கொண்டிசுரம் பசுபதீஸ்வரர்

 கொண்டிசுரம் பசுபதீஸ்வரர் (தரிசனம்-29.1.2026-காலை)

அமைவிடம்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. 

புராணப்பெயர் வில்வவனம். 

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். சோழநாடு காவிரி தென்கரை 72வது தலம். அம்பிகை பசுவடிவில் இத்தல இறைவனை பூஜித்ததார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  நாவுக்கரசரின் முக்திதலமான திருபுகலூர்  செல்வதற்க்கு முன்பு, இத்தலத்தை தரிசனம் செய்தார் என்று வரலாறு கூறுகிறது. சாந்தநாயகி சமேத பசுபதிநாதர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

சாபம் காரணமாக பார்வதிதேவி பசுவடிவில் இங்கிருந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜை செய்து சிவனைஅடைந்தார்.

ஜேஷ்டா தேவி சிலை உள்ளது சிறப்பாக உள்ளது இக்கோவிலில்.

எங்கள் பயணம்.

இந்த கோவிலை கண்டுபிடிக்க சற்று சிரமம் ஏற்பட்டது. மிகவும் உட்பகுதியில் அமைந்துள்ளது. 12 மணிக்கு மேல் ஆகிவிட்டதால், நாங்கள் தரிசனம் கிடைக்குமா? என்ற நோக்குடனே சென்றோம். எ திரில் ஒரு அர்சகர் வந்தார். அவரிடம் கேட்டதற்;கு பூர்ணாகுதி இனிமேல் தான்என்றார்.  நாங்கள் கோவிலில் ஏதோ விசேஷம் என்பதை புரிந்துக்கொண்டோம். அங்கு சென்றபிறகு “சம்பஸ்தராபிஷேகம்”; என்பதை தெரிந்துகொண்டோம். அதாவது கும்பாபிஷேகம் முடிந்து ஐந்தாம்ஆண்டு கும்பாபிஷேகவிழா தினம். இறைவன் அருளால், சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வதற்கும், அன்னம்பாலிப்பிற்கும் இறைவன் இத்தலத்தில் எங்களுக்கு அருள்புரிந்தார். சிவாயநமக.

நாங்கள் நேராக திருவாரூர் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, 4 மணிக்கு எங்கள் தலயாத்திரையை தொடர்ந்தோம்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...