அன்னவரம் சத்யநாராயணபெருமாள்

 அன்னவரம் சத்யநாராயணபெருமாள் (தரிசனம்-26.6.2026)

அமைவிடம்

விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து, ஹைதராபாத் செல்லும் வழிதடத்தில் அன்னவரம் என்ற ரயில்நிலையம்; வரும் அங்கிருந்து கோவில் கோபுரத்தை தரிசனம் செய்யலாம்.

தலபுராணம்

மலையின் அரசனான மேருவும் அவரது மனைவி மேனகாவும் பெருமாளின் அருளால், பத்ரா மற்றும் ரத்னாகரா என்ற இரண்டு ஆன்மகன்களை பெற்று வளரத்;துவந்தனர்.  பத்ரா இறைவன் பெருமாள் மீது பக்தி கொண்டு தவம் செய்தார். அவரின் தவ வலிமையால், இறைவன் பத்ரமலையான பத்ராசலத்தில், ராமராக தோன்றி பத்ராவுக்கு அருள்புரிந்தார். அதுவே பத்ராசலமலையாகும். ரத்னாகராவும் இறைவன் பெருமாள் மீது பக்தி கொண்டு செய்த தவத்தின பயனாக நமக்கு கிடைத்ததே இந்த சத்யநாராயண பெருமாள் கோவிலாகும். பின்னர் இரங்கிபிரகாசம் என்பவரின் கனவில் தோன்றிய இறைவன் ரத்னகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டு, பிரதஷ்டை செய்யப்பட்டார்.  

கோவில் சிறப்பு

பம்மா நதிக்கரையில், ரத்னகிரி மலையில் பெருமாள் வீற்றிருக்கிறார். பெருமாள் பார்தசாராதி போன்று மீசையுடன் அருள்பாலிக்கிறார். பிரதான சன்னதிக்கு அருகிலேயே யந்தரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதியை அடுத்து அதிக பக்தர்களின் வரவைகொண்டுள்ளது. 

பயண அனுபவம்

நாங்கள் காலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி  விசாகப்பட்டிணம் பேருந்து நிலையத்திற்கு சென்று, பொது வாகனத்தில் அன்னவரம் பயணித்தோம். ஸ்ரீகூர்மம் என்ற புகழ்பெற்ற பெருமாள் கோவிலுக்கும் செல்ல வேண்டும் என்பதும் எங்கள் திட்டமே. ஆனால் இரண்டுநாட்களில் மூன்று கோவிலுக்கும் எங்களுகளால் செல்ல முடியவில்லை. பெருமாளையும் நரசிம்மரையும் நன்கு அனுபவிக்க வேண்டும் என்றால் ஆந்தரா மற்றும் தெலுங்கானாவை நன்கு ஆராய்ந்து தேடி செல்ல வேண்டும். 27 ஆம் தேதி காலை விசாகப்பட்டிணத்திலிருந்து கிளம்பி இரவு சென்னையை அடைந்தோம்.







கைலாசகிரி மலை பூங்கா

 கைலாசகிரி மலை பூங்கா (நாள்-25.6.2026)

 


அமைவிடம்

விசாகப்பட்டிணம் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்கா. பேருந்து நிலையதிலிருந்து 8கி.மீ. ரயில்நிலையதிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 

568 அடி உயரம் கொண்டயிடத்தில் உள்ளது.  380 ஏக்கர் நிலப்பரப்பில் தாவரம் மற்றும் மரங்களை கொண்டது. இங்கிருந்து விசாகப்பட்டிணம் நகரை காண்பது என்பது மிகவும் அழகான ஒன்று. 2003 ஆண்டு ஆந்திர மாநில அரசு” சிறந்த சுற்றுலாயிடம்” என்று அறிவித்து பரிசு வழங்கியது.

 ரோப்வே, கிளாஸ் பிரிட்ஜ், டாய் டிரயின், கைலாசத்தில் சிவன் பார்வதி அமர்ந்திருக்கும் சிலை, பெரிய அளவில் சூலம், உயரத்திலிருந்து ஊர் மற்றும் கடற்கரை பார்கும் அழகு இதுவே இந்தயிடத்தின் சிறப்பு.

பயண அனுபவம்

சிம்மாச்சலம் நரசிம்மரை தரிசனம் செய்து விட்டு, நன்கு ஓய்வெடுத்துவிட்டு மாலை 6 மணிக்குயிங்கு சென்றோம். உள்ளுர்(விசாகப்பட்டணம்) சுற்றுலாவில் சிறப்பானயிடம்.











  





சிம்மாச்சலம் நரசிம்மர்

 சிம்மாச்சலம் நரசிம்மர் (தரிசனம் - 25.6.2026)

அமைவிடம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகில் அமைந்துள்ளது.

 ஒன்பது நரசிம்மர் கோவில்களை (நவநரசிம்ம ஷேத்ரங்கள்)ஆந்திர மாநிலத்தில் மிக சிறப்பாக சொல்வர். அவற்றுள் ஒன்று இந்த சிம்மாச்சலம். ரத்னகிரி; என்ற மலையின் வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது இந்த ஷேத்ரம். 1000 படிகட்டுகளை கடந்து சென்று பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது மலையின் மீது வாகனங்கள் செல்கின்றன. 

வரலாறு

திருமாலின்யிருப்பிடமான வைகுண்டத்தில்யிருந்த காலவாளிகளான துவார பாலகர்கள், பக்தரான ஒரு முனிவரை மிகவும் துன்புருத்தினர், இதன் காரணமாகயிருவரும், இரண்யகசுபு, மற்றும் இரண்யாட்சகன் என்ற பெயரில் அசுரர்களாக பூவுலகில் பிறந்தனர். இரண்யகசுபுவின் மகன்தான் பிரகலாதன். புpரகலாதன் கதை நாம்; அனைவரும் அறிந்ததே. இரண்யகசுபு அவனின் பெயரை கூறாமல், எப்பொழுதும் ஸ்ரீமன்நாராயணனை வணங்கியதால், இரண்யாசுரன், மகன் என்றும் பாராமல் பல துன்பங்களை கொடுத்தான். அவற்றில் ஒன்றாக பிரகலாதனை கடலில் வீசிய சமயம் ஸ்ரீமன்நாராயணன் இந்தமலையில் குதித்தே பிரகலாதனை அவரது கரங்களால் தாங்கி பிடித்தார். பின்னர் இந்த மலையிலேயே தங்கி பூலோக மக்களுக்கு அருள்புகின்றார்.

சந்தனத்தால்லான நரசிம்மர்.

இந்தயிடத்தில் பிரகலாதன்இறைவனுக்கு கோவில் அமைத்தார். அவரின் காலத்திற்கு பின் அந்த திரேதாயுகம் முடிவடையும் காலத்தில் கோவில் அழியஆரம்பித்தது. துவாபரயுகத்தில் சந்திர வம்சத்தை சேர்ந்த புரூவன் என்ற அரசன் தெய்வ சக்தியியால் இந்தஇடத்தை அறிந்து, மீண்டும் கோவில் அமைத்தார். கோவில் அமைத்த நேரத்தில் ஒரு அசரீரி இறைவன் விக்ரகத்தை முழுமையாக சந்தனத்தால் மறைக்கும் படி கூறியதன் காரணமாக நரசிம்மர் சிலை சந்தனத்தை கொண்டு மறைத்து மூடிவைக்கப்பட்டுள்ளது. வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம் நாள் மட்டும், நரசிம்மரை சிலையாக தரிசனம்செய்யமுடியும். பெரிய சந்தன கல்போன்ற நிலையில் இறைவன் அருள்புரிகிறார்.

பயண அனுபவம்.

25 ஆம் தேதி  காலை ஹைதராபாத்திலிருந்து 7.30 மணிக்கு வரவேண்டிய புகைவண்டி 1 மணிநேரம் தாமதமாக விசாகப்பட்டிணத்தை வந்தடைந்தது. நாங்கள் முன்பதிவுசெய்திருந்த அறைக்கு வந்து குளித்து காலைவுணவருந்திவிட்டு, 10 மணிக்கு மேல்தான் ஒரு Cab பிடித்து சென்றோம். எனக்கு 1000 படிகள் ஏறி செல்ல வேண்டும் என்பதே விருப்பம்.  வெய்யல் காரணமாக முடியவில்லை. கோவில் பிரகாரம் வெருங்காலில் சுற்றுவதே மிக கடினமாகயிருந்தது. வெள்ளைநிற பெயிண்ட் சற்று உதவியது. ஹைதராபாத்தை விட விசாகப்பட்டிணம் கடும் வெய்யல். நீண்ட நாட்களாக நாங்கள் தரிசனம் செய்ய காத்திருந்த சிம்மாச்சல தரிசனம் நிறைவை கொடுத்தது. 













கோல்கொண்டா கோட்டை

 கோல்கொண்டா கோட்டை (நாள் - 24. 6.2026)





அமைவிடம்

ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 வரலாறு

14 ஆம் நூற்றாண்டில் காஹாத்திய ராஜியத்தின் தலைநகரமாக விளங்கியயிடம். ராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டை. கி.பி.1364 முதல்1513 வரை இந்த இடம் ருத்ரம்மா ஆட்சியின் ; தலைநகரமாக விளங்கியது. முகலாயர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள கோட்டையை மீண்டும் ராணி புரனமைத்தார். அதன் ஒரு அங்கமாக கோட்டையின் முன்வாசலில்யிருந்து கைதட்டினால் 300 அடி உயர கோட்டையின் மேல் பகுதியில் காது விழும்படியாக செய்தார். இன்றளவும் நாம் இதனை சோனை செய்து பார்க முடிகிறது. ருத்ரம்மா தேவி அவர்கள் தற்சமயம் உள்ள தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ரா மாநிலபகுதிகளை ஆட்சி செய்தார். 16 ஆம் நூற்றான்டில் குதுப்ஷாகி  இந்தயிடத்தை கைபற்றினான். 1687 -ல் nஒளரங்கசீப் இந்த கோட்டையை கைபற்றினான்.

உலகின் முதல் வைர சுரங்கம்.

உலகில் முதன் முதலாக வைரம் கண்டெடுக்கப்பட்டயிடம் இந்த கோல்கொண்டா. வைரவியாபரமும் மிகவும் சிறப்புற்று விளங்கியது. கோல்லா கோண்டா என்று அழைக்கப்பட்டயிடம், கோல்கொண்டா என்றானது. ஆடு மேய்கும் சிறுவன் இறைவனின் சிலையை இந்த கோட்டையில் கண்டடெடுத்தான். இன்றளவும் கோட்டையின் மேல் கோவில் சிறப்பாக உள்ளது. சுதந்திரம் கிடைக்கும்வரை முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் வைரசுங்கத்திலிருந்து வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

பயணஅனுபவம்

திருமணத்திற்காக ஹைதராபாத் வந்த நாங்கள் சொர்ணகிரி, யாதகிரிகுட்டா, ராமோஜி, கோல்கொண்டா கோட்டை ஆகியயிடங்களை பாத்துவிட்டு 24 ஆம் தேதி இரவு புகைவண்டியில் ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டிணம் பயணித்தோம்.



























ராமோஜி பிலிம் சிட்டி

 ராமோஜி பிலிம் சிட்டி (நாள்- 23.6.26) 

 அமைவிடம்

ஹைதராபாத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

1500 ஏக்கர் பரப்பளவை கொண்டு, சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மாய உலகம். திரைப்படங்கள் எடுப்பதற்காக உருவாக்கபட்ட நகரம், இடம், உலகம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒரு திரைபடம் எடுக்க ஒரு நகரத்தையோ அல்லது கோவில், பூங்கா, வெளிநாடு, காடு, மலை, தேசிய நெடுஞ்காலை, சிறைச்சாலை, கல்லூரி என்று எந்த இடத்தில் கதை அமைப்புக்கான இடம் தேவையோ அவை அனைத்தும்முள்ளயிடம். நான் உதாரணத்திற்காக சில இடங்களை குறிப்பிட்டுள்ளேன். கற்பனைக்கு எட்டாதயிடங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர். சினிமா படம் எடுக்க உருவாக்கப்பட்டயிந்த இடத்தை பொது மக்களுக்கு சுற்றுலாதளமாகவும் அமைத்துள்ளனர். அனைத்துவகையான மக்களையும் கவர்ந்துள்ளது.  யாரிடமாவது நான் ஹைதராபாத் சென்றேன் என்று கூறினால் அவர்கள் ராமோஜி பிலிம் சிட்டி பார்தீர்களா? என்று மறக்காமல் கேட்பர். அந்த அளவிற்கு கவர்சியுடன் உள்ளது

1996 ஆம் ஆண்டு ஒரு தனியாரால் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்கையில் ஒரு முறை பார்கவேண்டியயிடம் என்றால் உண்மைதான்.

புகைப்படமும் காணொளியும் அதிகமாக வெளியிடுகிறேன். 


























































































சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...