நந்தியால் நவநந்தி ஆலயங்கள் (தரிசனநாள்-24.3.2026)
அமைவிடம்
ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் என்ற ஊரை சுற்றி 30 கி. மீ. தொலைவுக்குள் இந்த ஒன்பது கோவில்களும் உள்ளன. மகாநந்தி கோவில்களுக்குள் இரண்டும்;, மிக அருகில் ஒன்றும், நந்தியால் நகருக்குள் மூன்று கோவில்களும், நகருக்கு அருகில்லுள்ள கிராமங்களில் மூன்று கோவில்களும் அமைந்துள்ளன. இந்த இடங்கள் நல்லமாலா என்ற காட்டுக்கருகில் அமைந்துள்ளன.
நவநந்தியின் பெயர்கள், சிறப்புகள் ,மற்றும் அமைந்தயிடங்கள் விரிவாக.
1.பிரதமநந்தி
இந்த ஆலயம் நந்தியால் நகரத்திலேயே அமைந்துள்ளது. பிரம்மா சிவபெருமானை நோக்கி தவம் செய்து வழிபட்டயிடம். முதன்மையான ஆலயமாக விளங்குகிறது. இத்தலத்தில் நந்தீஸ்வரலிங்கமாக சிவன் அருள்பாலிக்கிறார்.
2. நாகநந்தி
இந்த கோவில் நந்தியால் நகரத்திலேயே அமைந்துள்ளது. நாகமானது கருடனிடமிருந்து தன்னை காக்க சிவபெருமானை நோக்கி தவம் செய்கிறது. சிவபெருமான் நந்திதேவரும் நாகத்திற்கு காட்சி கொடுத்து அருள்புரிகிறார். தற்சமயம் இந்த லிங்கம் ஆஞ்சநேயர் கோவிலுக்கள் அமைந்துள்ளது.
3. சோமநந்தி
நந்தியால் நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்திரன் தவம் செய்து தரிசனம் பெற்றான். நந்திவாகனத்துடன் இந்திரனுக்கு அருள்புரிந்தயிடம்.
4.சிவநந்தி (அ) ருத்ரநந்தி
இந்த ஆலயம் நந்தியால் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கடமாலாகால்வா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் மகாபாரதபோரில் அவர்களின் குருவான துரோணாச்சாரியாரின் மரணத்திற்கு காரணமாகயிருந்ததால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன்காரணமாக 5 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டயிடம்தானிந்த ருத்ரலிங்கம். பஞ்சபாண்டவர்களுக்கு சிவபெருமான் நந்திதேவருடன் அருள்செய்தயிடம். சாளுக்கிய மன்னரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் வேப்ப மரமும், அத்தி மரமும் சிறப்புற்று விளங்குகிறது.
5.கிருஷ்ணநந்தி (எ)விஷ்ணுநந்தி
நந்தியால் என்றயிடத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு சிவபெருமானை தவமிருந்து வழிபட்டயிடம். நந்தியம்பெருமானுடன் காட்சி கொடுத்தயிடம். இந்த கோவில் இயற்கை சூழலில் மிக ரம்யமாக காட்சி கொடுக்கிறது. புகைப்படங்கள் உங்களுக்கு கூறும்.
6.கருட நந்தி
மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் அவரின் தாய்க்கு அமிர்தம் கிடைக்க மகாதேவனை இந்தயிடத்தில் வேண்டி தவம் செய்தார். கருடனுக்கு நந்தியுடன் அருள் செய்ததேயிந்தயிடம். இந்த கோவில் மகாந்தி கோவிலுக்கு வெளியில், மிக அருகில் அமைந்துள்ளது.
7.விநாயகநந்தி (Cell Phone Not allowed inside the Nandhiyal Temple)
விநாயபெருமான் சிவனைநோக்கி தவம் செய்து அருள் பெற்றயிடம். நந்தியுடன்கூடிய லிங்கமானது, மகாநந்தி கோவிலின் உட்பகுதியில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
8. மகாநந்தி (Cell Phone Not allowed inside the Nandhiyal Temple)
நந்தா என்ற அரசனால் கட்டப்பட்ட கோவில். இந்த மன்னன் பஞ்சபாண்டவர்களின் வழிதோன்றல். விக்ரம சோழனாலும் இந்தயிடம் ஆளப்பட்டிருக்கிறது. கோவில் மண்டபம் மற்றும் கோபுரம் விக்ரம சோழனால் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசராலும் இக்கோவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ருத்ரகுணடம்
இது இறைவனின் புஷ்கரனியாக உள்ளது. அந்த குளத்தின் நடுவிலிருக்கும் சுயம்புலிங்கங்கள் பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கியது.
விஷ்ணுகுண்டம் மற்றும் பிரம்ம குண்டம்.
முதல் சுற்றில் அமைந்திருக்கும்; இந்த இரண்டு குளங்களிலும் பக்தர்கள் நீராடிய பின் இறைவழிபாடு செய்கின்றனர். விஷ்ணுகுண்டத்தில் பெண்களும், பிரம்ம குண்டத்தில் ஆண்களும் நீராடுகின்றனர். மிக குறைந்த ஆழத்தில் அமைந்துளள்ளது. இந்த குளங்கள். நீர் பளிங்கு போன்ற மிக தூய்மையாகவுள்ளது.
9. சூர்யநந்தி
நந்தியால் நகரத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியன் தவமிருந்து சிவபெருமானின் ஆசியை நந்திதேவருன் சேர்ந்து பெற்றயிடம். தினமும் சூரியஉதயத்தின் சமயத்தில் ஒளிக்கதிர் கோவில்லிங்கத்தின் மீது விழுகிறது.
இந்த வரிசையில் ஒன்பது சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால், பிறவா பெருநிலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. மகாந்தி மட்டுமே பிற மாநிலமக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. ஒன்பது லிங்கங்களுமே சுயம்பு. இந்த நவநந்திகளை தரிசனம் செய்வதற்கு முன்பு விநாயகரை வழிபட வேண்டும் என்று. ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றார், நாங்கள் தரிசனத்திற்காக அமர்திய ஆட்டோ ஓட்டுனர். (இந்த கோவிலும் சிவன் கோவில்தான். விநாயகர் சன்னதி தனியாக உள்ளது.) இந்த ஒன்பது இடங்களையும் தரிசனம் செய்த பிறகு மீண்டும் இதே கோவிலுக்கே வந்து, விநாயகரை வணங்கி நமது நவநந்தி தரிசனத்தை நிறைவு செய்யவேண்டும், என்று கூறி எங்களை (நாங்கள் வேண்டாம் நேரம் ரொம்ப கடந்து விட்டது என்று கூறியும்) விடாது விநாயகரை வழிபட செய்தார். ஆட்டோ ஓட்டுநர்.
நந்திதேவரின் வரலாறு
சிலாடா என்ற முனிவரின் மனைவிக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. முனிவர் சிவபெருமான நோக்கி தவம் செய்கிறார். அவர் தவத்தின் பயனாக சிவன் தோன்றுகின்றார். இறைவனை பாரத்த மகிழ்சியில் உன்னுடைய தரிசனமல்லாது வேறென்ன வேண்டும் மகாதேவா என்று கூறுகிறார். இறைவனும் அவருக்கு அருள்புரிந்து சென்றவிடுகிறார். இறைவனை தரிசனம் செய்த மகிழ்சியில், குழந்தைவரத்தையே முனிவர் மறந்துவிடுகிறார். பக்தனின் விருப்பத்தை அறிந்த இறைவன் ஒரு ஆண்குழந்தையை அவர்களுக்கு அருளுகிறார். குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்பி;பார்த்த பிறகு தான் இறைவனிடம் குழந்தை கேட்கவே தாம் தவம்புரிந்தது நினைவுக்கு வருகிறது. அவனின் கருணைக்கு நன்றி கூறி இந்த குழந்தையை வளத்துவருகின்றனர். பெற்றோர்கள் போன்றே அந்த மகனும் சிவன் சிந்தையிலேயே வாழுகின்றார். குழந்தை பருவம் கடந்தஉடன் பெற்றோரின் அனுமதியுடன், சிவபெருமானை நோக்கி தவம் செய்கிறார். ஈசன் அந்த இளைஞனிடம் உன்விருப்பம் என்ன என்று கேட்க, நான் உங்களுடனேயேயிருக்க விரும்புகிறேன் என்று கூறியவுடன், பக்தனை நந்தியாக மாற்றி அவரின் வாகனமாக்கி கைலாஷ் மலைக்கு அழைத்து செல்கிறார். இதுவே நந்தியம் பெருமானின் வரலாறாக புராணங்கள் கூறுகின்றன.
பயணஅனுபவம்.
நாங்கள் புட்டபர்த்தி செல்லும்போதே நந்தியால் செல்ல யத்தனித்தோம். அதிக தொலைவு கார் ஒட்டசிரமாகயிருக்கம் என்று, கைவிட்டோம். பெங்களுரில்யிருந்ததால் நந்தியால் பயணம் என்று இரண்டுநாட்கள் திட்டமிட்டு சென்றோம்.



























































No comments:
Post a Comment