சிம்மாச்சலம் நரசிம்மர்

 சிம்மாச்சலம் நரசிம்மர் (தரிசனம் - 25.6.2026)

அமைவிடம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகில் அமைந்துள்ளது.

 ஒன்பது நரசிம்மர் கோவில்களை (நவநரசிம்ம ஷேத்ரங்கள்)ஆந்திர மாநிலத்தில் மிக சிறப்பாக சொல்வர். அவற்றுள் ஒன்று இந்த சிம்மாச்சலம். ரத்னகிரி; என்ற மலையின் வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது இந்த ஷேத்ரம். 1000 படிகட்டுகளை கடந்து சென்று பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது மலையின் மீது வாகனங்கள் செல்கின்றன. 

வரலாறு

திருமாலின்யிருப்பிடமான வைகுண்டத்தில்யிருந்த காலவாளிகளான துவார பாலகர்கள், பக்தரான ஒரு முனிவரை மிகவும் துன்புருத்தினர், இதன் காரணமாகயிருவரும், இரண்யகசுபு, மற்றும் இரண்யாட்சகன் என்ற பெயரில் அசுரர்களாக பூவுலகில் பிறந்தனர். இரண்யகசுபுவின் மகன்தான் பிரகலாதன். புpரகலாதன் கதை நாம்; அனைவரும் அறிந்ததே. இரண்யகசுபு அவனின் பெயரை கூறாமல், எப்பொழுதும் ஸ்ரீமன்நாராயணனை வணங்கியதால், இரண்யாசுரன், மகன் என்றும் பாராமல் பல துன்பங்களை கொடுத்தான். அவற்றில் ஒன்றாக பிரகலாதனை கடலில் வீசிய சமயம் ஸ்ரீமன்நாராயணன் இந்தமலையில் குதித்தே பிரகலாதனை அவரது கரங்களால் தாங்கி பிடித்தார். பின்னர் இந்த மலையிலேயே தங்கி பூலோக மக்களுக்கு அருள்புகின்றார்.

சந்தனத்தால்லான நரசிம்மர்.

இந்தயிடத்தில் பிரகலாதன்இறைவனுக்கு கோவில் அமைத்தார். அவரின் காலத்திற்கு பின் அந்த திரேதாயுகம் முடிவடையும் காலத்தில் கோவில் அழியஆரம்பித்தது. துவாபரயுகத்தில் சந்திர வம்சத்தை சேர்ந்த புரூவன் என்ற அரசன் தெய்வ சக்தியியால் இந்தஇடத்தை அறிந்து, மீண்டும் கோவில் அமைத்தார். கோவில் அமைத்த நேரத்தில் ஒரு அசரீரி இறைவன் விக்ரகத்தை முழுமையாக சந்தனத்தால் மறைக்கும் படி கூறியதன் காரணமாக நரசிம்மர் சிலை சந்தனத்தை கொண்டு மறைத்து மூடிவைக்கப்பட்டுள்ளது. வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம் நாள் மட்டும், நரசிம்மரை சிலையாக தரிசனம்செய்யமுடியும். பெரிய சந்தன கல்போன்ற நிலையில் இறைவன் அருள்புரிகிறார்.

பயண அனுபவம்.

25 ஆம் தேதி  காலை ஹைதராபாத்திலிருந்து 7.30 மணிக்கு வரவேண்டிய புகைவண்டி 1 மணிநேரம் தாமதமாக விசாகப்பட்டிணத்தை வந்தடைந்தது. நாங்கள் முன்பதிவுசெய்திருந்த அறைக்கு வந்து குளித்து காலைவுணவருந்திவிட்டு, 10 மணிக்கு மேல்தான் ஒரு Cab பிடித்து சென்றோம். எனக்கு 1000 படிகள் ஏறி செல்ல வேண்டும் என்பதே விருப்பம்.  வெய்யல் காரணமாக முடியவில்லை. கோவில் பிரகாரம் வெருங்காலில் சுற்றுவதே மிக கடினமாகயிருந்தது. வெள்ளைநிற பெயிண்ட் சற்று உதவியது. ஹைதராபாத்தை விட விசாகப்பட்டிணம் கடும் வெய்யல். நீண்ட நாட்களாக நாங்கள் தரிசனம் செய்ய காத்திருந்த சிம்மாச்சல தரிசனம் நிறைவை கொடுத்தது. 













No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...