செதலப்பதி (எ) திலதர்பணபுரி (தரிசனம -27.1.2026 -Morning)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம், செதலபதி ஊர் பெயர். கூத்தனூர் சரஸ்வதிகோவிலருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவில் அமைந்தயிடம்தான், செதலபதி. திலதர்ப்பணபுரி என்றால் அதிகமான மக்களுக்கு தெரியும். நாங்களும்யிந்தயிடத்திற்கு சென்ற பிறகுதான். ஆதிவிநாயகர் கோவில் அருகில் உள்ளதுதான்யிந்த செதலபதி என்பரை புரிந்துகொண்டோம். நாங்களும்யிந்த ஆலயத்தை ஏற்கனவே இரண்டுமுறை தரிசனம் செய்துள்ளோம். தேவாரபாடபெற்ற தலம் வரிசையில் இந்த ஆலயம் செதலபதி என்ற குறிப்பிடப்பட்டிருந்தது.
நாங்கள் பாண்டிச்சேரியில் 2003 ல் வந்ததிலிருந்து, பெரும்பாலாண ஆண்டு தைவெள்ளி அல்லது ஆடிவெள்ளி சரஸ்வதி கோவிலும், திருமீய்சூர் லலிதாம்பிகை கோவிலும் சென்றயிருக்கிறோம். (பொது பேருந்து, வாடகை கார், சொந்த கார் ஓட்டுனருடன், பின் நாங்கஓட்டிசென்று) இவ்வாறு 23 ஆண்டுகளில் குறைந்தது 19 ஆண்டுகள் சென்றிருப்போம். திருமீயச்சூரும் தேவார திருத்தலமே.
கோவில் சிறப்பு.
தேவார திருத்தலத்தில, காவிரிதென்கரையில் 58வது திருத்தலம். பொற்கொடி (எ) சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் (எ) மந்தாரவணேஸ்வரர். என்ற நாமங்களில் இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராமர் மற்றும் பிதுர்லிங்கங்களின் சன்னதியுள்ளது சிறப்பானது.
இத்தல அம்மன் சொர்ணாம்பிகை, லெஷ்மியாகவும், கூத்தனூர் சரஸ்வதி சரஸ்வதியாகவும், திமீச்சூர் அம்மன் துர்கையாகவும், இந்த பகுதி முப்பொரும் தேவியின்யிருப்பிடமாக உள்ளது.
தலவரலாறு
ஸ்ரீமன்நாராயணரின் அவதாரமான ராமய,லெஷ்மணர்கள்யிந்தயிடத்தில் அவர்களின் தந்தை தசரதனுக்கு திதி கொடுத்தயிடம். இதன் காரணமாகயிந்தயிடம் திலதர்பணபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆதிவிநாயகர்
கோவில் வாசலில் ஆதிவிநாயகர் சன்னதியுள்ளது. இதைவைத்தேயிந்த பகுதி ஆதிவிநாயகர் கோவில் என்று மிகபுகழ்வய்ந்தது. பெயர்பலகைகள் அனைத்தும் ஆதிவிநாயகர்கோவில் செல்லும்வழி என்றேயிருக்கும். விநாயகரின் தலை கொய்து யானை முகம் வருவதற்கு முன்பிருந்த மனிததலையுன் விநாயகர் அருள்புரிகிறார். மிகவும் தொன்மைவாயிந்ததுயிந்த கோவில். அருகில் பாடசாலையிருக்கும். அதுவும் நன்கு வளச்சயடைந்துள்ளது.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.









No comments:
Post a Comment