவாரி; என்று பலகையான சவாரிகள் செய்துள்ளோம்.
நாள் ஐந்து.
1.துபாய் நகர சுற்று.
பெரும்பாலும் பேருந்தில் பயணித்து கொண்டே அனைத்து இடங்களை பற்றியும் விவரிப்பார்கள். சில இடங்களுக்கு மட்டுமே நாம் சென்று பார்க மிக குறைந்த நேரம் அனுமதிப்பார்கள். எல்லா வெளிநாட்டு பயணங்களும் இப்படிதான். அனைத்து ஆர்கனைசர்களும் இப்படி தான் திட்டமிடுவர்.
கடற்கரை மற்றும் சில அரசு கட்டிடங்கள், பார்லிமென்ட், அரண்மனைகள் மற்றும் மிக பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் என்று நாங்கள் சுற்றிப்பார்தோம்.
2.கோல்ட் சௌக்
துபாய் பயணமும், நகை வாங்குதலும் இணைபிரியாத செயல்களாக மக்களிடத்தில் உள்ளன. இங்கு நகைவாங்குதல் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை லாபகரமானதாகயிருந்திருக்கலாம். ஆனால் தற்சமயம் இந்திய அரசு ஆண்களுக்கு 50ஆயிரம் மதிபிலான தங்கமும், பெண்களுக்கு 1லட்சம் மதிப்பிலான தங்கமும் வாங்க அனுமதிக்கிறது. இங்குவிற்பனை செய்யும் தங்கம் மிகதூய்மையானதாம். அதற்குமேல் நீங்கள் வாங்கினால், அதற்கான வரி மிக அதிகம் என்று எங்களின் துபாய் Guide விளக்கம் கொடுத்தார். பெரும்பாலான பயணிகள் தங்க நகை வாங்கினர். நாங்கள் சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று என்று, இங்கு சென்று சில புகைபடங்கள் எடுத்தும், இடத்தை சுற்றிபாரத்து மகிழந்தோம்.
துபாய் பிரேம்
உயரமாக கட்டிய பெரிய நுழைவாயில். இதன் மேல் சென்று இந்த நகரத்தை பார்கலாம். கண்ணாடி பிரிட்ஜ் போன்றுள்ளது.
பயண அனுபவம்.
எப்பொழுதும் போல் நம் நாட்டு பயணம் போன்று எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கவில்லை. பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது பாராட்டுதலுக்குரியது. இங்கு அதிகமாக நான் வேப்பமரத்தை கண்டு அதிசயித்தேன். 80களில் சிறியம்மையால் இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும். அதன் பிறகே வேப்பமரத்தின் பயன்கருதி வளர்பதாக கைடு தெரிவித்தார். நகரம் பச்சை பசேல் என்றுள்ளது. சுத்தரிக்கப்பட்ட நீரை பயன் படுத்தும் அவர்களின் திறமை என்னை மிகவும் கவர்ந்தது. நகரில் கடலில் பின்தங்கிய தண்ணீரை வைத்து, ஏரிகளும் ஆறுகளும் மிக தூய்மையாக பராமரித்து அழகுசெய்துள்ளது, அவர்களின் கட்டுப்பாட்டிற்கு ஒரு ஜே போடவைத்தது. அனைத்து வளங்களும் நிறைந்த நம் பாரதத்தை நினைத்து ஏக்க பெருமூச்சை வரவழைத்தது. 10ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.