அனந்தமங்கலம் அகஸ்தீஸ்வரர் (தரிசனநாள்-1.1.2026)

அமைவிடம்

ஆனந்தவல்லீ சமேத அகஸ்தீஸ்வரர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனந்தமங்கலம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டிவனதிலிருந்து, திருவண்ணாமலை செய்யாறு வழிதடத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

1097 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது, கடல் மட்டத்திலிருந்து,  109 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் மலை கோவில் என்று அழைக்கப்படுகிறது. 1221-ல் மூன்றாம் ராஜராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது இந்த சிவாலயம். தற்சமயம் சென்னை சுப்ரபாதம் பில்டர்ஸ் அவர்களால் புனரமைக்கப்பட்டு, 2008 மற்றும் 2013-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சமீபமாக 17.2.2022-ல் ராஜகோபுரத்துடன் மூன்றாவது முறையாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேல்மருவத்தூர் வரும் பக்தர்களின் வருகை மிக அதிகமாக உள்ளது.

நன்கு பெரிய சயனகோலத்தில் உள்ள பெருமாள் சன்னதி, பிரம்மா, பாதாள விநாயகர், முருகன், தட்சிணாமூர்தி, துர்கை மற்றும்  சண்டிகேஸ்வரர் என்று பல இறை சன்னதிகளுடன் காட்சி தருகிறது இந்த கோவில். 

பயண அனுபவம் 

ஆங்கில புத்தாண்டு அன்று நாங்கள் புதுச்சேரியிலிருந்து, பெங்களுரு பயணித்தோம். 1.அனந்தமங்கலம் 2. தாமல் தாதோதரபெருமாள், 3. தாமல் வராகீஸ்வரர் என்ற சிவன் கோவில் என்று மூன்று ஆலயங்களை வழிபட்டு சென்றோம்.















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...