திருவீழிமிழலை விழிநாதேஸ்வரர் (தரிசனம்-27.1.2026 -காலை)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம்இ திருவீழிமிழலை ஊர் பெயர். கும்பகோணம் பூந்தோட்டம் சாலையில் செல்ல வேண்டும்.
காவிரி தென்கரை 61 வது தேவாரத்திருத்தலம். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
திருமால் வழிபாடு
சக்ராயுதம் வேண்டி திருமால் ஈஸ்வரனை வழிபட்ட நேரத்தில் அர்சிக்க பூ குறைந்ததால் அவரின் கண்ணையே எடுத்து அர்சித்ததாக ஒரு வரலாறு உண்டு. இதே வரலாறு திருமால்பூர் என்றயிடத்திலும் சொல்லப்படுகிறது. திருமால்புரில் சிவன் சன்னதி எதிரே பெருமானுக்கு ஒரு சன்னதியுண்டு (திருமால்பூர் - என்னுடைய வலைபதிவுள்ளது).
பெருமிழலைகுறும்பர்
என்று ஒரு யோகியிருந்தார். அந்த நேரத்தில் திருகுருக்கைபள்ளி என்றுயிந்தயிடம் அழைக்கப்பட்டது. ஞானசம்மந்தர் தேவாரபாடலில் திருகுறுக்குப்பள்ளி என்று குறப்பிடுகிறார். சுந்தரமூர்திசுவாமிகளையே தெய்வமாக வழிபட்டவர குறும்பர்.
திருவீழிமிழலை வவ்வால் மண்டபம்
இந்த கட்டிடகலை மிகவும் சிறப்பு மற்றும் புகழ்வாய்ந்தது. கிராமத்தில் வவ்வால்வொட்டு பாணியில் வீடுயிருந்தால் இந்த கோவில் கட்டடித்தை ஒப்பிட்டு பெருமைகொள்வர்.
அப்பரும் ஞானசம்மந்தரும் படிகாசு பெற்ற தலம்.
பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களின் பசி நீங்க இறைவனிடம் ;மக்களுக்காக அப்பரும்இ ஞானசம்மந்தரும் படிகாசு பெற்றனர்.
நான் அறிந்ததிருவீழிமிழலை.
நான் ஒரு வானொலிநேயர். நாதஸ்வரவித்வான் திருவீழிமிழலை சுப்ரமணிப்பிள்ளை நடராஜபிள்ளை சகோதரர்கள் என்று வானொலியில்யிந்த ஊரின் பெயர் கேட்டுள்ளேன். இந்த ஊரின் பெயரை வாசிப்பது சற்று சவாலாகயிருக்கும். இதை உச்சரிப்பது எனக்கு பிடிக்கும். நான் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் இளையபாரதநிகழ்சிக்காக திருச்சிராப்பள்ளி வானொலியில் குரல் தேர்வுக்கு சென்ற நேரம் இந்த ஊரின் பெயரை என்னை படிக்க சென்னார்கள். மீண்டும் 2011 ஆம் ஆண்டு புதுச்சேரி வானொலியில் பகுதிநேர செய்திவாசிப்பாளர் தேர்விலும் நான் இப்பெயர் கொண்ட எழுத்துபடிவம் வாசித்தது என் வாழ்நாள் நினைவலைகள்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.




























No comments:
Post a Comment