கபிஸ்தலம் கஜேந்திர வரதராஜ பெருமாள் (தரிசனம் 26.1.2026-காலை)
அமைவிடம்
தஞ்ஐhவூர் மாவட்டம், கும்பகோணம் திருவையாறு சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலேயே காசிவிஸ்வநாதர் ஆலயமும் உள்ளது.
இத்தல கஜேந்ர வரதரராஜபெருமாள் ஆதிமூலம் என்று அழைக்கப்படுகிறார். ரமாமணிவல்லி மற்றும், பொற்றாமரையாள் என்று இரண்டு நாமங்களில் தாயார் அருள்பாலிக்கிறார்.
கோவில் சிறப்பு
திருமழிசை ஆழ்வாரால் மங்களாசானம் செய்யப்பட்ட ஆலயம். பஞ்ச கிருஷ்ணஷேத்திரத்தில்ஒன்று. (கபிஸ்தலம், திருக்கோவிலூர், திகண்ணங்குடி, திருகண்ணமங்கை, திருக்கண்ணபுரம் - பஞ்சகிருஷணர ஷேத்ரங்கள்;)
பெயர்காரணம்
கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமானின் தரிசனம் பெற்றயிடமாதலால், கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
இந்திரஜயும்னன் என்ற அரசன் பெருமாள் மீது மிகுந்த பக்திகொண்டவன். அவன் பெருமான் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சமயம். துர்வாச முனிவர் வந்தார். பக்தியில் திளைத்திருந்த மன்னன் முனிவரை கவனிக்கவில்லை. ஆதனால் கோபம் கொண்ட முனிவர் மன்னனை யானையாக பிறக்க சாபமிட்டார். முனிவரிடம் சாவிமோட்சனம் வேண்டிய மன்னனுக்கு பெருமாள் மூலமே உனக்கு சாபவிமோட்சனம் கிடைக்கும் என்று கூறினார்.
அரக்கன் ஒருவன் குளத்தில் குளிக்கவருபவர்களை, காலைபிடித்து நீருக்குள்யிழுத்து துன்புறுத்திவந்தான். குளத்தில் குளிக்க வந்த அகத்தியரின் காலையும் பிடித்துயிழுத்தான். கோபம் கொண்ட அகத்திய முனி அவனை முதலையாக பிறக்க சாபம்மிட்டார்.
யானையாகபிறந்த கஜேந்திரன் பெருமாளுக்கு தாமரை மலரை சமர்பிக்க குளத்திலுள்ள மலரை பறிக்க வந்தது. அசுர முதலை யானையின் காலை கவ்வியது, வலி தாங்கமுடியாமல் யானை “ஆதிமூலமே” என்று பெருமானை அழைத்தது . பெருமாள் சக்ராயுதத்தால் முதலையை கொன்றார். யானை மற்றும் முதலையிரண்டிற்கும் சாபவிமோசனம் கிடைத்தது. இத்தல இறைவன் அந்த பெருமான் பெயரில் ஆதிமூலமாக அதாவது கஜேந்திர மோட்ச பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
காசிவிஸ்வநாதர் ஆலயம்
இந்த பெருமாள் கோவிலிலிருந்து, சிவன் கோவில்200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டீகேஸ்வரர், நந்தி, நடராஜர் என்று பல சன்னதிகளையும் உள்ளடக்கியிருந்தது இந்த கோவில். ஒருகால பூஜை நடைபெறும் கோவிலாக உள்ளது.
நாங்கள் எங்களின் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு மாயவரத்தில் முன்பதிவு செய்திருந்தறையை அடைந்தோம்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.








No comments:
Post a Comment