விஜயவாடா பயணம்

 விஜயவாடா பயணம். (தரிசனநாள்-5.12.25)

நாள் 1.

1.திருப்பதி தேவஸ்தான கோவில் 

கடந்த சில ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி கோவில் போன்று பல நகரங்களில் கோவில்கள் எழுப்பியுள்ளனர். நாங்களும் நைமிச்சாரண்யம், ஜம்மு என்று சில இடங்களில் இத்தகைய கோவில்களை தரிசனம் செய்துள்ளோம். இவ்வாரே விஜயவாடாவிலும் உள்ளது.

புகைப்படங்கள்.




2. கோடிலிங்கேஸ்வரர்.

 வெங்கட்டாயபாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில். இங்கு கோடி லிங்கங்கள் பிரதிஸ்டை செய்திருந்தனர். (கர்நாடகா மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள, கோடிலிங்கேஸ்வரர் என்ற கோவில் மிகவும் புகழ்வாயந்தது.  தரிசனம் செய்து பிளாக் எழுதியுள்ளேன்.)




 



3. அமராவதி 

அமராவதி என்ற தலைப்பில் தகவல்கள் அதிகமாக உள்ளதால் ,தனி பிளாக் வெளியிட்டுள்ளேன்.




4. திரிகோட்டீஸ்வரர்

ஆந்திரபிரதேச மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ள” கொட்டப்ப கொண்டா” என்ற மலையில் அமைந்துள்ள சிவன் கோவில். மகாசிவராத்திரி அன்று லட்சகணக்கான பக்தர்களை ஈர்க்கும் இடம் இந்த சிவன் கோவில். ஆந்திரபிரதேச மாநிலத்தின் மிக புகழ்வாய்ந்த சிவன் கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று.


















5. மல்லேஸ்வரசுவாமி

பேட்டகாணி என்ற கிராமததில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில். பிரம்மரம்பா சமேத மல்லேஸ்வரசுவாமி என்ற பெயரில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரரால் புனிததலம் என்று போற்றப்பட்ட கோவில். கிருஷ்ணதேவராயரால் 1440 ஆம் ஆண்டு, புதுபிக்கப்பட்டது. இந்த பகுதியின் மிக பெரிய ராஜகோபுரத்தை கொண்ட கோவில். தற்சமயம் ராகு, கேது பரிகாரதலமாக சிறப்புற்று விளங்குகிறது.











6 தசாவரா கோவில்

 ஆந்திர மாநிலம் குண்டுர் -விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நம்பூரா என்ற இடத்தில்அமைந்துள்ளது.  ஸ்ரீ விஷ்வபுரா ஸ்ரீநிவாச ஷேத்ரா டிரஸ்ட் இந்த கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறது.  2017 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவில். 


பயண அனுபவம்.

நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். (கார்திகைமாத நரசிம்மர் தரிசனம் பகுதி-1, என்று பிளாக் உள்ளது.)கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா" என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும்,  பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, என்ற மூன்று நாட்களும் சில இடங்களை தரிசனம் செய்யதோம். 


No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...