• ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் (தரிசனம் 29.1.2026- மாலை)
• அமைவிடம்
• திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சிவாலயம். திருவாரூரிலிருந்து 15கி.மீ. தொலைவில் உள்ளது.
• தலபுராணம்.
• உலகமே அழிந்தவிட்டபோது, அம்மையும் அப்பனும், கைலாயத்திலிருந்து, புறப்பட்டுயிந்த பூவுலகிற்கு வந்தனர். காசி என்ற நகரம் அழியாதிருந்ததை பார்த்து, வேறு எந்தயிடங்கலெல்லாமல் அழியாதுள்ளது என்று பார்கையில் இயற்கைவளத்துடன் இருந்த ஸ்ரீவாஞ்சியம் என்ற இடத்தை நன்கு ரசித்து, அவர்ளும் இந்த ஊரில் தங்கிவிட்டனர் என்று புராணம் கூறுகிறது. இக்கோவில், அம்மையும் அப்பனும் லிங்கருபமாகவும், சிலையாகவும் வீற்றிருக்கின்றனர். ஏன்பது தொன்மை புராணம்.
• எமன் திரிசனம் செய்தயிடம்.
• எமன் திருவாரூர் தியாகேசரிடம் எனக்கு மற்றவர்களின் உயிரை பறிக்கும்யிந்த பதவியை ஏன் கொடுத்தாய். என்னை அனைத்து மானிடர்களுமே வெறுக்கின்றனர். கொலையுண்டவர்களால் எனக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பலவாராக இறைவனிடம் கூறிவருத்தமுற்றார். உடனே இறைவனின் குரல் அசரீரியாக எமனிடம் வந்து, ஸ்ரீவாஞ்சியம் சென்று சிவவழிபாடு செய்யும் படி கூறியது. அதன்படி வழிபட்ட எமனுக்கு உனக்கு எந்த தோஷமும் மனசஞ்சனலனமும் ஏற்படாது என்று கூறிவிட்டு, இத்தல ஸ்ரீவாஞ்சியத்தில் எமனை வழிபட்டு பின்னர் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு, எமபயம் ஏற்படாது என்றும், இறுதிகாலத்தில், உயிர்பிரிவால் எந்த துன்பமும் ஏற்படாது என்று சிவபெருமான் அருள் செய்கிறார். கோவில் நுழைந்தவுடன் முதலில் நாம் எமனை வழிபட்டு பின்னர்தான், சிவபெருமானை வழிபட வேண்டும,; என்பதுயிக்கோவில்நியதியாக உள்ளது. ஊர்களில் ஏற்படும்யிறப்பு அன்று பிணம் எடுத்து செல்லும்வரை கோவில் கதவு அடைக்கப்படும். ஆனால்யிந்த கோவிலில்; மட்டும் இந்த பழக்கம் பின்பற்றுவதில்லை.
• கோவிலின் மற்ற சிறப்புகள்.
• காசிக்கு ஒப்பான தலம்
• சுயம்புலிங்கம்.
• பிரிந்த திருமகளை மீண்டும் அடைய மகாவிஷ்ணு வழிபட்ட தலம்.
சித்ரகுப்பதனுக்கும், எமனுக்கும் தனி சன்னதியுள்ளது.
1. இத்தல இறைவனை கங்கை வழிபட்டாள். தீர்தம் கங்கை தீர்தம்.
2. சண்டிகேஸ்வரர் எம சண்டிகேஸ்வரர் என்ற அழைக்கப்படுகிறார்.
3. மங்களநாயகி சமேத வாஞ்சிநாதராக அருள்பாலிக்கிறார்.
4. ஞானசம்மந்தர், அப்பர்பெருமான், சுந்தரமூர்த்தி இவர்களால் பாடப்பெற்ற தேவார திருத்தலம்.
5. மாணிக்கவாரசர் இத்தலத்ததை கீரத்திஅகவலிலும், திருக்கோவையிலும் போற்றியுள்ளார்.
6. ஆக்நேயபுராணம், பிரம்மாண்டபுராணம், ஸ்கந்தபுராணம் ஆகிய நூல்களில் இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது,
7. அருணகிரிநாதரால் திருபுகழ்பாடப்பெற்ற தலம்.
8. வள்ளல் பெருமான் (ராமலிங்கஅடிகள்) கலிவெண்பாவில் இக்கோவிலை போற்றியுள்ளார்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.













No comments:
Post a Comment