நரசபுரம் பார்கவநரசிம்மர் (தரிசனம் -20.1.2026)
அமைவிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்திலிருந்து, 7கி.மீ. தொலைவில் நரசபுரம் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த கோவில். கூகுள் மேப் இல்லைஎன்றால் எங்களால் இவ்வளவுயிடங்களுக்கு செல்ல முடியாது. பல சிறிய ஊர்களில் பெயர்பலகையுயிருக்காது. கேட்பதற்;கு மக்களும்யிருக்கமாட்டார்கள், அப்படியே சிலரை கேட்டாலும் அவர்களுக்கு ஒரு விபரமும் தெரியாது.
பெயர்காரணம்
புரம் என்ற சொல்லுக்கு காத்தல் என்று பொருள். இவ்வூர் மக்களக்கு துன்பம் கொடுத்த திருடர்களை மரத்தை பிடுங்கி விரட்டினாராம் நரசிம்மர். அதனால் இந்த ஊர் நரசபுரம் என்று அழைக்கப்படுகிறது
வரலாறு
இங்குள்ள பார்கவியாற்றில் சிலையாகயிருந்த நரசிம்மர. பஞ்சு வியாபாரியிடம் என்னை எடுத்து வழிபாடு செய் என்று கூறினாராம். நான் எப்படி உங்களை தூக்கி செல்வேன் என்று கேட்க நரசிம்மர் நான் பஞ்சு மூட்டைபோல்யிருப்பேன் என்று கூறினாராம். சிலையை பிரதிஷ்டை செய்து பிறகு பிரகாரத்துடன் கோவில் எழுப்பப்பட்டது. ஆபயவரத கரங்களுடன், சங்கு சக்கரம் ஏந்தி நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார் நரசிம்மர்.
நாங்கள் எவ்வாறு இத்தலம் அறிந்தோம்.
எனது மாணவியின் அம்மா. எனக்கு கோவில்கள்பற்றிய அறிய தகவல்கள் பல பகிர்வார். அவர் அனுப்புவதை. நான் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டவாரியானயிடங்கள் மற்றும், இந்திய மாநிலவாரிய சிறப்புயிடங்கள் இவற்றை நோட்டில் குறிப்பிட்டு வைத்துள்ளேன். பகுதிவாரியாக வைத்துள்ளதால், நாங்கள் செல்லும்போது அப்பகுதிடங்களை ஒரு குறிப்பெடுத்துக்கொள்வேன்.
பயண அனுபவம்
20 ஆம் தேதி பெங்களுரிலிருந்து, புதுச்சேரிக்கு பயணம்செய்யும் நேரத்தில் 1.ஐராவதேஸ்வரர் 2. பார்கவநரசிம்மர் என்று இரண்டு ஆலயங்களை வழிபட்டு புதுச்சேரியைஅடைந்தோம்.
பயணஅனுபவம்(2)
நாங்கள் சென்ற நேரம் கும்பாபிஷேகத்திற்கு இக்கோவில் தயாராகி கொண்டிருந்தது, (பிப்ரவரி 2)என்ற ஞாபகம். எங்களால் மூலவரை தரிசனம் செய்யமுடியவில்லை. ஒரு அரை மணிநேரம் காத்திருந்து உற்சவரை தரிசனம் செய்து கிளம்பினோம்.








No comments:
Post a Comment