பஜ்சிரேஸ்வரி (எ) வஜ்ரேஸ்வரி(தரிசனநாள்-26.10.2025)
அமைவிடம்
ஹிமாசல் மாநிலம் காங்கராமாவட்டம் காங்ரா என்ற நகரில் அமைந்துள்ளது.
51 சக்தி பீடங்களில் துர்கைகாக அமைக்கப்பட்ட கோவிலாகும். தேவியின் இடது மார்பகம் விழுந்த இடம். பாண்டவர்களால் கட்டப்பட்ட கோவில். 1905 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த கோவில் அழிந்தது. பின்னர் அரசாங்கத்தால் மீண்டும் கட்டப்பட்டது. ஒடிசா பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில் கோட்டை வடிவில் உள்ளது. பைரவர் சன்னதி இங்கு சிறப்புற்று விளங்குகிறது.
பயண அனுபவம்
அனைத்து கோவில்களுமே ஹிமாச்சலில் மலை போன்று உயரத்திலேயே அமைந்துள்ளன. இந்த கோவில் செல்ல சில படிபட்டுகளை கடந்தே செல்ல வேண்டும். நாங்கள் மதிய நேரத்தில் சென்றதால், இந்த கோவில் அன்னதான கூடத்தில் உணவு உண்டோம். எளிமையான உணவாகயிருந்தாலும், மிகவும் தரமாகயிருந்தது.
Photos and videos.
No comments:
Post a Comment