யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

 யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026)


அமைவிடம்

ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள குகை. பங்கனப்பள்ளியில்லிருந்து,14 கி.மீ. தொலைவில்லுள்ள இந்த குகைக்கு பொது வாகனங்களும் அதிகமாக கிடைக்கும்.

யாகந்தி குகை பற்றிய தகவல்கள்.

யாகந்தி உமாமகேஸ்வரர் கோவில் தான் பிராதனாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாள், வீர பிரம்மேந்தி சுவாமிகள், அகத்தியர் இவர்களுக்கு தனி தனியாக 200 படிகட்டுகள் உயரத்தில் குகை கோவில்கள் உள்ளன. 

கோவில்காலம்.

15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசின் சங்கம வம்சத்தின் ஹரிஹர புக்க ராயரால் கட்டப்பட்ட கோவில். வைணவ முறைப்படி கட்டப்பட்ட கோவில். 

கோவில் புராணம்

அகத்தியர் பெருமாளுக்கு கோவில் கட்ட நினைத்து பெருமாளின் சிலை வடிக்கிறார். அந்தசிலையில் குறைபாடு ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இதனால் மனம் வருந்தி சிவனை நினைத்து தவம் மேற்கொள்கிறார். சிவபெருமான் இது விஷ்ணுவுக்கு ஏற்றயிடம்யில்லை என்று கூறுகிறார். அகத்தியர் மக்களின் நன்மைக்காக உமையுடன்யிங்கு எழுந்தருள வேண்டுகிறார.; இதனால் இத்தலஇறைவன் அர்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். 

கோவில்குளம்

மலை அடிவாரத்திலிருந்து வரும் நீர்,  கோ முகத்திலிருந்து வருவது போன்றஅமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் குளித்துபின்பே பக்தர்கள் இறைவழிபாட்டிறக்கு செல்கின்றனர்.

அகத்தியர குகை

செங்குத்தாக 200 படிகட்டுகள் கடந்து இந்த குகையை அடைய வேண்டும். லிங்கரூபமே பிரதானமாக உள்ளது.

வெங்கடேஸ்வரர் குகை

வெங்கடேச பெருமாள் சிலையுள்ளது. இங்கு தரிசனம் செய்து, பின்னர் அகோபிலம் மற்றும் திருப்பதி கோவில்கள் உள்ள திசைபக்கமாக திரும்பி வணங்க சொல்கிறார். பட்டாச்சாரியார். திருப்பதி மற்றும் அகோபில தரிசன பலனும் கிடைக்குமாம். (அகோபிலம் என்னுடைய வலைபதிவுள்ளது) . திருப்பதி கோவிலை விட இந்த வெங்கடேசபெருமாள் காலத்திற்கு முந்தையவர்.

வீரபிரம்மேந்திரர் குகை.

இந்த குகை உயரம் மிக குறைவாக உள்ளது. இடுப்பு பகுதிவரை குனிந்தே செல்ல வேண்டும். அமர்ந்து நாங்கள் சிறிது நேரம் வழிபட்டோம். இவர் எழுதிய “காலஞானம்” என்ற நூலில், இந்தயிடம் திருப்பதிக்கு  மாறாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாகந்தி நந்தி

சிவன் கோவிலில்யிருக்கும் நந்தியானது மிக குறைந்த அளவில் வளர்கிறதாம். இந்த நந்தி உயிர்பெரும் நேரம் கலியுகம் முடியும் என்று வீரபிரம்மேந்திர் அவர்களின் “காலஞானம்”; என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
































 








அருந்ததி அரண்மனை

அருந்ததி என்ற திரைபடத்தில் வந்த அரண்மனை. பங்கனப்பள்ளி – யாகந்திகுகை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஏற்கனவேயிருந்த சிறிய அரண்மனை பாழடைந்துள்ளது. சினிமாவிற்காக மேலோட்டமாக சீர்செய்துள்ளனர். இதை காண நுழைவுக்கட்டணம் 20ரூ. ஒரு சிறிய ராணியின் அரண்மனை என்றும் , இன்றவும் இந்த ஊர் மக்கள் ராணியின் தெவச திதியை கலை விழாவாக கொண்டாடுகின்றனர். என்று ஆட்டோ ஓட்டுனர் கூறினார். இவர் இந்த ஊரை சேர்ந்தவராம்.















வீர பிரம்மேந்திரர் சமாதி

யாகந்தி குகைக்கு போகும் வழியில் இவரின் வீடு அல்லது சமாதியிடம் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் வாழ்கை வரலாறு சித்திரமாக்கப்பட்டுள்ளது. ஆட்ரோஓட்டுநர் எங்களை அழைத்துசென்றார். இங்கு பக்தர்களுக்கு உணவளிக்கின்றனர். புகைப்படங்கள் மற்றும் கானொளி வெளியிடுகிறேன்.

பயணஅனுபவம்.


Nandyal Railway Station

நாங்கள் 25 ஆம் தேதி இரவு 10.50 மணி; புகைவண்டியில் பயணமுன்பதிவு செய்திருந்தோம். நந்தியால் - பெங்களுர்செல்ல. இந்த நாளைக்கு நாங்கள்; பயணமாக மூன்று இடத்தை தீர்மானித்திருந்தோம்;. 1. கந்திகோட்டா, 2.பெலும் கேவ், 3. யாகந்தி கேவ். கந்திகோட்டா அதிக தொலைவு, நேரத்திற்குள் திரும்ப முடியாது. யகாந்தி மற்றும் பெலும் இரண்டும், பங்கனப்பள்ளியிலிருந்து இருவேறு திசையில்யிருந்தது. நாங்கள் யகாந்தி கேவ் என்ற முடிவு செய்து, பங்கனப்பள்ளிக்கு நந்தியால்லிருந்து பேருந்தில் பயணம் செய்து. ஷேர் ஆட்டோவில் செல்ல , ஷேர் ஆட்டோவில் அமர்ந்துவிட்டோம். அப்பொழுது இரண்டு பெண்கள் பெங்களுரில் வேலை செய்வதாகவும், விடுமுறை நாட்களில் ஆந்திரமாநிலத்ததை சுற்று பயணம் செய்வதாகவும் கூறினார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ஆட்டோவை பிடித்து, பெலும் கேவ், யகாந்தி கேவ், அருந்ததி அரண்மணை என்று பயணம் செய்துவிட்டு, பங்கனப்பள்ளியிலிருந்து, நந்தியால் ரயில்நிலையத்தை அடைந்தோம்.


































No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...