மங்களகிரி (பஞ்சநரசிம்மர்) (தரிசனநாள்;8.12.2025)
அமைவிடம்
ஆந்திரமாநிலம், குண்டுர் மாவட்டத்தில் உள்ளது இந்த மங்களகிரி என்ற ஊர். விஜயவாடாவிலிருந்து அரை மணிநேரப்ரயாணம் தான்.
மங்களகிரியில் மூன்று நரசிம்மர் கோவில் உள்ளன.
1. லெஷ்மி நரசிமமர். (மலை அடிவாரம்)
2. பாணக நரசிம்மர் (மலையில் உள்ளார்)
3. கண்டல நரசிம்மர் ( மலைஉச்சி)
1. லெஷ்மி நரசிம்மர்.
இங்கு அமைந்துள்ள மலை யானைவடிவில் உள்ளது. இதன் சிறப்பு எந்த கோணத்திலிருந்து பார்தாலும் யானை வடிவமாகவே தெரியும்.
மலைஉருவானகதை
பாரியார்த்தா என்ற அரசனின் மகன், ஹரஸ்வஸ்ருங்கி என்பவன் இங்கு கடும் தவம் செய்து வந்தான். அரசன் மகனை சந்தித்து தன்னுடன் அழைத்து செல்ல வந்தான். ஆனால் ஹரஸ்வஸ்ருங்கி ஸ்ரீமகாவிஷ்ணுமீது மிகுந்த பக்தி கொண்டுயிருந்ததால், தன் தந்தையிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள மலையாகமாறினான். திருமால் இந்த மலையில் நரசிம்மவடிவம் கொண்டு எழுந்தருளினார். இவரே இன்றுவரை பக்தர்களால் வணங்கப்படும், பாணக நரசிம்மர்.
புராணங்களின் கூற்று.
மகாவிஷ்ணு பூலோகத்தில், ஓடிசா பூரியில் ஜகநாதராக உணவருந்திவிட்டு, ஆந்திரா சிம்மாசலத்தில், உடலை சந்தனகுழம்பில் குளிரவைத்துவிட்டு, மங்களகிரியில் பாணகமருந்தி, திருப்பதியில் ஆட்சி செய்து, ஸ்ரீரங்கத்தில் சயனித்து இந்த பூவுலகின் கல்யாண மூர்தியாக திகழ்வதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.
1.லெஷ்மி நரசிமம்மர்.
153 அடிஉயரம், 49 அடி அகலம் கொண்ட தென்னிந்தியாவில் உள்ள உயரமான கோபுரம் கொண்ட கோவில்களில் ஒன்றாக திகழும் கோவிலிது. 11 மாடங்களை (நிலை) கொண்டது. இந்த கோவில் ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்தர் கட்டிய ராஜகோபுரம்.
நரசிம்மர் தரிசனம்
காலை ஆறுமணிக்கு நாங்கள் தரிசனத்திற்காக சென்றோம். அதிக கூட்டமில்லாமல், இடகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வரத அபய முத்திரைகள் தாங்கிய வல து கரத்துடன், நூற்றிஎட்டு, சாளகிராம மாலையணிந்து, வலதுகாலை தொங்கவிட்டு, மேல் சாற்றும் கவசத்தில் கூட கண்இமைதிறந்து பக்தர்களுக்கு அருள்பகாலிக்கும் காட்சியை மிக ஏகாந்தமாக தரிசனம் செய்தோம். உங்களுக்கு அருள்செய்யவே நான் இங்க காத்திருக்கிறேன் என்ற சொல்வது போல் எனக்கு தோன்றியது. லெஷ்மி ராஜலெட்சுமியாக வீற்றிருந்தாள்.
ஆதிசங்கரர், மத்வாச்சார்யார், ராமானுஜர், விஜயநகர சக்கரவர்தி கிருஷ்ணதேவராயர் என்று பலரும் வழிபட்ட நரசிம்மர்.
2 பாணக நரசிம்மர்
சங்கு சக்கரத்தை இருகைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டுமே உள்ள சுயம்பு மூர்தியாக இங்கு நரசிம்மர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் நிவேதனம் செய்யும் பாணகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கிறார். கொடிய அரக்கனை அழிப்பதற்காக இங்கிருந்த நரசிம்மர். அரக்கனை அழித்த உக்ரம் தணிப்பதற்காக, தேவர்கள் அமர்தத்தை இறைவனுக்கு கொடுத்த மீதியை பிரசாதமாக உண்டனர். இவ்வாறு நரசிம்மரின் உக்ரம் தணிய கிருதயுகத்தில் அமிர்தத்தையும், திரேதாயுகத்தில் பசுநெய்யையும், துவாபராயுகத்தில் பசுவின் பாலையும், கலியுகத்தில் பாணகத்தையும் அருந்திவருகிறார். நாம் நெய்வேதனம் செய்யும் பாணகத்தில் பாதியை நரசிம்மரில் வாயில் செலுத்திவிட்டு மீதத்தை பிரசாதமாக நமக்கு கொடுக்கின்றனர். அன்று முழுவதும் நாங்கள் நிறைய பாணகம் குடித்தோம். இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 800அடி உயரத்தில் இந்த நரசிம்மர் உள்ளார்.
3. கண்டல நரசிம்மர்.
இந்த நரசிம்மரை வழிபட யாரும் சென்றதாக தெரியவில்லை. எங்கள் பிரயான நிர்வாகியும் மேலே செல்வது கடினம் என்று எங்களை அழைத்து செல்லவில்லை. நான் கண்டல நரசிம்மரை தரிசனம்செய்ய முடியாத வருத்தத்துடன், திரும்பினேன்.
பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரர்.
மலைஅடிவாரத்தில் உள்ள சிவன் கோவில். இந்த கோவிலுக்கு எங்களைபோன்ற மிக சிலரே வந்து வழிபட்டனர். எங்களுடன் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வைணவர்கள்.
இந்த மங்களகிரி ஒரு முக்திதலம். பஞ்நரசிம்மஷேத்திரத்தில் நாங்கள் முதலாவதாக தரிசனம் செய்த இடம். நவநரசிம்மஷேத்திரத்திலும் இந்த தலம் ஒன்றாக உள்ளது.
இந்த யாத்திரை குழுவுடன் நாங்கள் மங்ளகிரியில் வந்து இணைந்து கொண்டோம்.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, என்ற மூன்று நாட்களும் சில ஆலயங்களை தரிசனம் செய்யதோம்.


























No comments:
Post a Comment