தேரழந்தூர் தேவாதிராஜன் பெருமாள் (தரிசனம் -26.1.2026 மாலை)
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டததில் தேரழுந்தூர் என்ற யிடத்தில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு
1.திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்.
2. சாளகிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட கோவில்.
3. மூலவர் தேவாதிராஜன். உற்சவர் ஆமருவியப்பன். தாயார் செங்கமலவல்லி.
தலபுராணம்
பெருமானும் சிவனும் சொக்கட்டான் ஆடிய சமயம் பார்வதிதேவியே நடுவராகயிருந்தார். அண்ணன் மீது கொண்ட பாசம் காரணமாக பெருமானுக்கே சாதகமான வெற்றிய அறிவித்தார். கோபம் கொண்ட இறைவன் பார்வதிதேவி பசுவாகமாற சாமிட்டார். லெட்சுமியும், சரஸ்வதியும் அவருக்கு துணையாக இங்கு வந்தனர். இந்த மாடுகளை மேய்பவனாக ஆ மருவியப்பன் என்ற பெயரில் வந்த தலம்.
கவிசக்கரவர்த்தி கம்பர்
அவர் பிறந்த ஊர் என்பதால் கம்பருக்கும் அவர் மனைவிக்கும் சன்னதி அமைத்துள்ளனர். நாங்கள் இரவு 7.30 மணிக்குமேல் சென்றோம். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அதனால் உற்சவர் தரிசனம் மட்டுமே கிடைத்தது. கோவில் அருகில் கம்பருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர் போலும், இரவில் அனைத்துயிடங்களுமே மின்சாரவிளக்கயிருந்தும் எனக்கு இருட்டாகவே இருப்பது போலிருந்தது. கம்பர் மணிமண்டபம் பராமரிப்புயில்லாமல் வீணடிக்கப்பட்டுயிருந்தது. அருகில் ஒரு பெரிய பெருமாள் கோவிலிருந்தது. தனியாருடையது போலும் ஆனால் நாங்கள் செல்லவில்லை. தேரழுந்தூரில் உள்ள சிவன் கோவில் தேவார பாடல் பெற்ற தலம்தான்.ஆனால் தரிசனம் செய்யவில்லை. நாங்கள் மீண்டுயிங்கு (தேரழுந்தூர்) வழிபட செல்வோம், இரண்டுகோவில்களையும்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவரத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள். கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.









No comments:
Post a Comment