உண்டவல்லி கேவ் (நாள்-7.12.2025) மூன்றாவது நாள்.
அமைவிடம்
டட்டப்பள்ளி மண்டல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் , குண்டுர் மாவட்டம், ஆந்திராவில் உள்ளது.
5 ஆம் நூற்றாண்டில் புத்தமதம் மற்றும் வைணவ கடவுள்களை, இங்குள்ள மலையை குடைந்து, குடவரை கோவில்களாக உருவாக்கியுள்ளனர். இது விஜயவாடாவின் சிறந்த சுற்றறுலா தலமாக உள்ளது. மூன்று அடுக்குகளை கொண்ட இந்தகுகையில். முதல் தலத்தில் சிறிய சிறிய அறைகள் போன்ற இடத்தையும், இரண்டாவது தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள் சிலையும் உள்ளன. ஆஞ்நேயர் மற்றும் சில உருவங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமையாதளால் , கூட்டம் மிக அதிகமாகயிருந்தது. இந்த குகை தொல்லியல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. .
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். (கார்திகைமாத நரசிம்மர் தரிசனம் என்று ஒரு பிளாக் உள்ளது) கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, “பரகாலயாத்ரா” என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7,ஆம் தேதி என்று மூன்று நாட்களும் சில இடங்களை தரிசனம் செய்யதோம்.























No comments:
Post a Comment