நன்னிலம் மதுவனேஸ்வரர் (தரிசனம்-29.1.2026-காலை)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ளது.
சுந்தரமூர்த்திநாயனாரால் பாடப்பெற்ற காவிரி தென்கரை 71வது தலம். மதுவனேஸ்வரர், கல்யாணசுந்தரர், பிரகதீஸ்வரர் என்ற திருபெயரில் அருள்பாலிக்கும் ஈசன் ஒரு சுயம்பு மூரத்;தியாவார். ஆம்மன் மதுவனேஸ்வரி.
தலபுராணம்
1.மகாமேருவின் ஒருபாகத்தை வாயுபகவான் எடுத்து செல்லும் நேரம் அதன் சிறுபகுதியிங்கு விழுந்ததாக தெரிகிறது. இந்த மேடான பகுதியில் கட்டப்பட்டதேயிந்தகோவில்.
2. கிருதாயுகத்தில், பிரஹத்ராஜன் என்ற அரசன் அவன் தவத்தின் பயனால், சிவபெருமானை, “தேஜோலிங்கமாக” காட்சிகிடைத்து வழிபட்டார்.
3. துவாபராயுகத்தில், தேவர்கள் அசுரர்களுக்கு பயந்து இத்லத்தில் தேனிக்களாக வசித்தனர். இதன் காரனமாகவே இத்தல சிவன் மதுவனேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். இன்றளவும்யிங்கு தேனிக்களின் கூடுகள் உள்ளன. கர்பகிரகம், மற்றும் பிராகாரத்தில் தேன் கூடுகள் உள்ளன. செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவிலாக உள்ளதுயிந்ததலம்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.












No comments:
Post a Comment