திருபூந்துருத்தி (தரிசனம்-26.1.2026.-காலை)
அமைவிடம்
மேலை திருப்பூந்துருத்தியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இத்தலசிறப்பு
1. காடவநம்பியின் அவதார தலம். (ஒன்பதாம் திருமுறையாக போற்றப்படும் திருவிசைப்பா பாடல் எழுதியவர்களுள் ஒருவர் காடவ நம்பி)
2. திருநாவுக்கரரசர், அருணகிரிநாதர், இராமலிங்கடிகள்; இவர்களால் பாடப்பெற்ற தலம்.
3. சப்தஸ்தான தலங்களில் ஒன்று. (திவையாறு, திருப்பழனம்,திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி: திருகண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் என்ற (ஏழு) சப்தஸ்தான தலங்கள்
4. ஞானசம்மந்தர் பல்லக்கை அப்பர் பெருமான் தோளிற் சுமந்ததலம்.
5. இத்தல நந்தி விலகியிருக்கும் (அப்பர்சுவாமிகள் நடந்தயிடத்தில் ஞானசம்பந்தர் கால் வைக்க அஞ்சியதால் அவருக்கு தரிசனம் தர சிவபெருமான் நந்தியை விலசொல்லியதால் நந்திபகவான் சற்று விலகியிருப்பார்.)
6. அப்பர்பெருமான் திருமடம் உள்ள தலம். அங்கமாலை பாடிய தலம்)
7. தீர்தம் - சூரிய தீர்தம், காசிபதிர் தீர்தம், காவிரி, அக்னி, கங்கை தீர்தம். (கங்கை- இத்தலத்தில் உள்ள கிணற்றில் ஆடி மாதம் அம்மாவாசையன்று கங்கை நீர்பொங்கும்; அன்று நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். (காசியப்பர் முனிவரின் தவத்தை மெச்சி இறைவன் செய்த அருள்.
8. கூடுதல் தகவல் திருவிசைநல்லூர் - என்ற புண்ணிய தலத்தில் _ கார்திகை மாதம் ஸ்ரீதர்ஐயார்வாள் அவர்கள் வீட்டுக்கிணற்றில் கங்கை இன்றளவும் பொங்கி வருகிறது. பலரும் கார்திகை அம்மாவாசையன்று அங்கு நீராடுவர். 2003 -ல் நாங்கள் பாண்டிச்சேரிக்குவந்தவுடன், என்னுடையமாமனாரின் விருப்பத்திற்காக எனது கணவரும் எனது மாமனாரும் தொடந்து ஐந்து ஆண்டுகள் இங்கு சென்று கார்திகை மாத அம்மாவாசையன்று நீராடியுள்ளனர்)
9. மகிஷனை அழித்த பாவம் போக்க இத்தல துர்கை ஒற்றை காலில் தவம் செய்கிறார்.
10. சுயம்புமூர்தியான சிவபெருமான், புஷ்வனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் என்ற பெயர்களிலும், அம்பிகை சௌந்தரநாயகி, அழகால்அமர்ந்த நாயகி என்ற திருநாமங்களில் அருள்பாலிக்கின்றனர்.
11. தேவாரபாடல் பெற்ற தென்காவிரி தலங்களில் 11வது திருக்கோயில்.
நான்கு பிராகாரங்களை கொண்ட மிக பெரிய கோவில்;.
அப்பர்மடம்
உழவார பணிக்காக மடம் அமைத்த இடம். கோவிலில்லிருந்து 50 மீட்டர் தொலைவில் மடம் உள்ளது.
நாராயணதீர்தர் மடம்.
வரகூர் (வராகபுரி) என்னுடைய பிளாக் உள்ளது. அதில் நாராயதீரத்;தர் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுள்ளேன். அவரின் சமாதி இந்த திருபூந்துருத்தியில் உள்ளது. ஆண்டுதோறுமிங்கு திருவையாறு போன்று சங்கீத நிகழச்;சி மிக சிறப்பாக நடைபெறும். இவ்வூர் சற்று பெரியது. மேலதிருப்பூந்துருத்தி, கீழ திருப்பூந்துருத்தி என்று இரண்டு பிரிவாகயிருக்கும்.
நானும் திருப்பூந்துருத்தியும்.
என்னுடைய அப்பா இந்தவூரில் 6 ஆண்டுகள் (1966 -71 வரை) போஸ்ட்மாஸ்டராக பணியாற்றியுள்ளார். நான் பிறந்து ஐந்து ஆண்டுகள்வரை (என்குழந்தை பருவம்,ஒன்றாவது வகுப்பும்யிங்குதான்.) என்னுடன் முதல்வகுப்பு தோழி கற்பகம் வீட்டிற்கு சென்று அவளை பற்றி விசாரித்து, அவளின் தம்பி குடும்பத்தினர் மூலம் அவளின் கைபேசி எண் மற்றும் முகவரியை பெற்ற கொண்டேன். ( அவளது திருமணம்வரை நான் தொடர்பி;லிருந்தேன்.) போஸ்ட் மாஸ்டர் மகளுக்கு கடிதம் தொடர்பு மிக எளிதாகயிருந்தது. இந்த தரிசனம் மூலம் எங்களின் நட்பின் வளரச்;சி எனக்கு மகிழ்சியை தருகிறது. (இவ்வூர் பசுமை நினைவுகள் பல உள்ளன என் நினைவலைகளாக பத்து பக்கம் மிகாமல் எழுத தோன்றுகிறது)
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்தில் உள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள். கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.






















No comments:
Post a Comment