வல்லக்கோட்டை முருகன் (தரிசனநாள்-17.3.2026)
அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமைந்துள்ளது.
கோவில் பற்றிய செய்தி
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் ஏழு அடிஉயரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மூலவர் ஏழுஅடி உயரத்தில் உள்ளது மிகவும் அபூர்வமான காட்சி. கணபதி, உற்சவர், அம்மன் என்று பிற சன்னதிகளும் உள்ளன.
கோவில் புராணம்.
இலஞ்சி தேசத்தில் சங்கொண்டபுரம் என்றயிடத்தை பகீரதன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். மன்னனை காண நாரதமுனிவர் சென்றார். ஆனால் மன்னன் நாதரரை அலட்சியம் செய்தான். இதன் காரணமாக கோபம் கொண்ட நாரத மகரிஷி கோரன் என்ற அசுரனிடம், நீ பலநாடுகளையும் வென்று சிறப்புமிக்க வீரனாக உள்ளாய். இலஞ்சை நாட்டையும் வென்று விட்டால். உன்னைவிட சிறந்த வீரனிருக்க முடியாது என்று அவனை தூண்டிவிடுகிறார். கோரன் என்ற அசுரனிடம் பகீரதன் தோற்று நாடு மற்றும் மக்களையிழந்து காட்டுக்கு செல்கிறான். அவனின் துன்பம் தீர அவர் நாரதமுனிவரை நாடுகிறான். அவர் துர்வாச முனிவரிடம் அனுப்புகிறார். வெள்ளிகிழமையில் பாதிரி மரத்தடியில் உள்ள முருகபெருமானை வழிபட்டு, மீண்டும் வளமை அனைத்தையும் பெறுகிறார் அரசன் பகீPரதன். இந்த மன்னன் கட்டியதே இந்த வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.
ஆலயம் சிறப்பு
அருணகிரிநாதரால் ஏழு திருப்புகழ் பாடல்கள் பாடபெற்ற தலம்.
பயண அனுபவம்
நாங்கள் முன்பேயிந்த ஆலயத்தை தரிசனம் செய்திருந்தாலும். வல்லக்கோட்டையுடன், அருகிலிருந்த சில ஆலயங்களுக்கு செல்ல பல முறை திட்டமிட்டு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றும் எங்களின் தொடர் பயணம் காரணமாக 17. 3 அன்று என்னுடைய பிறந்தநாள் வழிபாட்டிற்காக, இந்த ஆலயம் மட்டும்; வழிபட்டு திரும்பினோம்.






No comments:
Post a Comment