ஜகத்ரட்சகபெருமாள்

 ஜகத்ரட்சகபெருமாள் (தரிசனம்-26.1.2026)

அமைவிடம்

திருவையாறு கும்பகோணம் சாலையில் 11 கி.;மீ. தொலைவில் 

ஆடுதுறை என்ற ஊரில் உள்ளது இந்த திவ்யதேசம். மாவட்டம் தஞ்சாவூர்.

புராணகால பெயர் திருகூடலூர்.  தமிழில் வையம்காத்த பெருமாள், தாயார் பத்மாசினி தாயார். உற்சவர் புஷ்பவல்லி தாயார். திருமங்கையாழ்;வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டயிந்த கோவிலில், கோவிலை புனரமைத்த ராணிமங்கமாவின் உருவம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வராக அவதாரம் எடுத்து இரண்யாசுரனிடமிருந்து பூமியை காத்துயிங்கிருந்தமையால் ஜகத்ரட்சக பெருமாள் என்று பெயர்பெற்றார்.

நந்தகமுனிவர் தேவர்களுடன் சேர்ந்துவந்து இந்த பெருமாளை வழிபட்டதன் காரணமாக கூடலூர் என்ற பெயர் பெற்றது. 

காவிரி தண்ணீரில் மூழு;கி மணல் மேடாகயிருந்த இத்தலம், ராணிமங்கமாவின் உதவியால் புனரமைக்கப்பட்டது. 

அம்பரீசன் (மாயவரத்தை ஆட்சி செய்து பரிமளரங்கர் அருள்பெற்ற அரசன்) திருமங்கையாழ்வார், பிரம்மா, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் வழிபட்ட தலம்.

பலா மரத்தில் சங்கு தோற்றம்

இத்தல விருட்சம் (மரம்) பலா. இந்த மரம் நூற்றாண்டுகளை கடந்த மரம். இம் மரகிளையில் திருமாலின் சங்கு வடிவம் காட்சி கிடைக்கிறது. இன்றளவும் நல்ல பழங்களை இந்த மரம் தருகிறது.பெருமாளின் சக்கரம் துர்வாச முனிவரை விரட்டி சென்றதன் காரணமாக சங்கு இந்த மரத்தில் குடிகொண்டதாக புராணம் கூறுகிறது. 

இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வடகுரங்காடுதுறை ஸ்ரீதயாநிதீஸ்வரர் இறைவனை ஷேத்தி;ர தரிசனத்தில் இரண்டாவதுமுறை தரிசனம் செய்தோம். பிளாக் எழுதியுள்ளேன்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள்(வரகூர் வெங்கடேசபெருமாள் என்று என்னுடைய பிளாக் உள்ளது)   கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி)



 அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...