அன்னவரம் சத்யநாராயணபெருமாள்

 அன்னவரம் சத்யநாராயணபெருமாள் (தரிசனம்-26.6.2026)

அமைவிடம்

விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து, ஹைதராபாத் செல்லும் வழிதடத்தில் அன்னவரம் என்ற ரயில்நிலையம்; வரும் அங்கிருந்து கோவில் கோபுரத்தை தரிசனம் செய்யலாம்.

தலபுராணம்

மலையின் அரசனான மேருவும் அவரது மனைவி மேனகாவும் பெருமாளின் அருளால், பத்ரா மற்றும் ரத்னாகரா என்ற இரண்டு ஆன்மகன்களை பெற்று வளரத்;துவந்தனர்.  பத்ரா இறைவன் பெருமாள் மீது பக்தி கொண்டு தவம் செய்தார். அவரின் தவ வலிமையால், இறைவன் பத்ரமலையான பத்ராசலத்தில், ராமராக தோன்றி பத்ராவுக்கு அருள்புரிந்தார். அதுவே பத்ராசலமலையாகும். ரத்னாகராவும் இறைவன் பெருமாள் மீது பக்தி கொண்டு செய்த தவத்தின பயனாக நமக்கு கிடைத்ததே இந்த சத்யநாராயண பெருமாள் கோவிலாகும். பின்னர் இரங்கிபிரகாசம் என்பவரின் கனவில் தோன்றிய இறைவன் ரத்னகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டு, பிரதஷ்டை செய்யப்பட்டார்.  

கோவில் சிறப்பு

பம்மா நதிக்கரையில், ரத்னகிரி மலையில் பெருமாள் வீற்றிருக்கிறார். பெருமாள் பார்தசாராதி போன்று மீசையுடன் அருள்பாலிக்கிறார். பிரதான சன்னதிக்கு அருகிலேயே யந்தரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதியை அடுத்து அதிக பக்தர்களின் வரவைகொண்டுள்ளது. 

பயண அனுபவம்

நாங்கள் காலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி  விசாகப்பட்டிணம் பேருந்து நிலையத்திற்கு சென்று, பொது வாகனத்தில் அன்னவரம் பயணித்தோம். ஸ்ரீகூர்மம் என்ற புகழ்பெற்ற பெருமாள் கோவிலுக்கும் செல்ல வேண்டும் என்பதும் எங்கள் திட்டமே. ஆனால் இரண்டுநாட்களில் மூன்று கோவிலுக்கும் எங்களுகளால் செல்ல முடியவில்லை. பெருமாளையும் நரசிம்மரையும் நன்கு அனுபவிக்க வேண்டும் என்றால் ஆந்தரா மற்றும் தெலுங்கானாவை நன்கு ஆராய்ந்து தேடி செல்ல வேண்டும். 27 ஆம் தேதி காலை விசாகப்பட்டிணத்திலிருந்து கிளம்பி இரவு சென்னையை அடைந்தோம்.







No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...