அமராவதி (தரிசனநாள்-5.11.2025) நாள்- ஒன்று.
ஊர்பற்றி அறிவோம்
ஆந்திரமாநிலம் தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் என்று இரண்டாகபிரித்தவுடன் , ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகரமாகவும், அமராவதி என்ற ஊர் ஆந்திராவின் தலைநகரமாக அறிவித்துள்ளது. இந்த ஊர் குண்டுரிலிருந்து 40 கி;மீ. தொலைவில்லுள்ளது.
பஞ்சராமஷேத்ரங்கள்
ஆந்திர மாநிலத்தில் பஞ்சராமஷேத்ரங்கள் என்ற ஐந்து ஷேத்ரங்கள் (கோவில்கள்) சிவன்கோவிலாக சிறப்புற்று விளங்குகிறது. அதில் இந்த அமராவதியும் (அமராராமம்) ஒன்று. பாலாசாமுண்டா சமேத அமரலிங்கேஸ்வரராக இத்தலத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் கிருஷ்ணாநதியின் தென்கரையில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு
இங்குள்ள சிவலிங்கமானது 15 அடி உயரம் கொண்டது. இந்த லிங்கத்தின் மேற்கு பகுதியில் சிவப்பு நிறத்தில் கறை போன்று ஒரு திட்டு உள்ளது. இந்த லிங்கம் வளர்ந்துகொண்டே உள்ளது. உயரம் காரணமாக அர்சகர்கள் ஒரு பீடத்தின் மீது நின்றுகொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். இந்த லிங்கத்தின் வளர்சியை தடுப்பதற்காக ஒரு ஆணிஅடித்தனராம். அந்த இடத்திலிருந்து வந்ததே இந்த ரத்தசிகப்பு கறை.
பெயர்காரணம்.
தாரகாசுரன், சிவபெருமானிடமிருந்து பெற்ற வரத்தின் காரணமாக ஆணவம் கொண்டு, தேவர்களையும், முனிவர்களையும் மிகவும் துன்பபடுத்திவந்தான். இதனால் தேவர்கள் இத்தலத்தில்வந்து சிவனிடம் தஞ்சம்புகுந்தனர். அமரதம்மை கொண்ட தேவர்கள் வசித்தஇடமாதலால், இந்த இடம் அமராவதி என்ற பெயர்பெற்றது.
11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலானது, கோட்டா மன்னரகள், விஜயநகரா மன்னனான கிருஷ்ணதேவராயர் இவர்களால் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலின் அடித்தளம் புத்தமத்தின் பிரதிபலிப்பாகவேயுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் வாசிரெட்டி மற்றும் வெங்கடாத்ரி நாயுடு இவர்களின் கொடை மற்றும் முயற்சியால் இந்தாலயம் மேம்படுத்தப்பட்டது.
இங்கு புத்த ஆலயமும் சிறப்புற்று விளங்குகிறது. என்னுடைய விருப்பத்தின்பேரில், இங்குள்ள புத்தமத அருங்காட்சியம் சென்றோம். அன்று வாரவிடுமுறை யாகயிருந்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
குறிப்பு
ஆந்திர மாநிலத்திலுள்ள பஞ்சராமஷேத்ரம் என்பது, ஐந்து சிவன் கோவில்களை குறிக்கிறது. மிகவும் புகழ் பெற்ற இரண்டு தமிழ் செய்திதாள்களில் தவறான செய்திகளே உள்ளது. ஒரு செய்திதாளில் ராமர் தலங்கள் என்றும், மற்றொரு செய்திதாளில் இந்த அமேரஸ்வரர் (லிங்கவடிவம்) , 108 அடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சராமஷேத்ரம் என்பதை இரண்டு ஆண்டுகள் முன்பு எங்களுடன் பஞ்சகேதார் பயணித் ஒரு சிவனடியார், எங்களுக்கு தெரிவித்தார். நாங்கள் தரிசனம் செய்த பிறகு விரிவான பிளாக் எழுதுவேன், பஞ்சராம தலங்கள் பற்றி.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்களின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, ஆம் தேதிஎன்று மூன்று நாட்களும் சில ஆலயங்களை தரிசனம் செய்யதோம்.

















No comments:
Post a Comment