மஸ்ரூர் ராக் கட் மந்திர் (Masroor Rock Cut Temple)

 மஸ்ரூர் ராக் கட் மந்திர். (நாள்-28.10.2025)

அமைவிடம்

ஹிமாசல் மாநிலம் பியாஸ் நதிகரையில், காங்கரா பள்ளத்தாக்கில் உள்ள மஸ்ரூர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு கற்கோவில். கங்கராவிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அடிப்படை செய்திகள்

 எட்டாம் நூற்றாண்டில் நாகரா கட்டிட கலை பாணியில் வெட்டப்பட்ட ஒரு இந்து கோவில். தொல்லியல் ஆராய்சியாளர்கள் , பெரிய திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கற்கோவில், பாதியிலேயே முடிவடைந்ததாக கூறுகின்றனர். இந்த ஊரில் இருந்த பல கலை பொக்கிஷங்கள். பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 1913 ஆம் ஆண்டு ஹென்றி ஷட்டில் வொர்த் என்பவர் தொல் பொருள் ஆராய்சியாளர்கள் கவனத்திற்க்கு கொண்டு வந்தார். 1915-ல் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த கோவில் மும்பை-யானை குகையையும், கம்போடியா- அங்கோர்வாட் கோவிலையும், மகாபலிபுரம்- கற்கோவிலையும் ஓப்பிட வைக்கிறது. 

பயண அனுபவம்.

நாங்கள் எங்களின் மூன்று நாட்கள் (25 -28 )பயணத்தை முடித்துக்கொண்டு  28 ஆம் தேதி காலை தரம்சலாவிலிருந்து சண்டிகர் பயணம் செய்ய தொடங்கினோம். நாங்கள் கார் பேசியிருந்ததும் இவ்வாறே. எனக்கு என்னவோ 240 கி;மீ. ஐந்தரை மணி நேரம் பயணம் செய்கிறோம். போகும் வழிதிடத்தில் உள்ள ஒரு சில இடங்களையாவது பார்க வேண்டும் என்று எண்ணி நான் கூகுளில் தேடி இரண்டு இடத்தை தேர்வு செய்து எங்கள் ஓட்டுனரிம் கூறினேன். அவற்றில் 1. மஸ்ரூர் ராக்கட் டெம்பிள் 2. ஆனந்தபூர் சாகிப் குருத்வார். இந்த இரண்டு இடங்களையும் பார்து விட்டு இரவு 7 மணிக்கு நாங்கள் முன்பதிவு செய்திருந்த இடத்தை சண்டிகரில் சென்றடைந்தோம்.

Photos and Videos.














































































தரம்சலா ஒருநாள் சுற்று (MECLEODGANJ)

 தரம்சலா ஒருநாள் சுற்று (நாள்.- 237.10.2025)

 தரம்சலா

 ஹிமாசலின் தலைநகரம் சிம்லா.  ஆனால் இந்த தரம்சலா குளிர்கால தலைநகரமாகவும், இரண்டாவது தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்லியோட் கன்ஞ்

இந்த சிறிய நகரம் தரம்சலாவின் புறநகர் பகுதியாக உள்ளது. இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலா மையம். இந்த புறநகரை கானவே நாங்கள் ஒருநாள் இந்த தரம்சலாவில் தங்க திட்டமிட்டோம். 

இந்த இடம் “லிட்டில் லாசா” என்று அழைக்கப்படுகிறது.  திபெத் நகரத்திலிருந்து வந்த மக்கள் தங்கிய இடம்தான் இந்த இடம்.

6831 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில், கோடைகாலத்தில் அவர்கள் இருப்பிடமாக இந்த நகரத்தை பயன் படுத்தினர்.

தௌலாதர் மலை தொடரில் இந்த இடம் அமைந்துள்ளது. புத்தமதத்தை படிப்பதற்காகவும், இவர்களின் கலாசாரம் மற்றும், கைவினை பொருட்களை வாங்க மற்றும் பார்வையிட பல சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.

புத்த மடாலயம்.

 





































சிவன் ஆலையம்















நீர்வீழ்ச்சி 





சாமுண்டா தேவி

 சாமுண்டா தேவி (தரிசனநாள் -27.10.2025)

அமைவிடம்

ஹிமாசல் மாநிலம், காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தரம்சலா நகரத்திலிருந்து 19 கி;மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சாமுண்டாதேவி கோவிலில் நந்திகேஸ்வரர் என்ற சிவன் கோவிலும் உள்ளது. அதன் காரணமாக நந்திகேஸ்வரதாம் என்றும் அழைக்கப்படுகிறது. 100 மீ உயரத்தில் தாட்சாயினி என்ற கோவிலும் உள்ளது.

இந்த கோவில் மலையின் உச்சியில் அமைந்திருந்ததன் காரணமாக இறைவனிடம் வழிபட்டு அவரின் ஆணை பெற்று, அம்மனின் சிலை பக்தர்கள் வசதிகாக கீNழு கொண்டு வரப்பட்டு, 400 ஆண்டுகள் முன்பே கட்டப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக தொன்மையான கோவில். இந்தியாவில் உள்ள மிக பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று.

பயண அனுபவம்

காலை7 மணிக்கு கிளம்பி இந்த கோவிலை தரிசனம் செய்து விட்டு. நாங்கள் தரம்சலா நகரசுற்றை தொடர்ந்தோம். 

Photos and Videos. 



































யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...