சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் (ம) சட்டைநாதர் (தரிசனம்-28.1.2026-காலை)
சீர்காழி என்ற நகரில் அமைந்துள்ளது.
தலசிறப்புகள்
1. நாவுக்கரசர், சுந்தரமூர்திநாயனார், ஞானசம்மந்தர் மூவராலும் பாடப்பெற்ற தேவாரதிருத்தலம்.
2. ஞானசம்மந்தர் ஞானப்பால் பெற்றயிடம், மற்றும் அவதாரத்தலம்.
3. பிரம்மன் வழிபட்ட தலம்
4. சிபிசக்ரவர்த்தி பேருபெற்ற தலம்.
5. “தோடுடையசெவியன்”; என்ற தேவாரத்தை உலகம் உய்ய ஞானசம்மந்தரால் பாடல் பெற்றயிடம்.
6. காவிரி வடகரையில் 14வது தேவாரத்திருத்தலம்.
7. மாணிக்கவாசகரால் திருவாசகமும் பாடப்பெற்ற தலம்.
8. இறைவன் திருநாமங்கள்- சட்டைநாதர், பிரம்மபுரீஸ்;வரர், தோணியப்பர். அம்மன் திருநாமங்கள் - பெரியநாயகி, திருநிலைநாயகி.
9. 1000 முதல் 2000 ஆண்டுகள்வரை பழமைவாய்ந்தது.
10. அருணகிரிநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், முத்துசாமிதாண்டவர், அருணாசலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை போன்றவர்கள் இத்தல இறைவனுக்கு பாமாமாலை கூட்டியுள்ளனர்.
தலபுராணம்.
இந்த உலகம் அழிந்த காலத்தில் (ஊழிகாலத்தில்)உமாமகேஸ்வரர், ஓம் என்ற பிரணவத்தை தோணியாக கொண்டு கடலில் மிதந்துவந்து இத்தலத்தில் (இந்தஇடத்திலிருந்து) மீண்டும்யிந்த உலகை உருவாக்கினார். இரண்யனின் உயிரை பரித்த நரசிம்மரின் எலும்பை கதாயுதமாகவும், தோலை சட்டையாக தரித்த வடுக நாதரேயிந்த சட்டைநாதர். சிவனின் பைரவமூர்திகிளில் ஒருவர். இவர் ஆபத்தாரணர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு
இக்கோவில் மாடக்கோவில் அமைப்பை சேர்ந்தது. ஞானசம்மந்தருக்கு தனி சன்னதியுள்ளது. முகப்பொருமானின் நாமங்களையே செல்லி பூஜிக்க்pன்றனர். ஞானசம்மந்தரை முருகப்பெருமானின் அம்சமாகவே பக்கதர்கள்; கருதுகின்றனர்.
சட்டைநாதர் தரிசனம் காலை 9.30 மணிக்குமேல்தான். நாங்கள் காலை 7 மணிக்கெல்லாமம் தரிசனத்திற்கு சென்று விட்டோம். ஆனால் இக்கோவிலை இரண்டு மூன்றுமுறைக்கு மேல், தரிசனம்செய்துள்ளோம்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
![]() |















No comments:
Post a Comment