வேதாத்ரி (பஞ்சநரசிம்மர் யாத்திரை) (தரிசனநாள்-8.12.2025)
அமைவிடம்
ஆந்திரபிரதேச மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், வேதாத்ரி என்ற நகரில் அமைந்துள்ள கோவில்.
இந்த கோவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரே வேதங்களின் நகரமாக (வேதமாகவே)கருதப்படுகிறது. சோமாசுரன் பிரம்மாவிடமிருந்து வேதங்களை கடலில் மறைத்துவைத்திருந்தான். வேதங்கள் வேதாத்ரியாக மாற விஷ்ணு வடிவமான இத்தல நரசிம்மரை பிரார்தனை செய்தார்கள் தேவர்கள்.
வைணவ துறவிகள், பக்திஇசைஞானியர்கள், நாராயணதீர்த்தர், ஆகியோர் இக்கோவிலின் பிரதான பக்தர்களாக வந்து வழிபட்டவர்கள். கோவில் பழமையை நாம் அறியவே இவர்களின் வருகை நமக்கு தெரியப்படுத்தப்படுகிறது. 1800-ல் ராஜா வாசி ரெட்டி, இக்கோவிலை புனரமைத்தார். குறிப்பாக கிருஷ்ணா நதியிலிருந்து 108 படி கட்டி கோவிலை புதுப்பித்தார்.
கோவில் சிறப்பு
இத்தல நரசிம்மர், வீர நரசிம்மர், யோகநரசிம்மர், சளகிராம நரசிம்மர், ஜுவாலா நரசிம்மர், லெஷ்மி நரசிம்மர் என்று ஐந்துவடிவங்களில்;,பக்தர்கள் வழிபடுவதால் இந்த ஆலயமே “பஞ்சநரசிம்ம ஷேத்ரம்” என்று அழைக்கப்படுகிறது. மூலவர் அருகில் ஒரு பெரிய வாள் வைத்துள்ளனர்.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. (கார்திகை மாத நரசிம்மர் தரிசனம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, பரகாலயாத்ரா என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, ஆம் தேதிஎன்ற மூன்று நாட்களும் சில ஆலயங்களை தரிசனம் செய்யதோம்













No comments:
Post a Comment