அக்ரிபள்ளி (பஞ்சநரசிம்மஷேத்ரம்) (தரிசனநாள்-10.12.2025)
அமைவிடம்
விஜயவாடாவிலிருந்து, 25 கி;மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீவியாகர நரசிம்மர் .வியாகரம் என்றால் புலி. புலிமுகம் மற்றும் நகங்களுடன் அருள்பாலிக்கி;றார்.
கோவில் சிறப்பு
மலை மற்றும் மலையடிவாரம் என்ற இரண்டு இடங்களிலும் வீற்றிருக்கிறார். புராணங்களின் கணக்குபடி 4000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று தெரிகிறது. தொல்லியல் துறை ஆய்வின்படி இந்த இடம் பத்ராஜலராமர் கோவிலின் நந்தவனமாகயிருந்ததாக அறியப்படுகிறது. 740 படிகளை கொண்டுள்ளது, இந்த மலையில் அமைந்த கோவில். ஆனால் கீழேயுள்ள நரசிம்மரை மட்டுமே நாங்கள் தரிசனம் செய்தோம். எங்களுடன் வந்தவர்களில் பெரும்பாலானோர் முடியாதவர்களே. எங்களுக்கு சிறிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், நாங்கள் மீண்டும் வந்து தரிசனம் செய்ய முடிவெடுத்தோம். இங்குள்ள வராகபுஸ்கரனியை இறைவன் பெருமாளே உருவாக்கியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. திருமஞ்சனத்திற்;கு இந்த நீரே பயன் படுத்தப்படுகிறது.
பஞ்சநரசிம்மஷேத்ர முடிவுரை.
அக்ரிபள்ளியிலிருந்து விஜயவாடா வந்து அங்குள்ள கனகதுர்காவை தரிசனம் செய்துவிட்டு, ரயில்நிலையம் திரும்பினோம். கனகதுர்கா தரிசனம் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அதிக கூட்டமில்லாமல் தரிசனம் சிறப்பாக செய்தாலும், எங்களது பயண அமைப்பாளரின் தவறான தகவலால் நாங்கள் சரியாக மனநிலையுடன் தரிசனம் செய்வில்லை. பயண ஏற்பாட்டாளருக்கே சரியான தகவல் தெரியவில்லை. அவர்கள் தீவிர வைணவர்கள். அதன் காரணமாக அவர்கள் கனக துர்காவை தரிசனம் செய்ய வரவில்லை. நானும் என் கணவரும் முதலில் கனக துர்கா தரிசனம் என்ற பயண திட்டத்தை பர்த்தவுடன் சற்று சந்தேகத்துடனே பயணம் செய்தோம். கனக துர்கா கோவில் விஜயவாடா நகர மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதன் வழியாகவே நாங்கள் மூன்று நாட்களும் சென்றோம்.தரிசனம் செய்யாமல் சென்றது எங்கள் தவறே. தரிசனம் என்பது கடினமானதல்ல. நாங்கள் கனகதுர்காவை மீண்டும் தரிசனம் செய்த பிறகு பிளாக் வெளியிடுவேன். விஜயவாடாவிலிருந்து பெங்களுருக்கு 11 ஆம் தேதி காலை சுபமாக வந்துசேர்ந்தோம்.
நம் நாட்டில் உள்ள நரசிம்மர் கோவில்களின்யிருப்பிடங்கள் , செல்லும் வழி, சிறப்பு என்று பல தகவல்கள் அறிந்து கொண்டேன். நரசிம்மரை பற்றி மட்டுமே எழுதும் பிளாகர்கள். இதன் உச்சமாக இந்தியா முழுவதும் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு தனி வரைபடத்தையே உருவாக்கியவர்கள். என்று காலத்திற்கு ஏற்றார் போல் பக்தியின் வெளிபாடுகளை இணையம் மூலம் அறிந்து அதிசயித்தேன்.
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாள் நுதலே.
Good. Keep it up
ReplyDelete