பத்ராச்சலம் ராமர்

பத்ராச்சலம் ராமர் (தரிசனநாள்-10.12.2025)

அமைவிடம்

தெலுங்கானா மாநிலம் பத்தாத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்மிக்க ராமர் கோவில். வைணவர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற கோவில். அயோத்திக்கு நிகரான கோவில். வரலாறு  சிறப்புமிக்க கோவில் .கோதவரி நதிக்கரையில் அமைந்த கோவில்.

பக்தராமதாஸ்.

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோபண்ணா என்பர் சுல்தானிடம் கணக்கராக வேலை செய்துவந்தார். இந்த ராமரின் சிலையை கண்டவுடன் இவர் மீது மிகுந்த அன்பு கொண்டு கோவில் கட்ட முடிவு செய்தார். நிதிக்காக மக்களை அனுகினார். மக்கள் விவசாய அறுவடை முடிந்தவுடன் பணம் தருவதாககூறி, ஒரு யோசனையும் தெரிவித்தனர். நல்ல காரியம் என்பதால், அரசின் வரி பணத்தை பயன் படுத்தி இறைபணியை தொடருங்கள். நாங்கள் கொடுத்தவுடன் அரசுக்கு கொடுத்துவிடலாம் என்ற கூறினர். காலத்திற்குள் பணத்தை சுல்தானுக்கு கொடுக்க முடியாமையால், சுல்தான் இவரை திருடன் என்று கூறி சிறையில் அடைத்தார். இதுமட்டுமல்லாமல், தங்கநாணயங்களை அபராதமும் விதித்தார். ராமரும், லெஷ்மணரும் ராமோஜி மற்றம் லெஷ்மனோஜி என்ற பெயரில் அந்த அபரா நாணயங்களை கட்டி அதற்கான ரசீதை சிறையிலிருக்கும் கோபண்ணாவிடம் சேர்கின்றனர். சுல்தான்  ராமரும் லெஷ்ணருமே வந்து கோபண்ணாவை காப்பாற்றியதை அறிந்து, கோபண்ணாவிடம் மன்னிப்பு கேட்டு, இந்த தங்க நாணயங்களை கோபண்ணாவிடம் சமர்பித்தார். கோபண்ணா அதை பெற்று கொள்ளதாதல், இறைவனுக்கு அர்பணித்தார். இரண்டு நாணயங்கள் இன்றளவும் கோவிலி;ல் உள்ளதாக சொல்கின்றனர். அவரே பின்னாளில் பக்த ராமதாஸ் என்று அழைக்கப்பட்டார். அரச வேலையை புறக்கனித்து விட்டு ராமர் மீது பக்திபாடல்கள் இயற்றி “பக்தராமதாஸ்” என்று மக்களால் அன்பு கலந்த பக்தியுடன் அழைக்கலானார்.

பர்ணசாலை

நாங்கள் மட்டப்பள்ளி தரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக பத்ராசலம் பயணித்தோம். முதலில் இந்த இடத்தை தான் தரிசனம் செய்தோம். இராமாயணத்துடன் பத்ராஜலம், விஜயநகரம் என்ற இரண்டு இடங்களும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இராமர் ,இலக்குவன், சீதை மூவரும் தங்கிய பர்ணசாலை இங்குள்ளதாக கோதரவரி ஆரைற்றங்கரையோரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த பர்ணசாலை  பத்திராசலத்திலிருந்து, 35 கி.மீ. தொலைவிலுள்ளது. 

நாசிக் பர்ணசாலை

மகாராஷ்ரா மாநிலத்தில், நாசிக் நகருக்கு அருகில் பஞ்சவடி என்ற இடத்தில், அங்கும் தோதாவரி நதிகரையோரமாக இவர்கள் தங்கினார்கள் என்று கூறக்கூடிய பர்ணசாலை இடத்தையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தரிசனம் செய்தோம். அங்கு பஞ்சவடிஎன்ற ஐந்து மரங்கள் உள்ளன. மற்றும் சீதாகூபா என்ற குகையுமுள்ளது.) இந்த இடமும் பர்ணசாலை உள்ள இடமாக கூறப்படுகிறது. கைபேசி இந்த இடத்தில் அனுமதிக்காததால் நாங்கள் எந்த புகைப்படமும் எடுக்க வில்லை. (பஞ்சவடி என்ற என்னுடைய பிளாக் உள்ளது)

கோதாவரி மாலை நேர அழகை மட்டும் படம்பிடித்தேன்.

கபீர்தாஸ்

இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர், ராமானந்தரின் சீடராகயிருந்தார். இந்த பத்ராசல ராமர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவரை கோவிலுக்குள் அனுமதிக்காதன் காரணமாக கோவில் விக்ரகங்கள் மறைந்தன என்றும். இவர் தரிசனத்திற்கு பின்னர்தோன்றியதாகவும் கூறுவர். “தோஹே” என்ற இவரின் பாடல் தொகுப்பு மிகவும் பிரபலம்.

இவ்வாறு பல சிறப்பையும் பல பக்தர்களையும் பெற்று பத்ராசலம் என்று  சிறப்பான தலமாக விளங்குகிறது. ராமர் என்ற உடன் பட்டாபிஷேக படத்தையே பார்த்து பழகிய நமக்கு, சீதையை மடியில் அமர்திக்கொண்டும், லெஷ்மணர் அருகில் நிற்று கொண்டுடிருக்கும் காட்சி  மிகவும் புதிதாகயிருந்தது.   10 ஆம் தேதி காலை கோதாவரி நதியை தரிசனம் செய்து விட்டு பின் கோவிலில் இரண்டு மணிநேரம் நன்கு அமர்ந்து நிதானமாக தரிசனம் செய்தோம். 9 ஆம் தேதி மாலைவேறு ஒருமுறை தரிசனம் செய்தோம். 

பயண அனுபவம்.

நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும்,  பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, என்ற மூன்று நாட்களும் சில ஆலயங்களை தரிசனம் செய்யதோம்.






































No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...