வள்ளுரிபாலம் கிராமம் (7.12.2025) மூன்றாம்நாள்
விஜயவாடா அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். என்கணவரின் நண்பரின் ஊர் என்பதால் நாங்கள் இங்கு சென்றோம். அவரின் சகோதரி வீடுகள் மற்றும் கிருஷ்ணா நதி, கோழிபண்னை, என்று கிராமிய மணம்கமழ சிலஇடங்களுக்கு சென்று, நான்கு மணிநேரங்கள் செலவிட்டு, உறவினரிவீட்டில் காலை மற்றும் மதிய உணவை சாப்பிட்டு மிக மகிழ்சியாக நேரத்தை செலவிட்டோம். என்கணவர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நன்றாக பேசுவதால் அவருக்கு சிரமம்யிருக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் ஓரளவுக்குதான் பேசுவேன். நண்பரின் மனைவி தெலுங்கு மற்றும் ஹிந்தி பேசுகிறார். நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேச அவர் என்னிடம் ஹிந்தியில் பதிஅளிக்க மூன்றுநாட்கள் மிக வித்யாசமாக கழிந்தது. அவர்கள் மும்பையில் அவர்களின் பணி நாட்கள் முழுவதும் கழித்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். எங்களின் உரையாடளுக்கு மொழிதடையாகயிருக்கவில்லை.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதசிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, பரகாலயாத்ரா என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, என்ற மூன்று நாட்களும் சில இடங்களை தரிசனம் செய்தோம்.





















No comments:
Post a Comment