அம்பர் மாகாளநாதர்

 அம்பர் மாகாளநாதர்- (தரிசனம்-27.1.2026 -காலை)

அமைவிடம்

திருவாரூர் மாவட்டம் அம்பர் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 

நாங்கள் அம்பர் கோவிலை தரிசனம் செய்துவிட்டு செதலபதி என்று வரைபடத்தை தேர்வு செய்து கிளம்பினோம். சில மீட்டர் தொலைவில் ஒரு கோவில் கோபுரம் தெரிந்தது உடனே நாங்கள் அங்கு சென்றோம். அதுவே இந்த அம்பர் மாகாளம். (சுயம்புநாதேஸ்வர்கோவில் அர்சகர் கூறியது, அம்பர், செதலபதி, திருவீழிமிழலை மூன்றும்தான்.)

கோவில் சிறப்பு 

1.கிழக்குமுகம்  நோக்கிய சுயம்பு சிவன். 

2.திஞானசம்மந்தரால் மூன்று பதிகங்கள் பாடப்பெற்ற தலம்.

3.மதங்க முனிவர் அவர் தவ வலிமையால் ராஜமாதங்கி என்ற பராசக்தியையே மகளாக பெற்று ஈசனுக்கு மணமுடித்துவைத்த தலம். இக்கோவில் ஈசன் மற்றும் அம்பிகை மணக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.

4. அம்பிகை அம்பாசுரனை அழித்ததால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்க மணலில் லிங்கம் பிடித்து வழிபட்ட தலம். 

5. ராகுவும், கேதுவும் இந்த மாகாகளரை பூஜித்தனர்.

6.காசியிலிருந்து குழந்தை பேறு வேண்டி வந்த ஒருவருக்கு இத்தல இறைவன்  ஆண்குழந்தையை அருளினான். மஹாதேவன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

7. மனிதனின் ஆயட்காளத்தை நீட்டிக்ககூடிய தலங்கள் 3 1. உஜ்ஜயினி மகாகாளேஸ்வர், 2. இந்த அம்பர் மாகாளம,;3. இரும்பைமாகாளம் (விழுப்புரம், புதுச்சேரி அருகில்); 

8.சோமாசிநாயனார் சோமயாகம்செய்தயிடம். சிவபெருமானே அவிற்பாகம் பெற்று கொண்டார்.

9. ஆதிவிநாயகர் (மனிதமுகத்துடன்) அதிமுருகன் சன்னதிகள் உள்ளன. 

சோமாசிநாயனர்

அவர் அவதரித்தயிந்த அம்பர் என்ற ஊரில் சோமயாகம் செய்து சிவபெருமானே அவிற்பாகம் நேரடியாக வாங்கி கொள்ள விரும்பினார். திருவாரூரில் உள்ள சுந்தரர் பற்றி அறிந்து அவரிடம் சொல்லி சிவபெருமானை நேரடியாகயிந்த யாகத்திற்க்கு ஈசனை அழைத்து வந்தார். ஆனால் ஈசன் இந்த யதகத்திற்க்கு வந்த போது, நான்கு வேதங்களை நான்கு நாய்களாகவும். இறந்த கன்றின் தோலை தோளில் சுமந்துகொண்டும், பார்வதி மதுக்குடத்தை தலையில் சுமந்து கொண்டும் வந்தார். தாரை தப்பட்டை முழக்கத்துடன் சிவபெருமான் யாகத்திற்கு வந்தார். அங்கிருந்த அந்தணர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். விநாயகர் சோசிநாயனாரிடம் வந்திருப்பது இந்த ஈஸ்வரனே என்று கூறியதும், சோமாசிநாயனார் இறைவனை வணங்கினார். அவிற்பாக வாங்கி கொண்டபின்னர் இறைவன் அனைவருக்கும் ரிஷபவாகனத்தில் அம்பிகையுடன் காட்சி கொடுத்தார்.

என்கணவர்யிந்த கோவில் அர்சகரிடம் இக்கோவில் வரலாறு கேட்டார். ஆனால் அரசகர் கோவில் பணியாளர் ஒருவரை அழைத்து வரலாறு கூறசொன்னார். ஆவர்கூறியதையே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். பின்னர் அந்த பணியாளர்,  6.2.2026 அன்று நடக்கவிருக்கும் கும்பாபிஷேக பத்திரிக்கையை கொடுத்தார். மற்றும்2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சோமயாகம் நடந்த பழைய பத்திரிக்கையையும் கொடுத்தார்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...