மயிலாடுதுறை மாயுரநாதர்

 மயிலாடுதுறை மாயுரநாதர் (தரிசனம்-28.1.2026- மாலை)

தமிழ்நாட்டில்,  மயிலாடுதுறை என்ற ஊர். மாவட்டதலைநகரம்.

கோவில் சிறப்பு.

திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அவர்களால் பாடப்பெற்ற தலம். அம்பிகை இறைவனை மயில்வடிவில் வந்து வழிபட்ட தலம். காசிக்கு சமமான தலங்களில் ஒன்று.

பஞ்சகாசிதலங்கள்.

மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு, திருவையாறு, திருவாஞ்சியம் , திருச்சாய்காடு  என்ற தலத்தையும் சொல்வர்.

தலபுராணம்

பார்வதி தேவி தந்தையான தட்சன்; நடத்திய யாகத்திற்கு சிவபெருமானை அழைக்கவில்லை. இதைகேட்க பார்வதி பிறந்த வீடுசெல்லயத்தனிக்கிறார். சிவபெருமான் போகாதே என்ற தடுத்தும் சென்றதால், மயிலாக பூமியில் பிறக்க செய்கிறார் சிவபெருமான். பூலோகத்திலுள்ள பல சிவஷேத்திரத்தை பார்வதி வழிபடுகிறார். அவற்றில் ஒன்று சென்னை கபாலீஸ்வரர் கோவில். இந்த மயிலாடுதுறையிலும் வழிபட்டு பின் சாபவிமோசனம் பெறுகிறார் பார்வதி தேவி.

மாயுரநாசுவாமி சமேத அபயாம்பிகை என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

திருவையாறு, கூறைநாடு, மூவலூர், சோழம்பேட்டை, துலாக்கட்ட கோவில், சித்தர்காடு. இந்த ஏழர் கோவில்கள் அனைத்தும் இந்த தலத்தில் சங்கமிக்கும் சப்தஸ்தானம் என்ற (ஏழுர்) விழா நடைபெறுகிறது. 

துலாஸ்நானம்

ஓவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாகட்டத்தில் முப்பது நாட்களும் தீர்த்தவாரி நடைபெறும். 26,27,28 என்ற மூன்று நாட்களும் நாங்கள் மாயவரத்தில் தங்கி மேற்கண்ட தலங்களை தரிசனம் செய்தோம். எங்கள் பட்டியலில் மயுரநாதரை கடைசியாக வழிபடுவது என்று தீர்மானித்தபடி சிறப்பாக நிறைவுபெற்றது. 

நான் சந்தித்த ஒரு விசித்திரமான பெண். 

அம்மன் சன்னிதானத்தில் ஒருவயதான பெண்மணி  கோலம்போட்டுக்கொண்டிருந்தார். மிகசிறப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும், நல்ல திருத்தமாகயிருந்தது அவரின் கோலம். அதுமட்டுமல்லாமல் சில வாசகங்களையும் எழுதியிருந்தார் அவைகளும் மிக நன்றாகயிருந்தது. யாரிடமும் அவர் எதையும் கேட்கவில்லை. நானாக சென்று ஏதாவது வாங்கி கொள்கிறீூர்களா? என்று கேட்டான். உடனே உங்களை போல் உள்ளவர்கள்  கொடுப்பதை கொண்டுதான் நான் வாழ்கையை நடத்துகிறேன் என்று வாங்கிகொண்டார். அவருடன் ஒரு சுய புகைப்படம் எடுத்துகொள்ள முயன்ற சமயம். நான் புகைப்படம் எடுத்து தருகிறேன் என்று சுறி ஒருவர் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்சியளித்தது. வீடுயில்லாமல் ஒருபெண் பொதுயிடத்தில் தங்கும் சிரமத்தை நினைத்து அவருக்காக அம்மனிடம் பிரார்தனை செய்துகொண்டேன். உறவுயிருக்கும் ஆனால் ஏதோ சுயகௌரவத்துடன் வாழநினைக்கும் லட்சிய பெண்ணாகத்தான்யிருப்பார்.

எழுதியவாசகங்கள் மற்றும் அவர் போட்ட கோலம்.





நான் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...