வாடப்பள்ளி (பஞ்சநரசிம்மஷேத்ரம்) (தரிசனநாள்-8.12.2025)
அமைவிடம்
தெலுங்கானா மாநிலம் நல்கோடா மாவட்டம் மிர்யாளயகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில். ஆனால் வாடபள்ளி என்று விஜயவாடா அருகிலேயே ஒரு இடம் உள்ளது. இங்கு வேங்கட்ரமணஸ்வாமி கோவில் ஒன்று புகழ்பெற்று விளங்குகிறது. அந்த கோவிலில் உள்ள நரசிம்ம சன்னிதானம் பற்றிதான் இணையத்தில் வாடப்பள்ளி என்று நாம் தேடும் போது அதிகமாகபகிறப்பட்டுள்ளது.
கோவில் வரலாறு
அகஸ்தேஸவரர் என்ற முனிவர், அவரின் தவத்தின் பயணால் நரசிம்மர் இங்கு வீற்றிருக்க விரும்புகிறார் என்று அறிந்து நரசிம்மர் சிலையை நிறுவினர். 12 ஆம் நூற்றாண்டில் ரெட்டி ராஜாக்கள் இந்த பகுதியில் நகரத்தை கட்டும் போது, இந்த சிலையை எடுத்து கோவில் அமைத்தார், “சுசின்னசிம்மகேசலு“ என்பவர். சன்னிதானத்தில் நரசிம்மர் சிலைக்கு நேர் உள்ள விளக்கானது மூச்சு காற்றினால் அசைந்து கொண்டேயிருக்கிறது. அதேநேரத்தில் சன்னிதானத்திலுள்ள மற்றொறு விளக்கு நரசிம்மர் பாதம் அருகில் உள்ள விளக்கு அசையாமல் நிலையாக எரிந்துக்கொண்டிருக்கிறது. இக்கோவில் எரியும் இந்த அணையா இரண்டு தீபத்திற்;கும் எண்ணெய் கொடுப்பதே சிறந்த கைங்கரமாக உள்ளது.
அகஸ்தீஸ்வரர்
என்ற சிவன் கோவிலும் சிறப்பாகயிங்குள்ளது. இவர்கள் வைணவர்கள் என்பதால் இவர்கள் இக்கோவில் செல்ல முக்தியத்துவம் கொடுக்கவில்லை. நாங்களும் இவர்களுடன் வந்தநேரத்தில் தனியாக செல்ல விரும்பவில்லை.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. (கார்திகைமாத நரசிம்மர் தரிசனம் என்று பிளாக் உள்ளது) அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, என்ற மூன்று நாட்களும் சில ஆலய
No comments:
Post a Comment